காற்று உணர்திறன்

காற்று உணர்திறன் (Air sensitivity) என்ற சொல் பொதுவாக வேதியியலில் காற்றின் பகுதிப் பொருள்களுடன் வேதிச் சேர்மங்களின் வினைதிறன் பற்றி கூறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வினைகள் வளிமண்டலத்திலுள்ள ஆக்சிசன் (O2) அல்லது நீராவியுடன் (H2O)[1] நடைபெறுகின்றன. மேலும் காற்றின் மற்ற பகுதிப்பொருள்களான கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டையாக்சைடு (CO2), நைட்ரசன் (N2) ஆகியவற்றுடனும் வினைகள் நிகழ வாய்ப்புள்ளது.[2]

காற்றில்லா தொழில்நுட்பங்கள்

தொகு
கையுறைப்பெட்டி

காற்று உணர்திறன் கொண்ட சேர்மங்களை கையாளுவதற்காக பல்வேறு காற்று இல்லாத நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கையுறைப்பெட்டி மற்றும் வெற்றிட வாயுப் பன்மடியம் என்ற இரண்டு முக்கிய காற்றில்லா தொழில்நுட்பக் கருவிகள் உள்ளன.[3] கையுறைப்பெட்டி என்பது ஆர்கான் அல்லது நைட்ரசன் போன்ற மந்த வாயுக்களால் நிரப்பப்பட்ட ஒரு பெட்டியாகும்.[4] சாதாரண ஆய்வக உபகரணங்களை கையுறைப்பெட்டிகளில் அமைத்து கையாளலாம். வெற்றிட வாயுப் பன்மடியம் என்பது வெற்றிடம் மற்றும் மந்தவாயு இரண்டையும் பயன்படுத்தும் ஓர் அமைப்பாகும். தேவைக்கேற்றவாறு இக்கருவியில் உள்ள கண்ணாடியைப் பயன்படுத்தி வெற்றிடத்தை உருவாக்கவோ அல்லது மந்த வாயுவை நிரப்பிக்கொள்ளவோ முடியும்.[5]

படத் தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Handling and Storage of Air-Sensitive Reagents பரணிடப்பட்டது 2012-09-28 at the வந்தவழி இயந்திரம், Technical Bulletin AL-134, Sigma-Aldrich
  2. Dr. P. Wipf. "Techniques for handling air and moisture sensitivity" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. W. Bouwkamp, Marco (2008). working with air and moisture sensitive compounds. Stratingh Institute for Chemistry, University of Groningen. pp. 4, 6.
  4. Glove Boxes, The Glassware Gallery
  5. "The Glassware Gallery: Schlenk Lines and Vacuum Lines". www.ilpi.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்று_உணர்திறன்&oldid=4037142" இலிருந்து மீள்விக்கப்பட்டது