காலேசுவர முக்தேசுவர சுவாமி கோயில்

காலேசுவர முக்தேசுவர சுவாமி கோயில் (Kaleshwara Mukteswara Swamy Temple) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் பூபாலப்பள்ளியில் உள்ள காலேசுவரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். [1] [2]

தெய்வம்

தொகு

இது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாக உள்ளது. ஒரே பீடத்தில் இரண்டு சிவலிங்கங்கள் இருப்பதால் இக்கோயில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த லிங்கத்திற்கு சிவன் என்றும் யமன் என்றும் பெயர். மொத்தத்தில், அவர்கள் காலேஸ்வர முக்தேஸ்வர ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார்கள். திரிலிங்க தேசம் அல்லது "மூன்று லிங்கங்களின் தேசம்" என்று குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சிவன் கோவில்களில் காலேஸ்வரம் ஒன்றாகும். [3]

யாத்ரீகர்கள்

தொகு

இந்திய நாட்காட்டியின் கார்த்திகை மாதமான நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை இந்த புனித இடம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. புனித நீராடல்கள் டிசம்பர் 6 முதல் 17 ம் தேதி வரை நடைபெறும். இங்கு நீராடுபவர்கள் முதலில் விநாயகப் பெருமானைத் தரிசித்துவிட்டு, பின்னர் யமனையும், பின்னர் சிவனையும் வழிபடுகிறார்கள்.

தரிசனம்

தொகு

இந்த கோவில் அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.

இங்கு, ஒரு இலட்ச வில்வ இலை பூசைக்கான அணுகல் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே தேவஸ்தான அதிகாரிகளிடம் செய்யும் கோரிக்கையின் பேரில் நடைமுறையில் உள்ளது.

கோயிலுக்குள் இரண்டு வகையான பிரசாதங்கள் உள்ளன: அவை, சித்தரன்னா (புளி சாதம்) மற்றும் இலட்டு (இனிப்பு) ஆகும். காசி போன்ற தலங்களில் இறுதிச் சடங்குகள் செய்வதைப் போன்று இங்கும் செய்வதால் இந்த இடம் மிகவும் பிரபலமானது. இது இந்தியாவின் இரண்டாவது காசி என்று மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. . 19 January 2018. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  2. . 23 July 2017. 
  3. "Kaleshwaram temple to get a makeover".