கால்சியம் சிட்ரேட்டு மாலேட்டு
கால்சியம் சிட்ரேட்டு மாலேட்டு (Calcium citrate malate) C6H7O7)x·(C4H5O5)y·(Ca2+)z என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். நீரில் கரையக்கூடிய கால்சியம் மிகைநிரப்பியாக இது கருதப்படுகிறது. சிட்ரிக் அமிலம் மற்றும் மேலிக்கு அமிலத்தின் கால்சியம் உப்பாக கால்சியம் சிட்ரேட்டு மாலேட்டு கருதப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
142606-53-9 | |
EC number | 604-299-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 86746885 92043277 |
| |
UNII | 4BBS3A53GJ |
பண்புகள் | |
(C6H7O7)x·(C4H5O5)y·(Ca2+)z | |
வாய்ப்பாட்டு எடை | மாறுபடும் |
தோற்றம் | வெண் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கால்சியம் சிட்ரேட்டு மாலேட்டின் உயிரின கிடைக்கும் தன்மை அதன் நீரில் கரையும் மற்றும் கரைக்கும் முறை ஆகியவற்றிலிருந்து உருவாகிறது. இது கரைந்தால் கால்சியம் அயனிகளையும் கால்சியம் சிட்ரேட்டு அணைவுச் சேர்மத்தையும் வெளியிடுகிறது. கால்சியம் அயனிகள் நேரடியாக குடல் உயிரணுக்களில் உறிஞ்சப்படுகின்றன,
கால்சியம் சிட்ரேட்டு மாலேட்டு கால்சியம் மேலேட்டு மற்றும் பிற கால்சியம் உப்புகளைப் போன்றதாகும். ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் கால்சியம் சிட்ரேட்டு மாலேட்டு மற்ற வகை கால்சியம் மிகைநிரப்பிகளை விட "சற்று அதிகமாக உயிரினங்களில் கிடைக்கும்" என்று முடிவு செய்துள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Calcium citrate malate at Jost Chemical
- ↑ "Calcium citrate malate as source for calcium for use in foods for Particular Nutritional Uses and in foods for the general population (including food supplements)" (PDF). The EFSA Journal 612: 1–24. 2007. doi:10.2903/j.efsa.2007.612. http://www.efsa.europa.eu/en/efsajournal/pub/612Scientific Opinion of the Panel on Food Additives, Flavourings, Processing aids and Materials in Contact with food (AFC)