காளி நாத் ராய்
காளி நாத் ராய் (Kali Nath Roy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வங்காள தேசியவாத பத்திரிகையாளர் ஆவார். தி டிரிப்யூன் என்ற செய்தித்தாளின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது மகன் சமரேந்திர நாத் ராய் ஒரு கணிதவியலாளர் மற்றும் பயன்பாட்டு புள்ளிவிவர நிபுணர் ஆவார்.[1]
காளி நாத் ராய் Kali Nath Roy | |
---|---|
কালীনাথ রায় | |
தாய்மொழியில் பெயர் | কালীনাথ রায় |
பிறப்பு | 1878 ஜெசூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது ஜெசூர், வங்காளதேசம்) |
இறப்பு | 9 திசம்பர் 1945 கொல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது கொல்கத்தா, இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுக்காட்டிசு பேராலயக் கல்லூரி |
பணி | பத்திரிகையாளர் |
அறியப்படுவது | தலைமை ஆசிரியர், தி டிரிப்யூன் |
அரசியல் இயக்கம் | இந்திய தேசியம் |
பிள்ளைகள் | சமரேந்திரநாத் ராய்
|
ஆரம்பகால வாழ்க்கை.
தொகுகாளி நாத் ராய் 1878 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஜெசூரில் பிறந்தார். கொல்கத்தா நகரத்தில் உள்ள இசுக்காட்டிசு பேராலயக் கல்லூரியில் படித்தபோது இவர் பிரிட்டிசு எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கல்லூரியை விட்டு வெளியேறினார். சுரேந்திரநாத் பானர்ச்சி தொகுத்த பெங்காலி இதழின் துணை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.[1]
தொழில்
தொகு1911 ஆம் ஆண்டில் 'தி பஞ்சாபி' இதழில் ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் இலாகூரில் இருந்து வெளியிடப்பட்ட டிரிப்யூன் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக ஆனார். பிரித்தானிய காவல்துறையின் அட்டூழியங்கள் மற்றும் இராணுவச் சட்டத்தை தனது கட்டுரைகளில் கண்டித்தார், அத்துடன் பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் வாதிட்டார்.[2] தேசத்துரோக எழுத்துக்களை வெளியிட்டதாக அரசாங்கம் இவரை குற்றம் சாட்டியது. [3] காளி நாத் ராய் தனது அச்சமற்ற, துணிச்சலான கட்டுரைகளால் பிரபலமாக இருந்தார். இதனால் காளி பாபு என்று அழைக்கப்பட்டார்.[4] 1932 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ராயின் அரசியல் எழுத்துக்களைப் பாராட்டினார்.[5][6] 1919 ஏப்ரலில் பிரபலமற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வில் ஆங்கிலேயர்களின் கைகளால் இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, தி டிரிப்யூன் 1919 ஏப்ரல் 6 அன்று "ஜமா பள்ளிவாசலில் பிரார்த்தனை" என்ற தலைப்பில் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. இதற்காக ராய்க்கு இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.[7][8][4] லாகூரைச் சேர்ந்த பெங்காலி வழக்கறிஞர் சுதிர் முகோபாத்யாய் நீதிமன்றத்தில் இவருக்காக வாதிட்டார், மேலும் இந்த வழக்கை நடத்த மக்கள் பணம் சேகரித்துக் கொடுத்தனர். ரவீந்திரநாத் தாகூர் கூட இவரை விடுவிக்க தனிப்பட்ட முறையில் முயன்றார்.[1]
மரணம்.
தொகுஇலாகூரின் கடுமையான குளிர்காலத்தில் ராயின் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. 1945 டிசம்பர் 1 அன்று லாகூரை விட்டு வெளியேறினார், பயணத்தின் போது குளிர்ச்சியால் உறைந்து போனார். 1945 டிசம்பர் 9 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Vol - I, Subodh C. Sengupta & Anjali Basu (2002). Sansab Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0.
- ↑ John L. Hill (7 April 2017). The Congress and Indian Nationalism: Historical Perspectives. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781351979535. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ Horniman, Benjamin Guy (1984). British Administration and the Amritsar Massacre. Mittal Publications. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ 4.0 4.1 Uma Das Gupta (4 January 2018). Friendships of 'Largeness and Freedom': Andrews, Tagore, and Gandhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199091690. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ Vir Bala Aggarwal, V. S. Gupta (2001). Handbook of Journalism and Mass Communication. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170228806. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Babu Kalinath Roy". பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Kali Nath Roy vs The King-Emperor on 9 December, 1920". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Remembering our founder". பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ J. Natarajan (1955). History of Indian Journalism. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788123026381. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.