காவிரி - வைகை நதிகள் இணைப்பு கால்வாய் திட்டம்

காவிரி - வைகை நதிகள் இணைப்பு கால்வாய் திட்டம் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் நதி நீர் இணைப்பு திட்டமாகும்[1][2].

பின்னணி

தொகு

தமிழ்நாடு தனது நீர் தேவைக்குப் பொதுவாக பிற மாநிலங்களையே சார்ந்துள்ளது. காவிரி-வைகை நதிகள் இணைப்பு கால்வாய் திட்டம் வறட்சி காலங்களைச் சமாளிக்க போடப்பட்ட திட்டமாகும்[3][4].

திட்ட குறிப்புகள்

தொகு

காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம் மாயனூர் என்னும் இடத்திலிருந்து வைகை ஆறு வரை 255.6 கி.மீ நீளக் கால்வாய் அமைப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இந்த கால்வாய் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும். ஜூன் 24, 2008 இல், அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சரால் இத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது[5]. இந்த திட்டத்தைச் செயல்படுத்த முதல் கட்டமாக மாயனூரில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Times of India, 16 June 2008
  2. "Tamil Nadu to take up river linking projects". Archived from the original on 2008-03-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
  3. Times of India, 16 June 2008
  4. "Tamil Nadu to take up river linking projects". Archived from the original on 2008-03-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
  5. Project inauguration