காவேரிப்பாக்கம் ஏரி

காவேரிப்பாக்கம் ஏரி என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் இருக்கும் ஒரு ஏரி ஆகும்.

காவேரிப்பாக்கம் ஏரியானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஏரி ஆகும்.[1] இது 3968 ஏக்கர் பரப்பளவுவும், 1,474 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இது பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனால் வெட்டபட்டது.[2] இந்த ஏரியின் உயரம் 30.65 அடி,[3] கரையின் அகலம் 11 அடி (3.5 மீட்டர்), கரையின் நீளம் 8.35 கிலோ மீட்டர் ஆகும். ஏரிக் கரையின் பலத்துக்காக ஏரியின் உள்கரையில் மிகப் பெரிய பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கபட்டுள்ளன.[4] இந்த ஏரியில் 10 மதகுகளும், இரண்டு நீர் வழிந்தோடிகளும் உள்ளன.

இந்த ஏரி பாலாற்றில் இருந்து அமைக்கபட்ட வாய்கால் வழியாக நீரைப் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து 14 கிராமங்களின் 6278 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. இந்த ஏரியின் உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றின் நீராதாரமாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. கோடையிலும் கடல்போல் காட்சியளிக்கும் ஏரி, தினமணி, 2021 ஏப்ரல் 19
  2. பல்லவர் வரலாறு நூல், ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார் அத்தியாயம் 18. பல்லவர் ஆட்சி
  3. "முக்கிய ஆறுகளில் நீர்வரத்து காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 72 ஏரிகள் நிரம்பின: காவேரிப்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  4. "காவேரிப்பாக்கத்தில் 900 ஆண்டுகள் பழமையின் பரிதாபம் 3,968 ஏக்கரில் கடல்போல் காட்சியளித்த ஏரி கட்டாந்தரையாச்சு". www.dinakaran.com. Archived from the original on 2022-01-05. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரிப்பாக்கம்_ஏரி&oldid=4155072" இலிருந்து மீள்விக்கப்பட்டது