காவேரி நம்பீசன்

காவேரி நம்பீசன் (Kavery Nambisan) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் புதின எழுத்தாளர் ஆவார். இவரது தொழில் வாழ்க்கை இவரது புதினத்தில் தாக்கம் செலுத்துகிறது.[1]

காவேரி நம்பீசன்
பிறப்புபலங்காலா, குடகு மாவட்டம், இந்தியா
புனைபெயர்காவேரி பட்
தொழில்அறுவை சிகிச்சை நிபுணர்
மொழிஆங்கிலம், குடகு மொழி
குடியுரிமைஇந்தியன்
கல்வி நிலையம்புனித ஜான் மருத்துவ கல்லூரி, பெங்களூர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தெ ஸ்டோரி மஸ்ட் நாட் பி டோல்ட்
துணைவர்விஜய் நம்பீசன்

வாழ்க்கை

தொகு

காவேரி நம்பீசன் குடகு மாவட்டம் பலங்கலா கிராமத்தில் ஓர் அரசியல்வாதி குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை சி. எம். பூனாச்சா மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார்.[3] இவர் தனது ஆரம்ப ஆண்டுகளை மடிக்கேரியில் கழித்தார்.[2] இவர் 1965 முதல் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார் [4] பின்னர் இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்றார் [5]

நம்பீசன், பத்திரிகையாளரும் கவிஞருமான விஜய் நம்பீசனை மணந்தார்.[5]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

இலக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

கேவரி நம்பீசன் 2005 ஆம் ஆண்டில் கூர்க் பெர்சன் ஆஃப் தி இயர் விருது பெற்றார்.[6]

வெளியீடுகளின் பட்டியல்

தொகு
  • ஒன்ஸ் அபான் எ ஃபாரஸ்ட், குழந்தைகள் புத்தக அறக்கட்டளை, இந்தியா, 1986. (காவேரி பட் என. )
  • கிட்டி கைட், குழந்தைகள் புத்தக அறக்கட்டளை, இந்தியா, 1987. (காவேரி பட் என. )
  • தெ ட்ரூத் அபவுட் பாரத் (அல்மோஸ்ட்), பெங்குயின் இந்தியா, 1991. (காவேரி பட் என. )
  • தெ ஸென்ட் ஆஃப் பெப்பர், பெங்குயின் இந்தியா, 1996.
  • மேங்கோ கல்ர்டு ஃபிஷ், பெங்குயின் இந்தியா, 1998.
  • விங்ஸ் ஆஃப் பட்டர்பிளை, பெங்குயின் இந்தியா, 2002.
  • தி ஹில்ஸ் ஆஃப் ஆங்கேரி, பெங்குயின், 2005.
  • தெ ஸ்டோரி மஸ்ட் னாட் பி டோல்டு, பெங்குயின், 2010.
  • எ டவுன் லைக் எவர், அலெஃப் புக் கம்பெனி, 2014.

சான்றுகள்

தொகு
  1. "Judges for the Hindu Prize 2013". The Hindu. 21 November 2013. http://www.thehindu.com/books/judges-for-the-hindu-prize-2013/article5375517.ece?homepage=true. 
  2. 2.0 2.1 "A surge and a writer". Deccan Herald. 3 January 2006. http://archive.deccanherald.com/Deccanherald/jan32006/spectrum161735200612.asp. 
  3. Vijay Nair (May–June 2011). "Chatting with Kavery Nambisan". Reading Hour 1 (3). http://readinghour.in/content.php?ctype_id=MjI%3D. பார்த்த நாள்: 2021-03-17. 
  4. Carol D'Souza (17 August 2005). "Well Known Author and Rural Surgeon: Kavery Nambisan". Johnite. Archived from the original on 4 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 Nandini Krishnan (4 November 2013). "The doctor is in the house". Fountain Ink. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.Nandini Krishnan (4 November 2013). "The doctor is in the house". Fountain Ink. Retrieved 22 November 2013.
  6. Jeevan Chinnappa (6 January 2012). "P.M. Belliappa is 'Coorg Person of the Year 2011'". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/pm-belliappa-is-coorg-person-of-the-year-2011/article2779554.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_நம்பீசன்&oldid=3928857" இலிருந்து மீள்விக்கப்பட்டது