கா. அப்துல் கபூர்

(கா.அப்துல் கபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர் (1924 - 2002) பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர், இஸ்லாமிய மார்க்க அறிஞர், பத்திரிகையாளர், பன்மொழி வல்லுனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1924-ல் பிறந்தவர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 2002-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி மறைந்தார்.

சென்னை முஹம்மடன் கல்லூரியிலும் (தற்போதைய காயிதே மில்லத் மகளிர் கல்லூரி), வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியிலும் தமிழ்த் துறையில் பணியாற்றியவர்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் தமிழ்துறைத் தலைவராகவும், உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி, அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர்.

சென்னை கிரஸண்ட் பள்ளியின் (பிறைப் பள்ளி) நிறுவன முதல்வர்.

அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளனர். 'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின் 87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்தது. "ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது.

இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பேராசிரியர் கா. அப்துல் கபூர் கல்விப் பணி:

1946 - 1947 பேராசிரியர், தமிழ்த்துறை, முஸ்லிம் அரசினர் கல்லூரி, சென்னை

1947 - 1952 தமிழ்த்துறைத் தலைவர், இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி

1952 - 1956 கீழ்த்திசை மொழித்துறைத்தலைவர், ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி

1956 - 1962 தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், ஹாஜி கருத்த இராவுத்தர் கெளதிய்யா கல்லூரி, உத்தம பாளையம்

1962 - 1967 தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர், காதிர் முஹ்யத்தீன் கல்லூரி, அதிராம்பட்டினம்

1967 - 1974 முதல்வர், பிறைப் பள்ளி, வண்டலூர், சென்னை

1976 - 1980 நிர்வாக அதிகாரி, அல்-அமீன் உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம்

நிர்வாக அதிகாரி, திராவிட மொழி இயல் நிறுவனம், திருவனந்தபுரம்

வகித்த பிற பொறுப்புகள்:

1. தமிழ்ப் புலவர்க்குழு உறுப்பினர்

2. மதுரை, தஞ்சை மாவட்ட இலக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்

3. திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைகுழு உறுப்பினர்

4. சென்னை பல்கலைக்கழக பாடநூல் உறுப்பினர்

சிறப்பாசிரியர்:

மதிநா (சிற்றிதழ்)

நூல் வரிசை:

கவிதை

1. நாயகமே

2. அன்னை பாத்திமா

3. நபிமணி மாலை

4. இறையருள் மாலை

5. நபிமொழி நானூறு

6. பொன்மொழி நானூறு

8. காஜா மாலை

9. பீரப்பா மாலை

10. முஹ்யித்தீன் மாலை

11. தலைப்பா (கவியரங்கக் கவிதைகள்)

12. துஆ - 100 (பிரார்த்தனைப் பாடல்கள்)

உரை நடை

1. இலக்கியம் ஈந்த தமிழ்

2. அற வாழ்வு

3. வாழும் நெறி இஸ்லாம்

4. இஸ்லாமிய இலக்கியம் 5 இனிக்கும் இறைமொழிகள்

6. மிக்க மேலானவன்

குழந்தை இலக்கியம்

1. அரும் பூ

மேல் விவரங்களுக்கு: http://gafoorsahib.blogspot.com

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._அப்துல்_கபூர்&oldid=3138625" இலிருந்து மீள்விக்கப்பட்டது