கா. தி. முதலியார்

திவான் பகதூர் காஞ்சிபுரம் திருவேங்கட முதலியார் (Kanchipuram Thiruvenkata Mudaliar) (பிறப்பு 1901 அல்லது 1902) ஓர் இந்தியத் தாவரவியலாளரும் மற்றும் அரசு ஊழியரும் ஆவார். இவர் 1949 முதல் 1950 வரை கூர்க் மாநிலத்தின் தலைமை ஆணையராக பணியாற்றினார். கேட்டொலி செங்கப்பாவிற்குப் பிறகு இந்த பதவியை வகித்த இரண்டாவது இந்தியர் இவர். மேலும் கூர்க் இந்திய ஒன்றியத்தின் பகுதி-சி மாநிலமாக சேர்க்கப்படுவதற்கு முன்பு கடைசியாக பணியாற்றினார்.

Diwan Bahadur
காஞ்சிபுரம் திருவேங்கட முதலியார்
கூர்க் மாகாணத்தின் தலைமை ஆணையர்
பதவியில்
மார்ச் 1949 – 1950
முன்னையவர்கேட்டொலி செங்கப்பா
பின்னவர்தயா சிங் பேடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1901 or 1902
காஞ்சிபுரம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
துணைவர்யசோதா
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
தொழில்தாவரவியல், அரசு ஊழியர்

சொந்த வாழ்க்கை

தொகு

முதலியார் 1901 அல்லது 1902 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் நகரில் இராமானுஜர் முதலியார் என்பவருக்கு பிறந்தார். நீதிபதி ஜம்புலிங்க முதலியாரின் மகள் திலகவதி என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர்.

பின்னர் இவர் திலகவதியின் சகோதரி ராதாபாயை மணந்தார்.

கூர்க்கின் தலைமை ஆணையராக

தொகு

முதலியார் மார்ச் 1949 இல் கூர்க்கின் தலைமை ஆணையரானார். முதலியார் தனது பதவிக்காலத்தில், கூர்க்கின் முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை மடிக்கேரியில் திறந்து வைத்தார்.

மேற்கோள்கள்

தொகு
  • "Commissioner Of Gift-Tax vs C. Thiruvenkata Mudaliar on 13 July, 1976". Indian Kanoon.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._தி._முதலியார்&oldid=4013878" இலிருந்து மீள்விக்கப்பட்டது