தயா சிங் பேடி

பிரித்தானிய இந்திய இராணுவ அதிகாரி (1899–1975)

தூதர் லெப்டினன்ட்-கர்னல் பாபா தயா சிங் பேடி (Baba Daya Singh Bedi) (1899 – 1975) ஓர் இந்திய இராஜதந்திரியும், இந்திய ஆட்சிப் பணி பணியாளரும் மற்றும் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குதிரைப்படை அதிகாரியும் ஆவார். 1948 முதல் 1951 வரை ஆத்திரேலியாவுக்கான முதல் உயர் ஆணையராகவும் [1] மற்றும் 1951 முதல் 1956 வரை கூர்க் மாநிலத்தின் தலைமை ஆணையராகவும் இருந்தார்.

தூதர் லெப்டினன்ட்-கர்னல் பாபா தயா சிங் பேடி
கூர்க் மாநிலத்தின் தலைமை ஆணையர்
பதவியில்
1951–1956
முன்னையவர்கா. தி. முதலியார்
பின்னவர்பதவி உருவாக்கப்ப்ட்டது
 இந்தியா ஆத்திரேலியாவிற்கான இந்தியத் தூதர்
பதவியில்
1948–1951
இந்தியக் குடிமைப் பணி
பதவியில்
1937–1948
இந்திய அரசியல் பணி
பதவியில்
1928–1937
 பிரித்தானிய இந்திய தரைப்படை
பதவியில்
1921–1928
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 ஜனவரி 1899
கல்லார், இராவல்பிண்டி
இறப்பு1975
துணைவர்பீபி ஆனந்த் கௌர் தால்
பிள்ளைகள்திக்கா அரிதாமான் சிங் பேடி, பீபி மன்மோகினி குமாரி, பீபி ஷீலா குமாரி
தொழில்இராணுவம், இந்தியக் குடிமைப் பணி மற்றும் வெளியுறவுப் பணி

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தயா சிங் பேடி (1899-1975)[2][3] பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குடன் இருந்த[4][5] சீக்கிய ஆன்மீக மற்றும் அரசியல் தலைவரான ராஜா சர் குர்பக்சு சிங் பேடிக்கு மகனாகப் பிறந்தார்.[6] தயா சிங் பேடி பீபி ஆனந்த் கௌர் தால் என்பவரை மணந்தார்.[7]

தொழில் வாழ்க்கை

தொகு

பேடி ஜூலை 1921 இல் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் செப்டம்பர் 1928 இல் இந்திய அரசியல் சேவைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு லெப்டினென்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின்னர் 1947 ஆம் ஆண்டில் நேபாளத்தில் இவர் பணியாற்றியபோது இவருக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.

இவர் 1928 முதல் 1937 வரை அரசியல் முகவராக (1931, தென் மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியா) / துணைச் செயலாளர் (1932, மேற்கு இந்தியாவின் மாநிலங்கள்) / இராஜபுதனம் (1933), திருவிதாங்கூர் (1935) மற்றும் ஒரிசா மாகாணம் (1937) ஆகிய இடங்களில் உதவி ஆணையராக பணி நியமனம் பெற்றார். மேலும் 1935இல் குவெட்டாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு புனரமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டார்.

இந்திய சுதந்திரத்தின் போது, பேடி புதிதாக உருவாக்கப்பட்ட வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகளின்ன் உறவுகள் அமைச்சகத்தில் சேர்ந்தார். பின்னர் அது வெளியுறவுத் துறை அமைச்சகம் என்று மறுபெயரிடப்பட்டது. இவர் பிரிட்டன்-இந்தியா-நேபாள முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[8] அடுத்த ஆண்டு 1948 இல் இவர் ஆத்திரேலியாவுக்கான இந்திய உயர் ஆணையராக நியமிக்கப்பட்டு அங்கு 1951 வரை பணியாற்றினார்.[9] இந்தியா திரும்பியதும், கூர்க் மாநிலத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் 1956 வரை பணியாற்றினார். பின்னர் மாகாணம் கலைக்கப்பட்டு அண்டை மாநிலமான மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இறப்பு

தொகு

ஓய்வு பெற்ற பிறகு, பாபா தயா சிங் பேடி சூபித்துவக் கவிதைகளில் கவனம் செலுத்தினார். இவர் 1975 இல் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Previous High Commissioners - About High Commission - The High Commission of India in Australia". Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2015.
  2. "The India Office and Burma Office List". 1922.
  3. "Indian states since 1947".
  4. Muzammil Shah. "The Sikh palace of Kallar Syedan".
  5. "The Sikh Foundation - Sikh Arts and Heritage".
  6. Puri, Kailash; Nesbitt, Eleanor (October 2013). Pool of Life. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845196028.
  7. "The Guru Nanak trail goes cold". The Times of India.
  8. "British Gurkha Mission to Nepal photograph album".
  9. "Current Notes on International Affairs". 1948.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயா_சிங்_பேடி&oldid=4013782" இலிருந்து மீள்விக்கப்பட்டது