கேட்டொலி செங்கப்பா

இந்தியக் குடிமைப் பணி அதிகாரி

திவான் பகதூர் கேட்டொலி செங்கப்பா (Ketoli Chengappa) ஓர் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும் மற்றும் நிர்வாகியும் ஆவார். இவர் 1943 முதல் 1949 வரை கூர்க் மாநிலத்தின் தலைமை ஆணையராக பணியாற்றினார்.

கேட்டொலி செங்கப்பா
Ketolira Chengappa
கூர்க் மாகாணத்தின் தலைமை ஆணையர்
பதவியில்
26 ஏப்ரல் 1943 – மார்ச் 1949
முன்னையவர்ஜே. டபிள்யு. பிரிட்சர்டு
பின்னவர்கா. தி. முதலியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 மார்ச் 1878
இறப்பு1963
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

செங்கப்பா 1878 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி நபோக்லு, கபினகாட்டில் உள்ள யவகபாடி கிராமத்தைச் சேர்ந்த கேட்டொலி முத்தையா (கிராம அதிகாரியாக பணிபுரிந்தவர்) மற்றும் பொல்லியாவ்வா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1893ஆம் ஆண்டில் தனது மெட்ரிகுலேசன் கல்வியை முடித்தார். அதன்பிறகு, இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணித் தேர்வை முடித்தார்.

தொழில் வாழ்க்கை

தொகு

செங்கப்பா 1909இல் ஒரு பர்பதிக்காரராக சேவையில் சேர்ந்தார். 1916இல் உதவி ஆணையராக உயர்ந்தார். 1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1935இல் கூர்க் மாநிலத்தின் ஆணையராக சேர்ந்த பிறகு, 1942இல் கூர்க்கில் தேசிய போர் முன்னணியின் தலைவராக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, இவர் ஏப்ரல் 26,1943 முதல் மார்ச் 1949 வரை கூர்க் மாகாணத்தின் தலைமை ஆணையரானார். இவரது சிறந்த சேவைக்காக, செங்கப்பாவுக்கு திவான் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1923 இல் கௌரவ லெப்டினன்ட்டாகவும் நியமிக்கப்பட்ட இவர் 1928 இல் பதவியை விட்டு விலகினார்.

1920களில் இந்திய காப்பி செஸ் குழுவை அமைக்க செங்கப்பா உதவினார். இது பிரித்தானியர் நடத்தும் அனைத்து தோட்டங்களும் "ஒருங்கிணைந்த காப்பி" என்ற பெயரில் ஒரு தனியார் கூட்டமைப்பை உருவாக்க உதவியது. இந்தியக் காப்பி விடுதியின் தொடர் நிறுவனங்கள் 1936 ஆம் ஆண்டு காப்பி செஸ் குழுவால் (Coffee Cess Committee) ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது இந்திய இந்தியக் காப்பி விடுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இத்தொழிலாளர்கள் இணைந்து ‘இந்தியத் காப்பித் தொழிலாளர்கள் கூட்டுறவு’ என்ற அமைப்பைத் தொடங்கினர். பின்னர் நாடு முழுவதும் இதற்குக் கிளைகள் தொடங்கப்பட்டன. 1958 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாண்டிச்சேரி, திருச்சூர், லக்னோ, ஜபல்பூர், மும்பை, கொல்கத்தா, தலச்சேரி மற்றும் புனே ஆகிய இடங்களில் இந்தியக் காப்பி விடுதி திறக்கப்பட்டது. கேரளாவில்தான் அதிகபட்சமாக 51 இந்தியக் காப்பி விடுதிகள் அமைந்துள்ளன.[1]

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்

தொகு

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மடிக்கேரியின் கோட்டையில் இந்திய மூவண்ணக் கொடியை ஏந்திச் சென்ற செங்கப்பா, அப்போதைய கூர்க் மாகாணத்தில் நடந்த விழாவில் பிரித்தானியக் கொடியை கீழே இறக்கி இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

செங்கப்பாவின் மகன் கேப்டன் கே. சி. மேடப்பா, பெங்களூர் பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவரும், எல்லைப்புற படை படைப்பிரிவில் அதிகாரியாகவும் இருந்தார். அவர் டிசம்பர் 16,1941 அன்று மலாயாவில் சப்பானிய படையெடுப்பின் போது கொல்லப்பட்டார்.[2]

இறப்பு

தொகு

செங்கப்பா 1963ஆம் ஆண்டில் தனது 85வது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-24. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.
  2. Aditya Sondhi (2014). Cottons in the Second World War. {{cite book}}: |work= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்டொலி_செங்கப்பா&oldid=4013893" இலிருந்து மீள்விக்கப்பட்டது