கா. ர. ஜெயராம்

இந்திய அரசியல்வாதி

கா. ர. ஜெயராம் (Jayaram K R) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர், விளாங்குறிச்சியில் வசித்து வருகின்றார். ஜெயராம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர் கோயம்புத்தூர் நகர எம். ஜி. ஆர். இளைஞர் அணித் தலைவர் ஆவார். இவரது முழு பெயர் காளியப்ப கவுண்டர் ரங்கசாமி ஜெயராம் என்பதாகும்.[2] இவர் மே 2021-ல் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் முன்னதாக 2011 முதல் 2016 கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கும் மண்டலத் தலைவராகவும், 2006 முதல் 2011 வரை சர்க்கார் சாமகுளம் ஒன்றிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கா. ர. ஜெயராம்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை சிங்காநல்லூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி, சமூகசேவகர், உணவக உரிமையாளர்

மேற்கோள்கள் தொகு

  1. "Jayaram, K.R(AIADMK):Constituency- SINGANALLUR(COIMBATORE) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. Bureau, ABP News (2021-05-02). "Singanallur Tamil Nadu Election 2021 Final Results LIVE:AIADMK Candidate Jayaram K.R wins from Singanallur, Details Inside". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. "Jayaram K R | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._ர._ஜெயராம்&oldid=3943390" இலிருந்து மீள்விக்கப்பட்டது