கிண்டன் வானூர்தி நிலையம்
கிண்டன் வானூர்தி நிலையம் (Hindon Airport) என்பதுஉத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு பொது என்க்ளேவ் என்றும் சொல்லப்படுவது. இது இந்திய வான்படையின் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் வானூர்தி நிலையமாகும்.[1][2] இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குப் பிறகு தேசிய தலைநகர் வலயத்தின் இரண்டாவது வணிக வானூர்தி நிலையமாகும்.[3] இந்த விமான நிலையம் வட்டார இணைப்புத் திட்டம் -உடான் கீழ் இயங்கும் விமானங்களைக் கையாள கட்டப்பட்டது. எனவே டெல்லியின் பிரதான விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமானங்களின் நெரிசலால் ஏற்படும் சுமையைக் குறைக்கிறது. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி,இந்த விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமானங்களை இயக்கும் இரண்டு விமான நிறுவனங்கள் உள்ளன.
கிண்டன் வானூர்தி நிலையம் Hindon Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | இந்திய வான்படை | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | தேசிய தலைநகர் வலயம் (இந்தியா) | ||||||||||
அமைவிடம் | காசியாபாத், இந்தியா, உத்தரப் பிரதேசம் | ||||||||||
உயரம் AMSL | 700 ft / 213.4 m | ||||||||||
ஆள்கூறுகள் | 28°42′21″N 77°20′32″E / 28.7057898°N 77.3421373°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (அக்டோபர் 2019 - திசம்பர் 2019) | |||||||||||
|
வரலாறு
தொகு2017ஆம் ஆண்டில், பொது விமான போக்குவரத்து அமைச்சகம் ஐ.ஏ.எஃப் உடன் கிண்டனில் ஒரு பொது என்க்ளேவ் என்ற யோசனையை முன்னெடுத்தது. ஏனெனில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நேரக் கட்டுப்பாடு காரணமாக யுடான் எனப்படும் வட்டார இணைப்புத் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. கிண்டன் பொது என்க்ளேவ் பின்னர் தேசிய தலைநகர் பகுதியில் உடானின் கீழ் இயங்கும் விமானங்களுக்கான இரண்டாவது விமான நிலையமாக மாறும். தில்லி விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ தூரத்திற்குள் உள்ள ஒர் விமான நிலையத்திலிருந்து வணிக விமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படவில்லை என்று அரசாங்கத்திற்கும் டெல்லி பன்னாட்டு வானூர்தி நிலைய லிமிடெட் (டயல்) இடையே ஒப்பந்தத்தின்படி கையெழுத்து இடப்பட்டுள்ளது. எனவே, கிண்டனைத் தற்காலிகமாகப் பயன்படுத்த டயல் நிறுவனத்திடம் அனுமதி கோரி, மோகா ஒரு திட்டத்தை முன்வைத்தது. செப்டம்பர் 2017இல் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. செப்டம்பர் 2022இல் டெல்லி விமான நிலையத்தின் விரிவாக்கம் நிறைவடையும் போது, அனைத்து உதான் நடவடிக்கைகளும் டெல்லி விமான நிலையத்துடன் இணைக்கப்படும். ஆகஸ்ட் 2017இல் பொது நடவடிக்கைகளுக்கு விமான தளத்தைப் பயன்படுத்த இந்திய விமானப்படை பொது விமான போக்குவரத்து அமைச்சகத்தை அனுமதித்தது. இந்த திட்டத்திற்கான உத்தரப்பிரதேச அரசு மார்ச் 2018இல் ஒப்புதல் அளித்தது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ஆகஸ்ட் 2018இல் முனையத்தை நிர்மாணிக்கத் தொடங்கியது. மாதிரி நடத்தை விதிக்குச் சற்று முன்னதாக 2019 மார்ச் 08 அன்று ₹ 40 கோடி செலவில் கட்டப்பட்ட பயணிகள் முனையத்தைப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.[4]
2019 மார்ச் 15 முதல் கிண்டனிலிருந்து விமானங்களை இயக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விமானம் இயக்கும் நேரம் தொடர்பாக இந்திய விமானப்படையுடன் நடந்த விவாதங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்ததால், விமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான நாள் அக்டோபர் 2019க்கு தள்ளி வைக்கப்பட்டது. கிண்டனிலிருந்து முதல் வணிக விமானம் 11 அக்டோபர் 2019 அன்று புறப்பட்டது. யுடான் திட்டத்தின் கீழ் ஹெரிடேஜ் ஏவியேஷனால் இயக்கப்படும் பீச் கிராஃப்ட் கிங் ஏர், ஒன்பது பயணிகளுடன் பித்தோராகர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டது. விமான நிலையத்தை நிரந்தரமாக்குவது குறித்து மாநில அரசும் ஏ.ஏ.ஐ யும் பரிசீலித்து வருவதாக 2019 மே மாதம் தெரிவிக்கப்பட்டது.[5]
அமைப்பு
தொகுவிமான நிலையத்தை ஒட்டியுள்ள சாஹிபாபாத்தில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தில் 7.5 ஏக்கர் பரப்பளவில் இந்த உறைவிடம் கட்டப்பட்டுள்ளது. முனையக் கட்டிடம் எட்டு சோதனை அறைகள் கொண்ட முன் வடிவமைக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட கட்டமைப்பாகும். முனையம் 5,425 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளுக்குச் சேவை செய்யும் திறன் கொண்டது. வாகன நிறுத்துமிடத்தில் 90 வாகனங்கள் வரை நிறுத்த இயலும். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை இந்திய வான்படை வழங்கும்.[6] முனையம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. உத்தரப்பிரதேச அரசு இணைப்புச் சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.
விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஸ்டார் ஏர் (இந்தியா) | ஹூப்ளி, காலபுராகை |
அணுகல்
தொகுகிண்டன் வானூர்தி நிலையத்தின் பொது என்க்ளேவிலிருந்து 5 கி.மீ தூரத்தில் தில்ஷாத் கார்டன் மற்றும் மேஜர் மோஹித் சர்மா ராஜேந்திர நகர் மெற்றோ நிலையம் [ரெட் லைன்] அமைந்துள்ளன. டெல்லி மெற்றோவின் இளஞ்சிவப்பு வரிசையில் அமைந்துள்ள கோகுல் பூரி மெற்றோ நிலையமும் விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hindon airport in Ghaziabad to be operational for UDAN flights by March - Times of India". M.timesofindia.com. 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
- ↑ "Regional flights to 4 cities including Kannur and Hubli from Hindan airbase expected by October end". 5 July 2018. https://www.hindustantimes.com/noida/regional-flights-to-4-cities-including-kannur-and-hubli-from-hindon-airbase-expected-by-october-end/story-yrydOBuyYGT9KXfR0UMFeI.html.
- ↑ "Delhi's second airport to operate first flight from tomorrow". livemint. 2019-10-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
- ↑ "PM Narendra Modi inaugurates civil enclave at Hindon airport - The Economic Times". Economictimes.indiatimes.com. 2019-03-08. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
- ↑ "'Temporary' Hindon civilian airport to turn permanent? | Ghaziabad News - Times of India". Timesofindia.indiatimes.com. 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
- ↑ "Delhi to get second airport at Hindon by February next year". Livemint.com. 2018-12-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.