ஸ்டார் ஏர் (இந்தியா)

ஸ்டார் ஏர் (Star Air) என்பது கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையத்தை மையமாகக் கொண்ட ஓர் இந்திய பயணிகள் வானூர்தி நிறுவனமாகும். இது மத்திய அரசின் உடான் திட்டத்தின் ஒரு பகுதியாக குசராத்து, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் அண்டை மாநிலங்களுக்கு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. 2019 சனவரியில் செயல்படத் தொடங்கியது. விமான நிறுவனம் தனது சேவைகளுக்கு எம்ப்ரேயர் 145 வானூர்திகளை பயன்படுத்துகிறது.[2]

ஸ்டார் ஏர்
IATA ICAO அழைப்புக் குறியீடு
OG SDG HISTAR
நிறுவல்2017
செயற்பாடு துவக்கம்சனவரி 2019
மையங்கள்கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்[1]
பெல்காம் வானூர்தி நிலையம்
வானூர்தி எண்ணிக்கை5
சேரிடங்கள்13
தாய் நிறுவனம்கோடாவத் நிறுவனம்
முக்கிய நபர்கள்சஜ்சய் கோடாவத் (தலைவர்)
சிம்ரன் சிங் திவானா (CEO)
பணியாளர்கள்400
வலைத்தளம்starair.in
பெங்களூரின் கெம்பேகவுடா வானூர்தி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்டார் ஏர் எம்பிராயெர் 145எல்.ஆர்

வரலாறு

தொகு

கோடாவத் நிறுவனம் பயணிகள் வானூர்தி சேவையை துவங்க மத்திய அரசிடம் மார்ச் 2017 ஆம் ஆண்டு அனுமதி கேட்டது [2] இந் நிறுவனம் தனது முதல் வானூர்தி எம்பிராயெர் 145LR, 2018 சூன் வாங்கியது.[3]

சேரிடங்கள்

தொகு

ஸ்டார் ஏர் இந்தியாவுக்குள் உள்ள 13 உள்நாட்டு வானூர்தி நிலையங்களுக்கு சேவை வளங்குகிறது, கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் பெல்காம் வானூர்தி நிலையங்கள் இதன் மைய்யங்களாக விளங்குகிறது.

மாநிலம் நகரம் வானூர்தி நிலையம் குறிப்பு சான்று
ஆந்திரப் பிரதேசம் திருப்பதி திருப்பதி விமான நிலையம் [4]
குசராத்து அகமதாபாது சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் [5]
சூரத்து சூரத்து பன்னாட்டு வானூர்தி நிலையம் [6]
கருநாடகம் பெங்களூர் கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் வான்சேவை மையங்கள் [7]
பெல்காம் பெல்காம் வானூர்தி நிலையம் வான்சேவை மையங்கள் [8]
குல்பர்கா குல்பர்கா வானூர்தி நிலையம் [9]
ஹூப்ளி ஹூப்ளி விமான நிலையம்
மத்தியப் பிரதேசம் இந்தோர் தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம் [10]
மகாராட்டிரம் மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் [11]
நாசிக் நாசிக் வானூர்தி நிலையம்
ராஜஸ்தான் அஜ்மீர் கிஷன்கர்ட் வானூர்தி நிலையம் [12]
ஜோத்பூர் ஜோத்பூர் விமான நிலையம் [13]
உத்தரப் பிரதேசம் காசியாபாத் (தேதவ) கிண்டன் வானூர்தி நிலையம் [14]

வானூர்தித் தொகுதி

தொகு

2020 பெப்ரவரி மாதத்தின்படி ஸ்டார் ஏர் பயணிகள் வானூர்திகள்:[15][16]

ஸ்டார் ஏர் வானூர்திகள்
வானூர்தி சேவையில் வாங்கல் பயணிகள்
எம்பிராயெர் 145LR 5 0 50
மொத்தம் 5 0

மேற்கோள்கள்

தொகு
  1. "Star Air (India) Airline Profile | CAPA". centreforaviation.com.
  2. 2.0 2.1 "India's Star Air eyes 1Q18 launch using ERJ-145s". ch-aviation. 27 July 2017. https://www.ch-aviation.com/portal/news/58174-indias-star-air-eyes-1q18-launch-using-erj-145s. 
  3. "India's Star Air adds maiden aircraft, an ERJ-145". ch-aviation. 25 சூன் 2018. https://www.ch-aviation.com/portal/news/68354-indias-star-air-adds-maiden-aircraft-an-erj-145. 
  4. ஸ்டார் ஏர்(இந்தியா) சேவை ஆரம்பம்
  5. ஸ்டார் ஏர்(இந்தியா) சேவை ஆரம்பம்
  6. ஸ்டார் ஏர்(இந்தியா) சேவை ஆரம்பம்
  7. ஸ்டார் ஏர்(இந்தியா) சேவை ஆரம்பம்
  8. ஸ்டார் ஏர்(இந்தியா) சேவை ஆரம்பம்
  9. "Star Air to start thrice-weekly flights on Bengaluru-Kalaburagi route from Nov 22". www.outlookindia.com. 2019-11-13. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
  10. "Star Air Flight Schedules". Star Air. Archived from the original on 11 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Star Air is all set to Connect Belagavi With Mumbai". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
  12. https://twitter.com/OfficialStarAir/status/1229815704637050882
  13. "Now, Star Air flight connects Belagavi with Jodhpur". The Hindu. Belagavi. 17 February 2021.
  14. "Star Air India to commence Hubballi-Hindon service in Nov-2019". CAPA. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  15. "Star Air introduce Embraer 145 as part of UDAAN for first time in India". United News of India. 25 February 2019. http://www.uniindia.com/star-air-introduce-embraer-145-as-part-of-udaan-for-first-time-in-india/south/news/1511618.html. 
  16. "CAPA – Centre for Aviation". centreforaviation.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_ஏர்_(இந்தியா)&oldid=3573554" இலிருந்து மீள்விக்கப்பட்டது