கிண்ண மடற் காளான்

கிண்ண மடற் காளான் (Chanterelle) என்பது சாந்தரெல்லசு, கிராட்டரெல்லசு, கோம்பசு, போலியோசெல்லசு ஆகிய பேரினங்களில் அமையும் பல காளான் இனங்களின் பொதுப் பெயராகும். இவை மக்கள் மிக விரும்பி உண்ணும் காட்டுவகைக் காளான் ஆகும். இவை வெளிர்சிவப்பு, மஞ்சள்,வெண்மைநிறங்களிலும் சதைப்பற்றுமிக்கும் புனல் வடிவத்திலும் அமைகின்றன. வழுவழுப்பான கிண்ணத்தின் அடிப்பகுதியில் வட்டவடிவ விதைப்பைகள் கூர்ங்கீற்றுடன் கிண்ணத்தில் இருந்து கீழே காம்பு வரை சரிவாகப் பரவி அமைகின்றன; பல இனங்கள் பழ வாசனையோடு உள்ளன; இது மிளகின் மென்சுவையுடன் இருக்கின்றன. ( எனவே இது செருமானிய மொழியில் பிப்பெர்லிங் (Pfifferling) எனப்படுகிறது). சாந்தரெல்லி என்ற பெயர் கிரேக்க மொழியில் கிண்ணம் எனப் பொருள்படும் காந்தரோசு (kantharos) என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.[1][2] இது இவற்றின் பொதுவடிவத்தைச் சுட்டுகிறது.

"கிண்ண மடற் காளான் (chanterelle)" எனப்படும் (சாந்தரெல்லசு சிபாரியசு (Cantharellus cibarius)) சார்ந்த பல இனங்களில் ஒன்று

விவரிப்பு

தொகு

முன்பு, வட அமெரிக்காவின் மஞ்சௐ அல்லது பொன்னிறச் சாந்திரெல்லெகள் அனைத்தும் சாந்திரெல்லசு சிபாரியசு (Cantharellus cibarius) இன வகைக்குள் அடக்கப்பட்டன. மரபன் (DNA) பகுப்பாய்வுக்குப் பிறகு, இவை தம்மிடையே உறவுள்ள இனங்களின் குழு என்பது தெளிவானது. 1997 இல் பசிபிக் பொன்னிறச் சாந்திரெல்லெ எனும் சா. ஃபார்மோசசு (சாந்திரெல்லசு ஃபார்மோசசு) இனமும் சா. சிபாரியசு வகைமை. உரோசியோகானசு இனமும் இனங்காணப்பட்டன,[3] பிறகு 2003 இல் சா.காசுகாடென்சிசு (சாந்திரெல்லசு காசுகாடென்சிசு) இனங்காணப்பட்டது[4]பிறகு, 2008 இல் சா. கலிபோர்னிக்கசு (சாந்திரெல்லசு கலிபோர்னிக்கசு) இனங்காணப்பட்டது.[5] சா. சிபாரியசு வகை. உரோசியோகானசு பசிபிக் வடமேற்கில் சித்கா சுப்புரூசு காடுகளிலும் காணப்படுகிறது.[3] இது கிழக்கு கனடாவிலும் பீ. பாங்சியானா (பீனசு பாங்சியானா) இனத்தோடு காணப்படுகிறது.[6]

 
சாந்தரெல்லசு பல்லென்சு

கைரோபோரோப்சிசு அவுரந்திகா (Hygrophoropsis aurantiaca) எனும் போலி சாந்திரெல்லெ தோற்றத்தைக் கொண்டு உண்மைச் சாந்திரெல்லெ எனக் குழப்பிக்கொள்ள வாய்ப்புண்டு.சானால், இவையிரண்டையும் நிறத்தாலும் விதைப்பை காம்போடு அமையும் இணைவுமுறையாலும் பிரித்தறியலாம். சாந்திரெல்லெ சீரான முட்டை மஞ்சள் நிரமுடையது. போலிச் சாந்திரெல்லெ நட்வில் கருப்பு பொட்டுடன் பலதர வெளிர்செந்நிறமுடையது. [தெளிவுபடுத்துக] உண்மையான சாந்திரெல்லெவின் விதைப்பைகள் கூடுதல் நெளிவு வாய்ந்தன அல்லது கூடுத்லான வட்ட வடிவம் வாய்ந்தன.மேலும், அங்கங்கு கூர்ங்கீற்றுடையன. முன்பு, போலிச் சாந்திரெல்லெ தீங்கினதாக கருதப்பட்டது. ஆனால், இப்பொது அதை உண்ணலாம் என அறியபட்டாலும், அது சுவை குன்றியதாக உள்லது. மேலும், அதன் செரிமானக் குறைவால் பலவகைக் குடல்நோய்கள் வர வாய்ப்புள்ளதாக அறியப்பட்டுள்ளது.[7][8]

சாந்திரெல்லசு பல்லென்சு சிலவேளைகளில் தனி இனமாக வரையறுக்கப்படுகிறது.[9] ஆனால், இயல்பாக இது (சா. சிபாரியசு வகை. பல்லென்சு) இனத்தின் ஒரு வகமையாகவே கருதப்படுகிறது.[10] இது உண்மையான சா. சிபாரியசு போலன்றி, முதலில் மஞ்சளாகித் தொட்டால் சிவக்கிறது. இது மிகவும் மென்மணம் உள்ளது. எய்சார்த்தியரும் உரவுக்சும் இதைத் தனி இனமாகக் கருதுகின்றனர், இவர்கள் பிரெஞ்சு சந்தைக்குவரும் 90% கிண்ண மடற் காளான்கள் சா. பல்லென்சு தானே தவிர சா. சிபாரியசு கிடையாது எனக் கூறுகின்றனர்.[9]

இதேபோல சாந்திரெல்லசு அல்பூருஃபெசன்சு என்பது சிலவேளைகளில் தனிவகையாக அல்லது தனி இன்னமாகக் கருதப்படுகிறது. இது மிகவும் வெளிர்நிறமுடையது; எளிதாக சிவக்கிறது. இது நடுத்தரைக்கடல் நாடுகளில் காணப்படுகிறது.[9][10]

இனங்கள்

தொகு

கிண்ண மடற் காளான் இனங்கள் சில கீழே தரப்படுகின்றன:

பரவல்

தொகு
 
புதிதாக வெட்டிய கிண்ன மடற் காளான் கூடை (chanterelles)

கிண்ண மடற் காளான் ஐரோப்பாசியாவிலும்[12] வடக்கு அமெரிக்காவிலும் நடுவண் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் பரவலாக அமைகிறது.[13] இவை பூஞ்சண (mossy) ஊசியிலைக் காடுகளிலும் மலைப் பிர்ச்சு மரங்களிலும் புல்களிடையிலும் சிறு செடிகளிலும் கொத்து கொத்தாக வளர்கின்றன. நடுவண் ஐரோப்பாவில், பொன்னிறக் கிண்ண மடற் காளான்கள் பீச் மரங்களில் ஒத்த பிற இனவகைகளுடன் காணப்படுகிறது.[7] ஐக்கிய இராச்சியத்தில், யூலையில் இருந்து திசம்பர் வரை வளர்கிறது.[14][15]

Chanterelle mushrooms, raw
உணவாற்றல்160 கிசூ (38 கலோரி)
6.86 g
சீனி1.16 g
நார்ப்பொருள்3.8 g
0.53 g
1.49 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
ரிபோஃபிளாவின் (B2)
(18%)
0.215 மிகி
நியாசின் (B3)
(27%)
4.085 மிகி
(22%)
1.075 மிகி
உயிர்ச்சத்து பி6
(3%)
0.044 மிகி
உயிர்ச்சத்து டி
(35%)
5.3 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(2%)
15 மிகி
இரும்பு
(27%)
3.47 மிகி
மக்னீசியம்
(4%)
13 மிகி
மாங்கனீசு
(14%)
0.286 மிகி
பாசுபரசு
(8%)
57 மிகி
பொட்டாசியம்
(11%)
506 மிகி
சோடியம்
(1%)
9 மிகி
துத்தநாகம்
(7%)
0.71 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

ஊட்டச்சத்துகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pilz D, Norvell L, Danell E, Molina R (March 2003). Ecology and management of commercially harvested chanterelle mushrooms. Gen. Tech. Rep. PNW-GTR-576 (PDF). Portland, OR: Department of Agriculture, Forest Service, Pacific Northwest Research Station. பார்க்கப்பட்ட நாள் 2011-03-25.
  2. chanterelle at dictionary.com
  3. 3.0 3.1 Cantharellus formosus and the Pacific Golden Chanterelle harvest in Western North America. 65. 1997. பக். 285–322. http://www.cybertruffle.org.uk/cyberliber/59575/0065/0285.htm. பார்த்த நாள்: 2020-01-04. 
  4. Dunham SM; O'Dell TE; Molina R. (2003). "Analysis of nrDNA sequences and microsatellite allele frequencies reveals a cryptic chanterelle species Cantharellus cascadensis sp. nov. from the American Pacific Northwest". Mycological Research 107 (10): 1163–77. doi:10.1017/s0953756203008475. https://archive.org/details/sim_mycological-research_2003-10_107_10/page/1163. 
  5. A new, commercially valuable chanterelle species, Cantharellus californicus sp. nov., associated with live oak in California, USA. 62. 2008. பக். 376–91. doi:10.1007/s12231-008-9042-7. http://www.davidarora.com/uploads/arora_dunham_chanterelles.pdf. பார்த்த நாள்: 2020-01-04. 
  6. Rochon, Caroline; Paré, David; Pélardy, Nellia; Khasa, Damase P.; Fortin, J. André (2011). "Ecology and productivity of Cantharellus cibarius var. roseocanus in two eastern Canadian jack pine stands". Botany 89 (10): 663–675. doi:10.1139/b11-058. https://archive.org/details/sim_botany_2011-10_89_10/page/663. 
  7. 7.0 7.1 Persson O. (1997). The Chanterelle Book. Berkeley, California: Ten Speed Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89815-947-9.
  8. Fischer DH, Bessette A (1992). Edible Wild Mushrooms of North America: a Field-to-Kitchen Guide. Austin, Texas: University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-292-72080-0.
  9. 9.0 9.1 9.2 Gillaume Eyssartier; Pierre Roux (2013). Le Guide des Champignons France et Europe (in French). Paris, France: Belin. pp. 586–590. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7011-8289-6.{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Also available in English.
  10. 10.0 10.1 The entry for C. cibarius in Species Fungorum indicates that C. pallens and C. alborufescens are synonyms of C. cibarius, but have also been defined as varieties or separate species.
  11. Thorn, R. Greg; Kim, Jee In; Lebeuf, Renée; Voitk, Andrus (2017). "The golden chanterelles of Newfoundland and Labrador: a new species, a new record for North America, and a lost species rediscovered". Botany 95 (6): 547–560. doi:10.1139/cjb-2016-0213. 
  12. Dar GH, Bhagat RC, Khan MA (2002). Biodiversity of the Kashmir Himalaya. Anmol Publications PVT. LTD. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-1117-6.
  13. Boa ER (2004). Wild Edible Fungi: A Global Overview Of Their Use And Importance To People (Non-Wood Forest Products). Food & Agriculture Organization of the UN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-5-105157-3.
  14. "Cantharellus cibarius (Golden Chanterelle): Plant Phenology in the United Kingdom". iNaturalist.org. பார்க்கப்பட்ட நாள் 2018-10-21.
  15. "Cantharellus cibarius Fr". gbif.org. பார்க்கப்பட்ட நாள் 2018-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ண_மடற்_காளான்&oldid=3849644" இலிருந்து மீள்விக்கப்பட்டது