கின்சுவானாவ் சூவு

இந்திய அரசியல்வாதி

கின்சுவானாவ் சூவு (Ginsuanhau Zou) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மணிப்பூர் மாநில அரசியலில் மற்றும் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2012 & 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்கட்டு தொகுதியிலிருந்து மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கின்சுவானாவ் சூவு
Ginsuanhau Zou
மணிப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2012–2020
முன்னையவர்டி. ஆங்கன்பாவவு
பின்னவர்சின்லுந்தாங்கு
தொகுதிசிங்கட்டு சட்டப்பேரவை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கின்சுவானாவ் சூவு
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)சிங்கட்டு, மணிப்பூர்
தொழில்சமுக சேவகர்

2020 ஆம் ஆண்டு மணிப்பூர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கான கட்சியின் சார்பை மீறி சட்டசபை நடவடிக்கைகளைத் தவிர்த்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய இவர் பின்னர் இராம் மாதவ், பைச்சையந்து பாண்டா மற்றும் மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் முன்னிலையில் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். [1] [2] [3] [4] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் சிங்கட்டு தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [5] [6] [7]

மேற்கோள்கள் தொகு

  1. "Manipur CM Arrives in Delhi, to Induct Seven Congress Leaders Into BJP". பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
  2. "'Extend my warmest welcome', says Manipur CM after former Congress MLAs join BJP". பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
  3. "5 Manipur MLAs who resigned from Cong join BJP in Delhi". பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
  4. "Five former Manipur Congress MLAs join BJP in New Delhi". பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
  5. "BJP candidate to be declared winner unopposed in Singhat". பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  6. "Manipur assembly by polls BJP wins Singhat uncontested". பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  7. "Manipur: BJP candidate Pu Ginsuanhau Zou elected uncontested from Singhat assembly constituency". பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்சுவானாவ்_சூவு&oldid=3883326" இலிருந்து மீள்விக்கப்பட்டது