கிபுனாடா
கிபுனாடா ( Kipunada) பிராமி எழுத்தில் ; கி-பு-னா-டா ) மேலும் கிபனாதா எனவும் அறியப்படும் இவர் சுமார் பொ.ச. 335-350-இல் ஆட்சி செய்த குசான பேரரசின் கடைசி ஆட்சியாளராக இருக்கலாம். இவர் தங்க நாணயத்திற்கு பெயர் பெற்றவர். [3] இவர் முதலாம் சாகாவிற்குப் பிறகு அரியணை ஏறினார். மேற்கு பஞ்சாபில் உள்ள தக்சசீலப் பகுதியில் கிபுனாடா ஒரு உள்ளூர் ஆட்சியாளராக இருந்திருக்கலாம். மேலும் இவர் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தரின் ஆட்சியாளராகவும் இருந்திருக்கலாம்.[4]
கிபுனாடா | |
---|---|
குசான ஆட்சியாளர் | |
கிபுனாடாவின் நாணயம், சுமார் 335-350 பொ.ச. கிபுனாடா இடதுபுறத்தில் நின்று, பலிபீடத்தின் மேல் பலி செலுத்துகிறார். வலதுபுறம், அச்சு வடிவத்தில் பிராமி எழுத்தில் செங்குத்தாக கி-பு-னா என்ற பெயர் . மன்னனின் கைக்குக் கீழே பச்சர்னாதா என உள்ளது. . மற்றொரு புறம்: அர்தோக்சோ தேவி கையில் பழங்கள், மாலையுடனான கொம்பினை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் தோற்றம்.[1] | |
ஆட்சிக்காலம் | 335-350 பொ.ச[2] |
முன்னையவர் | முதலாம் சாகா |
பின்னையவர் | கிடாரைட்டுகள் |
குப்தர் மற்றும் கிடாரைட்டு வாரிசுகள்
தொகுமத்திய மற்றும் மேற்கு பஞ்சாபில் கண்டெடுக்கப்பட்ட கிபுனாடாவின் அச்சிடப்பட்ட விசித்திரமான நாணயங்களில் "சமுத்திரம்" ( குப்தர் எழுத்து: ), என்ற பெயர் இடம் பெற்றிருப்பது மறைமுகமாக குப்தப் பேரரசின் ஆட்சியாளர் சமுத்திரகுப்தருடன் இணைக்கப்பட்டிருக்கலாம். [5] இதற்குப் பிறகு, பஞ்சாபில் கிரடா, பெரோஸ், குசானர்கள் முன்பு வைத்திருந்த பிரதேசத்தை ஆக்கிரமித்த பிரபலமான முதலாம் கிடாரன் போன்ற கிடாரைட்டு ஆட்சியாளர்களால் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பின்னர் [5]
குறிப்புகள்
தொகு- ↑ CNG Coins
- ↑ Cribb, Joe; Donovan, Peter (2014). Kushan, Kushano-Sasanian, and Kidarite Coins A Catalogue of Coins From the American Numismatic Society by David Jongeward and Joe Cribb with Peter Donovan (in ஆங்கிலம்). p. 4.
- ↑ Heritage World Coin Auctions Long Beach Signature Auction Catalog #378. Ivy Press. May 2005. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932899-79-5.
- ↑ From the Kushans to the Western Turks. 2017. p. 203.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Cribb, Joe. "The Kidarites, the numismatic evidence.pdf" (in en). Coins, Art and Chronology II, Edited by M. Alram et Al.: 101. https://www.academia.edu/38112559.