முதலாம் கிடாரன்

கிடாரைட்டு மன்னன்

முதலாம் கிடாரன் (Kidara I; ஆட்சிக் காலம் பொ.ச. 350-390) கிடாரைட்டு இராச்சியத்தின் முதல் பெரிய ஆட்சியாளர் ஆவார். இவர் வடமேற்கு இந்தியாவில், குசான்சாகர், காந்தாரதேசம், காஷ்மீர் , பஞ்சாப் பகுதிகளில் ஆண்டுவந்த குசான-சாசானியர்களை அங்கிருந்து விரட்டினார். [4]

கிடாரன்
கிடாரைட்டு மன்னர் முதலாம் கிடாரனின் உருவப்படம், சுமார் 350-386 பொ.ச.[1] அவர் தனது சிறப்பான கிரீடத்தை மேல்நோக்கி பறக்கும் ரிப்பனுடன் அணிந்துள்ளார். 3/4 உருவப்படத்தின் பயன்பாடு சில சமயங்களில் பைசாந்திய ஆட்சியாளர் ஆர்காடியசின் (377-408 பொ.ச.) நாணயத்தின் செல்வாக்கின் காரணமாக கூறப்படுகிறது..[2]
கிடாரைட்டுகள்
ஆட்சிக்காலம்c. 350–390 CE
முன்னையவர்பெரோஸ்
பின்னையவர்தெரியவில்லை
"கிடாரனின் குசான நாணயங்கள்
கிடாரைட்டுகளின் முதலாம் கிடாரனின் தங்க நாணயம், சுமார் 350–385 பொ.ச., பிராமி எழுத்துமுறையில் வலமிருந்து இடமாக:
குசானா ( கு-சா-னா)
கிடாரன் ( கி-டா-ரன்)
குசானன் ( கு-சா-னன்)
அர்தோக்சோ தேவி பின்பக்கம்.
கிடாரைட் நாணயங்களின் கீழ் இடது மூலையில் பிராமி எழுத்துமுறையில் "குசானன்" என்ற எழுத்து ( 'கு-சா-னன்') சுமார் 350 பொ.ச.[3]

ஆட்சி

தொகு

கிடாரன் ஒரு நாடோடி ஆட்சியாளராக இருந்தார். இவர் குசான சாசானியர்களால் ஆளப்பட்ட பாக்திரியா ( துகாரிஸ்தான் ), காந்தாரம் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்தார். கிடாரைட்டுகள் ஆரம்பத்தில் சுமார் பொ.ச.300 -இல் வடக்கிலிருந்து சோக்தியானா , பாக்திரியா ஆகியவற்றின் மீது படையெடுத்ததாக கருதப்படுகிறது.[5]ஹெப்தலைட்டுகள் இடம்பெயர்ந்ததன் மூலம் இவரது மக்கள் பாக்திரியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம்.[4]

கிடாரனின் இனம் தெளிவாக இல்லை. ஆனால் இவர் ஒரு சியோனைட்டாக இருந்திருக்கலாம். மேலும் இவர் ஹூன அல்லது ஹூணர்களின் பொது வகையைச் சேர்ந்தவர்.[5] ஏற்கனவே 4-ஆம் நூற்றாண்டில், சாசானிய பேரரசர் இரண்டாம் சாபூர் மன்னர் கிரம்பேட்சு தலைமையிலான சியோனைட் படையெடுப்பாளர்களுக்கு எதிராக போராடினார். இறுதியில் அவர்களுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். அமிடா கோட்டை முற்றுகையில் உரோமானியர்களுக்கு எதிரான போரில் தங்கள் இராணுவத்தைப் பயன்படுத்தினார் (இப்போது தியார்பாகிர், துருக்கி ).[4] இருப்பினும், சீன ஆதாரங்கள், கிடாரைட்டுகள் குசானர்களின் மூதாதையர்களான யுவேஜியின் உறவினர்களை உருவாக்கும் லெஸ்ஸர் யுயெஷி என்று விளக்குகின்றன.[5]

துகாரிஸ்தான் மற்றும் கந்தாரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கிடாரன், அதுவரை குசான-சசானிய இராச்சியத்தின் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட குசான்ஷா என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார்.[4] இவ்வாறு இவர் வடமேற்கு இந்தியாவில் கிடாரைட்டுகளின் பெயரிடப்பட்ட புதிய வம்சத்தை நிறுவினார்.[5] கிடாரைட்டுகளும் தங்களை குசானர்களின் வாரிசுகள் என்று கூறினர். ஒருவேளை அவர்களின் இன அருகாமையின் காரணமாக இருக்கலாம்.[5]

நாணயம்

தொகு

கிடாரன் தனது சொந்த பெயரில் நாணயங்களை வெளியிடுவதற்கு முன், (இப்பிராந்தியத்தின் தனது முன்னோடி ஆட்சியாளரான முதலாம் வராகரனைப் பின்பற்றி) சாசானிய பாணி தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் குசான பாணி தங்க நாணயங்களையும் வெளியிட்டார். [6] [7]

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. CNG Coins
  2. Lerner, Judith A. (210). Observations on the Typology and Style of Seals and Sealings from Bactria and the Indo-Iranian Borderlands, in Coins, Art and Chronology II. The First Millennium CE in the Indo-Iranian Borderlands (in ஆங்கிலம்). Vienna: ÖAW. p. 246, note 7.
  3. Tandon, Pankaj (2009). "An Important New Copper Coin of Gadahara" (in en). Journal of the Oriental Numismatic Society (200): 19. https://www.academia.edu/2771790/An_Important_New_Copper_Coin_of_Gadahara?auto=download. 
  4. 4.0 4.1 4.2 4.3 History of Civilizations of Central Asia, Ahmad Hasan Dani, B. A. Litvinsky, Unesco p.38 sq
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 History of Civilizations of Central Asia, Ahmad Hasan Dani, B. A. Litvinsky, Unesco p.119 sq
  6. Sayles, Wayne G. (1999). Ancient Coin Collecting VI: Non-Classical Cultures. Iola, WI: Krause. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-753-4.
  7. Cribb, Joe (2010). Coins, Art and Chronology. Vienna: Verlag der Österreichischen Akademie der Wissenschaften. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7001-6885-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கிடாரன்&oldid=3399240" இலிருந்து மீள்விக்கப்பட்டது