கியாத் அல்-தின் துக்ளக்

துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான்

கியாத் அல்-தின் துக்ளக் (Ghiyath al-Din Tughluq) அல்லது கியாஸ்-உத்-தின் துக்ளக் அல்லது காஜி மாலிக் (காஜி என்றால் இசுலாமிற்காகப் போராடுபவர் என்று பொருள்) [4] (இறப்பு சுமார் 1325 [5] ) 1320 முதல் 1325 வரை தில்லியின் சுல்தானாக இருந்தார். துக்ளக் வம்சத்தின் தில்லி சுல்தானகத்தின் முதல் சுல்தானான இவர் தனது ஆட்சியின் போது, துக்ளகாபாத் நகரத்தை நிறுவினார். 1325 இல் இவர் இறந்தவுடன் இவரது ஆட்சி முடிவடைந்தது. இவரது நினைவாக கட்டப்பட்ட ஒரு கட்டடமும் இடிந்து விழுந்தது. 14 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் இப்னு பதூதா, சதியின் விளைவாக சுல்தானின் மரணம் நிகழ்ந்தது என்று கூறினார் [4]

கியாத் அல்-தின் துக்ளக்
தில்லியின் சுல்தான்
காஜி மாலிக்
சுல்தான்-இ-தில்லி
நார்பத்-இ-தில்லி
தில்லி சுல்தானிய கையெழுத்துப் பிரதியில் , கியாத் அல்-தின் துக்ளக் தனது படைகளுடன் மிதிலை நகரைக் கைப்பற்றுவதைச் சித்தரிக்கிறது. கி.பி.1326 இல் வரையப்பட்ட அசலின் நகல். இஸ்தான்புல், தோப்காபி அரண்மனை அருங்காட்சியக நூலகம்.[1][2][3]
17வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்8 செப்டம்பர் 1320 – பிப்ரவரி 1325
முடிசூட்டுதல்8 செப்டம்பர் 1320
முன்னையவர்குசுராவ் கான்
பின்னையவர்முகம்மது பின் துக்ளக்
பிறப்புஅறியப்படவில்லை
இறப்புபிப்ரவரி 1325
காரா-மானிக்பூர், இந்தியா
புதைத்த இடம்
தில்லி, இந்தியா
குழந்தைகளின்
பெயர்கள்
முகம்மது பின் துக்ளக்
மரபுதுக்ளக் வம்சம்
மதம்சுன்னி இசுலாம்

கியாத் அல்-தின் துக்ளக்கிற்குப் பிறகு அவரது மூத்த மகன் முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு வந்தார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. ÇAĞMAN, FİLİZ; TANINDI, ZEREN (2011). "Selections from Jalayirid Books in the Libraries of Istanbul". Muqarnas 28: 230, 258 Fig.56. பன்னாட்டுத் தர தொடர் எண்:0732-2992. https://www.jstor.org/stable/pdf/23350289.pdf. 
  2. ÇAĞMAN, FİLİZ; TANINDI, ZEREN (2011). "Selections from Jalayirid Books in the Libraries of Istanbul". Muqarnas 28: 230, 258 Fig.56. பன்னாட்டுத் தர தொடர் எண்:0732-2992. https://www.jstor.org/stable/pdf/23350289.pdf. "Another illustrated manuscript that is most probably from the time of Ahmad Jalayir. It is an unfinished copy of a work in Persian entitled Basatin al-Uns. The written sources emphasize the artistic patronage of Sultan Ahmad Jalayir.". 
  3. William Charles Brice (1981). An Historical Atlas of Islam. Brill. பக். 409. https://books.google.com/books?id=6DYVAAAAIAAJ&dq=Ikhtisan++iran&pg=PA409. 
  4. 4.0 4.1 Sen, Sailendra (2013) (in en). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 89–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  5. Jackson, Peter (in en). The Delhi Sultanate: A Political and Military History. Cambridge University Press. பக். 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-54329-3. 
  6. Tughlaq Shahi Kings of Delhi: Chart தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா, 1909, v. 2, p. 369..
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாத்_அல்-தின்_துக்ளக்&oldid=3826930" இலிருந்து மீள்விக்கப்பட்டது