கியான் பிரகாசு உபாத்யாயா

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்

கியான் பிரகாசு உபாத்யாயா (Gyan Prakash Upadhyaya) இந்திய நிர்வாக சேவை அலுவலர் ஆவார். கி.பி. உபாத்யாயா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று பிறந்தார்.[1] சிக்கிம் மாநில அரசாங்கத்தில் தற்போதைய அமைச்சரவை செயலாளராக உள்ளார்.[2][3] இவர் 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎசு அதிகாரி ஆவார்.[4]

கியான் பிரகாசு உபாத்யாயா
GP Upadhyaya
பிறப்பு29 அக்டோபர் 1964 (1964-10-29) (அகவை 60)
பலியா, உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமுதுநிலை தொழில்நுட்பம் (இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி)
இளநிலை பொறியியலாளர் (இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி)
பணிஇந்திய ஆட்சிப் பணி அலுவலர்
செயற்பாட்டுக்
காலம்
1987–முதல்
பணியகம்இந்திய அரசு
அமைப்பு(கள்)இந்திய ஆட்சிப் பணி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கியான் பிரகாசு உபாத்யாயா இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் பிறந்தார். இவர் தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டமும், ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலில் இளங்கலை பட்டமும் பெற்றார்.[5][6]

கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த இவர் தற்பொழுது சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு