கியோமிசு-டேரா
கியோமிசு-டேரா (Kiyomizu-dera, சப்பானியம்: 清水寺) என்பது சப்பானில் கியோட்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது[1]. அரண்மனையை ஒட்டியுள்ள இந்தக் கோயில், சப்பானியக் கலைநயத்தின் புகழ் சொல்வதாய் விளங்குகிறது. இதன் முக்கிய பகுதிகள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.
கியோமிசு-டேரா Kiyomizu-dera 清水寺 | |
---|---|
கியோமிசு கோயிலின் தலைமைக் கட்டடம். | |
தகவல்கள் | |
மதப்பிரிவு | கித்தாஹொசோ |
நிறுவல் | 798 |
முகவரி | கியோட்டோ |
நாடு | சப்பான் |
இணையத்தளம் | http://www.kiyomizudera.or.jp/ |
வரலாறு
தொகுகியோமிசு-டேரா கோயில் ஹையன் காலகட்டத்தைச் சேர்ந்தது[2]. கிபி 798 இல் அமைக்கப்பட்டது. இதன் தற்போதைய கட்டடங்கள் 1633 ஆம் ஆண்டில் டொக்குகாவா யேமிட்சு என்ற இராணுவத் தலைவரின் கட்டளையின் பேரில் மீளக்கட்டப்பட்டது[3]. இக்கட்டட அமைப்பில் எந்தவொரு ஆணியும் பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் பெயரை அடியாகக் கொண்டு இக்கோயிலுக்கு இப்பெயர் அமைந்தது. கியோமிசு என்றால் தெளிந்த நீர், அல்லது தூய நீர் எனப் பொருள்[4].
2007-இல், புதிய ஏழு உலக அதிசயங்களின் இறுதிப் பட்டியலின் 21 இடங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது[5]. ஆனாலும், புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
காட்சிக் கூடம்
தொகு-
இலையுதிர் காலத்தில் கியோமிசு கோயில்
-
நியோமோன் தேவா வாயில்
-
பின்பக்கத் தோற்றம்
-
இரவுத் தோற்றம்
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- தகவல்கள் பரணிடப்பட்டது 2019-06-09 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- Kiyomizu-dera Temple at Official Kyoto Travel Guide பரணிடப்பட்டது 2008-12-10 at the வந்தவழி இயந்திரம்