கிராட்டனின் பயிலஸ்

பண்டைய விளையாட்டு வீரர்

கிராட்டனின் பயிலஸ் கிரேக்கம்: Φάϋλλος‎ ) என்பவர் பண்டைய கிரேக்க விளையாட்டு வீரர் மற்றும் தெற்கு இத்தாலியின் கிராட்டனில் இருந்த ஒரு கடற்படைத் தளபதி ஆவார். இவர் பாரசீகர்களுக்கு எதிராக நடந்த சலாமிஸ் போரில் தனது கப்பலுடன் சென்று போரிட்டார்.

கிராட்டனின் பயிலஸ்

வாழ்க்கை தொகு

பைத்தியன் விளையாட்டுகளில் பயிலோஸ் மூன்று வெற்றிகளை ஈட்டினார், அவற்றில் இரண்டு பென்டத்லான் போட்டியாகும். [1]

கிமு 480 ஆம் ஆண்டில், பயிலஸ் ஒரு கப்பலைத் தயார்படுத்தி சலாமிஸ் போரில் ஈடுபடுத்தினார். இத்தாலிய கடற்கரைப் பகுதியின் ஓரே பிரதிநிதியான இவரது வீரச்செயலை எரோடோட்டசு பாராட்டியுள்ளார். [2]

கலாச்சாரம் மற்றும் கௌரவங்கள் தொகு

அரிஸ்டாஃபனீஸ் தனது நாடகங்களில் பழங்காலத்திய விரைவான செயலாற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக பயிலசை பயன்படுத்தப்படுத்தியுள்ளார். [3]

பேரரசர் அலெக்சாந்தர் கெமெலா போரில் கைபற்றபட்ட செல்வத்தின் ஒரு பகுதியை பயிலசை கௌரவப்படுத்தும் செயலுக்காக கிரட்டனுக்கு அனுப்பினார். [2]

ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் உள்ள பயிலசின் சிலையின் அடிப்பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டு பின்வருமாறு கூறுகிறது: "பயிலஸ் அனைவராலும் போற்றப்பட்டார். டெல்பியில் நடந்த விளையாட்டுகளில் இவர் மூன்று முறை வெற்றி பெற்றார், மேலும் அகாமனிர்கள் அனுப்பிய கப்பல்களைக் கைப்பற்றினார். " [4]

குறிப்புகள் தொகு

  1. Aristocracy and Athletics in Archaic and Classical Greece, Nigel Nicholson, page 125
  2. 2.0 2.1 Reading Herodotus: A Study of the Logoi in Book 5 of Herodotus' Histories, Elizabeth Irwin & Emily Greenwood, page 175
  3. Four Comedies: Lysistrata/The Congresswomen/The Acharnians/The Frogs by Aristophanes, edited by William Arrowsmith, translated by Douglass Parker, page 102
  4. Ancient Greece: Social and Historical Documents from Archaic Times to the ..., Matthew Dillon and Lynda Garland, page 236
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராட்டனின்_பயிலஸ்&oldid=3788248" இலிருந்து மீள்விக்கப்பட்டது