கிரிந்திரசேகர் போஸ்
கிரிந்திரசேகர் போஸ் (Girindrasekhar Bose) (30 ஜனவரி 1887 - 3 ஜூன் 1953) 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் தெற்காசிய உளவியலாளர் ஆவார். இந்திய மனோவியல் பகுப்பாய்வு சங்கத்தின் முதல் தலைவரகவும் இருந்தார் (1922–1953).[1] இவர், சிக்மண்ட் பிராய்டுடன் இருபது ஆண்டுகால உரையாடலை மேற்கொண்டார். பிராய்டின் இடிபஸ் கோட்பாட்டின் பிரத்தியேகங்களை மறுப்பதற்காக அறியப்பட்ட இவர், மேற்கத்திய முறைகளின் மேற்கத்திய சாரா போட்டிகளுக்கு ஆரம்ப உதாரணமாக சிலரால் சுட்டிக்காட்டப்பட்டார். இது தவிர, கொல்கத்தாவின் ஆர். ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் இந்தியாவில் முதல் பொது மருத்துவமனை மனநலப் பிரிவை (ஜி.எச்.பி.யு) 1933இல் தொடங்கினார்.[2]
கிரிந்திரசேகர் போஸ் | |
---|---|
பிறப்பு | கிரிந்திரசேகர் போஸ் 30 சனவரி 1887 |
இறப்பு | 3 சூன் 1953 | (அகவை 66)
தேசியம் | இந்தியா |
இந்திய மனோவியல் பகுப்பாய்வு சங்கம்
தொகுகான்செப்ட் ஆஃப் ரெப்ரசென் என்ற இவரது முனைவர் பட்ட ஆய்வு, (1921) இந்து மெய்யியலை பிராய்டின் கருத்துகளுடன் கலந்து அளித்தது. இவர் தனது ஆய்வறிக்கையை பிராய்டுக்கு அனுப்பினார்.[3] இது இருவருக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்திற்கும் 1922இல் கொல்கத்தாவில் இந்திய மனோவியல் பகுப்பாய்வு சங்கம் உருவாவதற்கும் வழிவகுத்தது. சங்கத்தின் அசல் உறுப்பினர்களில் பதினைந்து பேரில், ஒன்பது பேர் உளவியல் அல்லது மெய்யியலின் கல்லூரி ஆசிரியர்கள், ஐந்து பேர் பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவப் படையைச் சேர்ந்தவர்கள். இதில் இரண்டு பிரித்தானிய மனநல மருத்துவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் ஓவன் ஏ. ஆர். பெர்க்லி ஹில்,[4] ராஞ்சி மனநல மருத்துவமனையில் பணியாற்றியதற்காக பிரபலமானவர்.[1] [5][6]
படைப்புகள்
தொகு- Concept of Repression. By Girindrashekhar Bose. Published by G. Bose, 14 Parsi Bagan, Calcutta, India. 1921. 223 pp. Rs. 10/ net.[7]
- (with Ernest Jones and others) Glossary for the use of translators of psycho-analytic works, 1926
- Bose, G. (1930). "The psychological outlook of Hindu philosophy". Indian Journal of Psychology 5: 119–46.
- Bose, Girindrasekhar. (1933). "A New Theory of Mental Life". Indian Journal of Psychology, 37-157.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sudhir Kakar, 'Girindrasekhar Bose (1886-1953), International Dictionary of Psychoanalysis. Reprinted online at answers.com
- ↑ Bhattacharyya, Ranjan (2018-02-01). "The development of mental hospitals in West Bengal: A brief history and changing trends" (in en). Indian Journal of Psychiatry 60 (6): 198. doi:10.4103/psychiatry.IndianJPsychiatry_432_17. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5545. பப்மெட்:29527048. https://www.indianjpsychiatry.org/article.asp?issn=0019-5545;year=2018;volume=60;issue=6;spage=198;epage=202;aulast=Bhattacharyya;type=0.
- ↑ Text of Girindrasekhar Bose's letter to Freud, December 1920
- ↑ Owen Berkeley Hill 1879—1944
- ↑ Sudhir Kakar, 'India', inInternational Dictionary of Psychoanalysis. Reprinted online on eNotes.com
- ↑ Samiksha பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Review, Psychoanalytic Review 9:104 (1922)