கிரியாக் தூபி

கிரியாக் தூபி (Giriyak Stupa), இதனை ஜராசந்தனின்[1] அரியணை என்றும் அழைப்பர்.[2] உருளை வடிவ இந்த தாது கோபுரம், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலாந்தா மாவட்டத்தின் கிரியாக் மலைக்குன்றின் மேல் உள்ளது..[2]

கிரியாக் தூபி
गिरियक स्तूप (in இந்தி)
2022ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சீரமைத்த பின் கிரியாக் தூபியின் காட்சி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கிரியாக், நாலந்தா மாவட்டம், பிகார், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்25°01′30″N 85°30′47″E / 25.02500°N 85.51306°E / 25.02500; 85.51306
சமயம்பௌத்தம்
செயற்பாட்டு நிலைபாதுகாக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

தொகு

மலைக்குன்றின் மீதுள்ள கிரியாக் தாது கோபுரம் உருளை வடிவத்தில் செங்கற்களால் குப்தப் பேரரசு காலத்தில் கிபி 400 - 500 காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இத்தூபி 8.5 மீட்டர்கள் (28 அடிகள்) சுற்றளவும் 6.5 மீட்டர்கள் (21 அடிகள்) உயரமும்; 4.4 மீட்டர்கள் (14 அடிகள்) அடித்தளமும் கொண்டது.

வரலாறு

தொகு
 
1862ல் அலெக்சாண்டர் கன்னிங்காம் பார்த்த போது காணப்பட்ட கிரியாக் தூபி

சீன பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவான் கிரியாக் தூபியை தமது பயண நூலில் குறித்துள்ளனர்.[3]தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் இத்தூபியை 1870ல் அகழாய்வு செய்தார். இது கிபி 500ஆம் ஆண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறார்.[2][4]

தூபி மறுசீரமைப்பு

தொகு

மிகவும் சிதிலமடைந்திருந்த கிரியாக் தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 2011 முதல் 2016 வரை சீரமைத்து நிறுவியது.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Five-year restoration effort bears fruit". The Telegraph. September 30, 2016. பார்க்கப்பட்ட நாள் November 5, 2021.
  2. 2.0 2.1 2.2 Cunningham, Alexander (1871). Four reports made during the years 1862-63-64-65. Vol. 1. Shimla, Himachal Pradesh, India: Archaeological Survey of India. pp. 16–20.
  3. Julien, Stanislas (1853). Histoire de la Vie de Hiouen-Thsang [History of the Life of Xuanzang] (in பிரெஞ்சு). Paris: L'Imprimerie Imperiale. pp. 161–3.
  4. Li, Hwui (1914). "Sacred spots at Banaras". The Life of Hiuen-Tsiang. Vol. Book III. Translated by Beal, Samuel (2nd ed.). London: Kegan Paul, Trench, Trübner & Company. pp. 119–120.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியாக்_தூபி&oldid=3759227" இலிருந்து மீள்விக்கப்பட்டது