கிருட்டிணாராவ் சேபிள்

சாகிர் சேபிள் (Shahir Sable) (3 செப்டம்பர் 1923 - 20 மார்ச் 2015) என்று பிரபலமாக அறியப்பட்ட கிருட்டிணாராவ் கணபதிராவ் சேபிள் (Krishnarao Ganpatrao Sable) , இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி மொழி நாட்டுப்புற கலைஞர் ஆவார்.[1] இவர் ஒரு திறமையான பாடகராகவும், எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், கலைஞராகவும், நாட்டுப்புற நாடகத் தயாரிப்பாளர்-இயக்குனராகவும் இருந்தார்.[2][3]

சாகிர் கிருட்டிணாராவ் சேபிள்
பிறப்பு(1923-09-03)3 செப்டம்பர் 1923
பசரானி, வய், சத்தாரா, இந்தியா
இறப்பு20 மார்ச்சு 2015(2015-03-20) (அகவை 91)
மும்பை, மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநாட்டுப்புறக் கலைஞர், பாடகர், நாடக ஆசிரியர், நடிகர்
பெற்றோர்கணபதிராவ் சேபிள்
விருதுகள்பத்மசிறீ 1998
இசை வாழ்க்கை
இசைத்துறையில்1947–2015

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சேபிள் 1923 ஆம் ஆண்டில் கண்பதிராவ் சேபிள் என்பவருக்கு சாத்தாரா மாவட்டத்தின் வய் வட்டத்திலுள்ள பசரானி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.[4] இவர் குழந்தை பருவத்திலேயெ புல்லாங்குழலை வாசிக்க கற்றுக்கொண்டார். பசரானியிலுள்ள தனது ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஜள்காவ் மாவட்டத்திலுள்ள அமல்னர் என்ற ஊரிலிருந்த தனது தாய்வழி மாமாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சில காலம் படித்தார். அமல்னரில், அவர் சானே குருஜி என்பவருடன் நெருக்கமாகி, சுதந்திர போராட்டத்தின் போது அவருடன் நேரத்தை செலவிட்டு, போராட்டத்தில் பங்களிப்பு செய்யத் தொடங்கினார்.

பிரபலமான படைப்புகள்

தொகு
  • மகாராட்டிராச்சி லோகதாரா (மகாராட்டிராவின் நாட்டுப்புற நடனங்கள்) - மகாராட்டிராவின் அனைத்து சொந்த நடன வடிவங்களையும் காட்சிப்படுத்தும் புகழ்பெற்ற குழுவா மகாராட்டிராச்சி லோகதாரா என்பதை நிறுவி இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[5] இலாவனி, பால்யான்ருட்டியா, கோலின்ருட்டியா, கோந்தலின்ருட்டியா, மங்களகூர், வாக்யமுராலி, வாசுதியோ, தங்கர் போன்ற பழைய மரபுகளில் சிலவற்றிற்கு இவர் மறுபிறவி அளித்தார்.

நாடகங்கள்

தொகு
  • அந்தாலா தால்தே - மும்பையில் மராத்தி பேசும் மக்களின் வருத்தத்தை வெளிப்படுத்தும் இந்த கேலிக்குரிய நாடகத்தை அரங்கேற்றினார். இந்த நாடகம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது பூர்வீக மராத்தி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சிவ சேனா என்ற ஒரு அரசியல் கட்சி உருவாக்க வழிவகுத்தது.[6][7]

குடும்பம்

தொகு
  • இவரது மகன் தேவதத்தா சேபிள் "ஹாய் சால் துரு துரு" மற்றும் "மனாச்ச்யா துண்டிட்" போன்ற புகழ்பெற்ற பாடல்களுடன் பிரபலமான மராத்தி இசை அமைப்பாளராக உள்ளார். மேலும் இவரது பேரன் சிவதர்சன் சேபிள் புகழ்பெற்ற திரைப்படமான ″ அஜாப் லக்னாச்சி, கஜாப் கோஷ்ட் ″, கேன்வாஸ் ″ மற்றும் ″ ரங் மனஞ்சே" போன்ற மராத்தி திரைப்படங்களை இயக்கியவர். மராத்திய நாடகங்களான பரம்பரா.காம்″ , ″மெய் மற்றும் டீ" ஆகியவற்றையும் தயாரித்து இயக்கியுள்ளார்.
  • இவரது மகள் சாருஷீலா சேபிள் ஒரு மராத்தி நடிகையாவார்.[8]
  • இவரது மருமகன் அஜித் வச்சானி ஒரு பிரபல இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர். இவர் சாருஷீலாவை மணந்தார்.
  • இவரது பேரன் கேதார் சிண்டே, பிரபல மராத்தி திரைப்பட இயக்குனராவார்.[9]

விருதுகளும் அங்கீகாரமும்

தொகு
  • 1984: சங்கீத நாடக அகாதமி விருது [10]
  • 1988: ஷாஹிர் அமர் ஷேக் புரஸ்கார்
  • 1990: தலைவர், 70 வது அகில் பாரதிய மராத்தி நாட்டிய மாநாடு, மும்பை
  • 1990: தலைவர், அகில் பாரதிய மராத்தி ஷாஹிர் பரிஷத், மும்பை [11]
  • 1990: மகாராஷ்டிர கௌரவ் புரஸ்கார்
  • 1994: சாந்த் நாமதேவ் புரஸ்கார்
  • 1997: சதாரா பூசண் புரஸ்கார்
  • 1997: ஷாஹிர் பட்டே பாபுராவ் புரஸ்கார்
  • 1997: மகாராட்டிர ராஜ்ய கௌரவ் புரஸ்கார்
  • 1998: 1998 ஆம் ஆண்டில் கலைத்துறையில் அர்ப்பணிப்பு செய்ததற்காக இந்திய அரசின் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[12]
  • 2001: மகாராட்டிரா மாநில அரசிடமிருந்து சிறந்த பாடகர் விருது.
  • 2002: பி சவ்லாராம் புரஸ்கார்
  • 2002: ஷாஹிர் பரண்டே புரஸ்கார்
  • 2005: மகாராட்டிரா டைம்ஸ் வழங்கிய மகாராட்ஷ்டிர பூசண் விருது
  • 2006: மகாராட்டிர ரத்னா புரஸ்கார்
  • 2012: லோக்சாகிர் விட்டல் உமாப் மிருத்கண்ட் வாழ்நாள் சாதனையாளர் விருது [13]

இறப்பு

தொகு

இவர் மார்ச் 20, 2015 அன்று தனது 91 வயதில் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.[14][15]

குறிப்புகள்

தொகு
  1. "Shahir Sable" (PDF). mumbaitheatreguide.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
  2. "The Economic Viability of Theatre (presented at Ekjute Festival's Theatre Seminar – April 2006)". theatreforum.in. India Theatre Forum. Archived from the original on 6 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Bard of Maharashtra Shahir Krishnarao Sable passes away". Business Standard. 20 March 2015. பார்க்கப்பட்ட நாள் 21 March 2015.
  4. "Shahir Sable – A patriotic artiste who made an invaluable contribution to freedom and United Maharashtra struggle and a Bard who nurtured Maharashtra's culture through it's folk art". www.manase.org. Archived from the original on 2 June 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
  5. "Trupti Sahasrabuddhe – World in Motion". worldinmotiondance.com. World in Motion LLC. Archived from the original on 6 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Herbariums golden oldie 'Andhala Daltay'". afternoondc.in. Afternoon Despatch & Courier Mumbai India. Archived from the original on 2 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "ANDHALA DALTAY". mumbaitheatreguide.com. mumbaitheatreguide.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  8. "All about Charushila Sable – biography, filmography, photos". Gomolo.com. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Interview With Kedar Shinde". MumbaiTheatreGuide.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
  10. "Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards)". sangeetnatak.gov.in. Sangeet Natak Akademi. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  11. "Films to archive theatre artistes' work". sakaaltimes.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  12. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  13. "Awards". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
  14. "महाराष्ट्राचा आवाज हरपला, शाहीर साबळे यांचे मुंबईत निधन". http://www.loksatta.com/mumbai-news/shahir-sable-passes-away-in-mumbai-1083463/. 
  15. Nandgaonkar, Satish (21 March 2015). "Folk singer Shahir Sable passes away" – via The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணாராவ்_சேபிள்&oldid=3928907" இலிருந்து மீள்விக்கப்பட்டது