வய், மகாராட்டிரம்

வய் (Wai) (listen) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். கிருஷ்ணா ஆற்றில் அமைந்துள்ள இந்த நகரம், பேஷ்வாக்களின் காலத்தில் ஒரு முக்கிய நகரமாக இருந்தது. ஆளும் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு முக்கியமான மராத்தா பிராமணர்கள் இங்கு தோன்றினர்: ஜான்சியின் இராணி இலட்சுமிபாய் (தம்பே குடும்பம்) மற்றும் பாலாஜி பாஜி ராவ் பேஷ்வாவின் (ரஸ்தே குடும்பம்) மனைவி கோபிகாபாய்.

வய்
நகரம்
வய் is located in மகாராட்டிரம்
வய்
வய்
மகாராட்டிராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°57′N 73°53′E / 17.95°N 73.89°E / 17.95; 73.89
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாத்தாரா
ஏற்றம்
718 m (2,356 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்36,030
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு02167
ஐஎசுஓ 3166 குறியீடுஐஎன்-எம்ஹெச்
இணையதளம்maharashtra.gov.in

உள்ளூரில் உள்ள முக்கிய குடும்பங்களான இரஸ்தே, இரனதே, பட்னாவிசு போன்ற பல குடும்பங்கள் கட்டடக்கலை ரீதியாக குறிப்பிடத்தக்க கோயில்களை இந்த ஊரில் கட்டின. 400 ஆண்டுகள் பழமையான மந்த்ராதேவி கலுபாய் கோயில், வயிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 4,650 அடி உயரத்தில் உள்ள ஒரு மலையில் உள்ளது. [2] சமீபத்திய ஆண்டுகளில், பாலிவுட் மற்றும் மராத்தித் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கான பிரபலமான இடமாக இது மாறியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட படங்கள் வை மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. [3] [4]

வரலாறு

தொகு

நகரில் 100 க்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதால், "தெற்கின் காசி" (வாரணாசி) என்ற பெயரை இந்த ஊர் கொண்டுள்ளது. மகாராட்டிராவில் கிருஷ்ணா ஆற்றின் கரையிலும் அதன் கோயில்களிலும், குறிப்பாக கணபதி படித்துறையிலுள்ள தொந்தி கணபதி கோயிலுக்காகவும் நகரம் அறியப்படுகிறது.

பிஜப்பூர் சுல்தானகத்தின் இரண்டாம் அலி ஆதில் ஷாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 ஆம் நூற்றாண்டின் போர்வீரர் அப்சல் கான், மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜியின் கோட்டைக்கு செல்லும் வழியில் தனது முதல் தங்குமிடத்தை இங்கு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் சுமார் 105 துப்பாக்கிகள், வாள் மற்றும் பிற ஆயுதங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

நிலவியல்

தொகு

வாய் 17.94 ° N 73.88 ° E இல் அமைந்துள்ளது. [5] இது சாத்தாராநகருக்கு வடக்கே சுமார் 35 கி.மீ தொஅலிவில் அமைந்துளது. இதன் சராசரி உயரம் 718 மீட்டர் (2355 அடி). இது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியால் சூழப்பட்டுள்ளது.

வயிக்கு மேற்கே உள்ள தோம் அணை 1982 இல் கட்டி முடிக்கப்பட்டது. வய் நகரிலிருந்து கிட்டத்தட்ட 16 கி.மீ தொலைவில் உள்ள போர்கோவன் கிராமம், தோம் அணை மற்றும் பால்காவடி அணையின் நடுவில், நான்கு அருவிகளைக் கொண்டுள்ளது. போர்கோனின் குடியிருப்பாளர்கள் ஆண்டு முழுவதும் இந்த அருவிகளிலிருந்து குடிநீரைப் பெறுகின்றனர்.

வய் வட்டத்தின் தலைமையகம் சுமார் 25,000 மக்கள் வசிக்கும் வய் நகரம் ஆகும். இது சாத்தாராவிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், புனேவிலிருந்து 95 கி.மீ. 250 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மும்பையிலிருந்து. மகாத்-பண்டரிபுரம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இது, மகாபலீசுவர் மற்றும் பஞ்சாக்னி மலைவாழிடங்கங்ளுக்கு செல்லும் வழியில் ஒரு முக்கிய நகரமாகும்.

மக்கள்தொகை

தொகு

இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [6] இதன் மக்கள் தொகை 31,090 பேர் ஆகும். மக்கள் தொகையில் 51% ஆண்கள்; பெண்கள், 49%. நகரின் கல்வியறிவு 77%, (இந்தியாவின் தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக). ஆண் கல்வியறிவு 81%; பெண் கல்வியறிவு, 73%. 2001 ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் மக்கள் தொகையில் 11% 6 வயதிற்குட்பட்டவர்கள்.

குறிப்பிடத்தக்க குடியிருப்பாளர்கள்

தொகு
  • வாமன் பண்டிட் (1608-1695) - 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறந்த மராத்தி கவிஞர்.
  • நானா பட்நாவிசு (1742 - 1800) - மராட்டிய பேரரசின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி.
  • பி.ஜி.சிர்கே (1918 -2010) - பி.ஜி.சிர்கே கட்டுமான தொழில்நுட்ப தனியார் நிறுவன நிறுவனர்
  • இலட்சுமன் சாத்திரி ஜோசி (1901 - 1994) - சமசுகிருதவாதி, வேத அறிஞர், சிந்தனையாளர் மற்றும் மராத்தி எழுத்தாளர். மராத்தி விசுவகோசு என்று அழைக்கப்படும் மராத்தி மொழியில் ஒரு கலைக்களஞ்சியத்தை நிறுவினார் .
  • சாகிர் சேபிள் (1923 - 2015) - மராத்தி நாட்டுப்புற பாடகர்.

புகைப்படங்கள்

தொகு
 
மகாகணபதி கோயில்
 
கிருஷ்ணா படித்துறை
 
வய் அருகே கமல் படித்துறை

குறிப்புகள்

தொகு
  1. India Office of the Registrar Census data
  2. S.S. Shashi (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh, Volume 100. Anmol Publications. p. 54.
  3. "Meena Iyer tells us about Bollywood’s favourite location, Wai. And why Wai locals love Bollywood". 
  4. "योगींना सांगा, "तुमचं युपी,बिहार दाखवायचं झालं तरी वाईतच यावं लागतं"". 
  5. "Maps, Weather, and Airports for Wai, India". fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வய்,_மகாராட்டிரம்&oldid=3078366" இலிருந்து மீள்விக்கப்பட்டது