கிருட்டிணா ரிபௌத்

கிருட்டிணா ரிபௌத் (Krishna Riboud) (1926 அக்டோபர் 12 - 2000 சூன் 27) ராய் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய வரலாற்றாசிரியரும் மற்றும் ஓவியங்கள் சேகரிப்பாளராகவும் இருந்தார். மேலும், இந்திய மற்றும் சீனத் தொல்பொருட்கள் மற்றும் துணிகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

கிருட்டிணா ரிபௌத்
பிறப்புகிருட்டிணா ராய்
(1926-10-12)12 அக்டோபர் 1926
டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு27 சூன் 2000(2000-06-27) (அகவை 73)
பாரிஸ், பிரான்ஸ்
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்[வெல்லெஸ்லி கல்லூரி
வாழ்க்கைத்
துணை
ஜீன் ரிபௌத்
(தி. 1949; இற. 1985)

ராய் தனது துணி சேகரிப்பை 1950களில் வங்காளத்திலிருந்து பலுச்சாரிப் புடவைகளை வாங்குவதிலிருந்துத் தொடங்கினார்.[1] இவர் 1958 கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கிருட்டிணா ராய் 1926 அக்டோபர் 12 ஆம் தேதி கிழக்கு வங்காளத்தில் பொது சுகாதார இயக்குனராக பணிபுரிந்த இராஜேந்திர ராய் மற்றும் இனா தாகூர் ராய் ஆகியோரின் மகளாக டாக்காவில் பிறந்தார். இவரது தாயார் இரவீந்திரநாத் தாகூரின் பேத்தியாவார். இவரது பத்து வயதில் இவரது தந்தை இறந்துவிட்டார். பின்னர், சொல்கத்தாவிலுள்ள இவரது தாய்மாமன் சௌம்யேந்திரநாத் தாகூரால் வளர்க்கப்பட்டார்.[2][3] இவரது மாமா இவரது வாழ்க்கையில் செல்வாக்கு பெற்றிருந்தார். 1983ஆம் ஆண்டில், தி நியூயார்க்கர் என்ற பத்திரிக்கையில் இவர் இவ்வாறு கூறினார், "ஒரு புரட்சிகர மார்க்சியவாதியான என் மாமாவிடம் நான் ஆர்வமாக இருந்தேன். அவருடைய மார்க்சியம் இப்போது நமக்குத் தெரிந்த பொதுவுடமையிலிருந்து மிகவும் வித்தியாசமானது." தனது மாமாவை பிரிட்டிசு காவலர்கள் கைது செய்து கொல்கத்தா இரயில் நிலையத்தில் கைது செய்து இரயிலில் ஏற்றியதையும் இவர் நினைவு கூர்ந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

1947 வசந்த காலத்தில் ஹார்பர்ஸ் பஜார் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் வழங்கிய ஒரு விருந்தில் பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-பிரெசன் விருந்தில் ராய் கலந்து கொண்டார்.[3][4] விருந்தில், இவர் இசுக்லம்பெர்கரின் தலைவர் ஜீன் ரிபௌத் என்பவரைச் சந்தித்தார். ராய் மற்றும் ரிபௌத் 1949 இல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து 1949 அக்டோபர் 1 அன்று திருமணம் செய்து கொண்டனர்.[3] இத்தம்பதியருக்கு கிறிஸ்டோப் என்ற ஒரு மகன் நியூயார்க்கில் 1950 இல் பிறந்தார்.

இந்த இணை, அரசியல் பிரமுகர்கள் அடங்கிய ஒரு விரிவான நட்பு வட்டத்தைக் கொண்டிருந்தாகக் அறியப்படுகிறது. பிரான்சுவா மித்திரோன், இந்திரா காந்தி மற்றும் நே வின் மற்றும் இயவ்சு தங்குய், கென்றி கார்டியர்-பிரெசன், இசாமு நொகுச்சி, எம்.எப் உசைன், ஜோன் மிரோ மற்றும் மாக்சு ஏர்ண்ஸ்ட் போன்றவர்கள். இவர்களிடம் ஒரு கலைத் தொகுப்பும் இருந்தது. அவற்றில் சில பின்னர் கிருட்டிணா ரிபௌத் குய்மெட் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அங்கு ஜீன் மற்றும் கிருட்டிணா ரிபௌத்தின் தொகுப்பின் தனி காட்சிக்கூடம் பராமரிக்கப்பட்டு வருகிறது.[2][4]

ஜீன் மற்றும் கிருஷ்ணா ரிபௌத், ஜீன் ரிபௌத் 1986 இல் பாரிஸில் இறந்தார், இவர்களது ஒரே மகன் கிறிஸ்டோப் 1990இல் சுவிட்சர்லாந்தில் ஒரு கார் விபத்தில் இறந்தார். அடுத்த பத்தாண்டுகளில், கிருட்டினா தனது காலத்தை பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகியவற்றில் கழித்தார்.[5][6]

கிருட்டிணா ரிபௌத் 2000 சூன் 27 அன்று பிரான்சின் பாரிஸில் உள்ள தனது வீட்டில் காலமானார்.[2]

குறிப்புகள்

தொகு
  1. "CREATING A COLLECTION OF REFERENCE BY COLLECTING TE XTILES: KRISHNÂ RIBOUD'S EXEMPLARY ACHIEVEMENT" (PDF). Festival International des Textiles Extra Ordinaires. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 "In memoriam". India Seminar. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  3. 3.0 3.1 3.2 Auletta, Ken (6 June 1983). "A Certain Poetry". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  4. 4.0 4.1 Sethi, Sunil (11 September 2015). "Sunil Sethi: The pedigree of prize art". Business Standard India. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  5. Purdum, Todd S. (22 October 1985). "JEAN RIBOUD DIES IN PARIS AT 65; HEADED SCHLUMBERGER COMPANY". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  6. "JEAN RIBOUD, LEGENDARY OIL EXECUTIVE". AP News Archive. 21 October 1985. பார்க்கப்பட்ட நாள் May 9, 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணா_ரிபௌத்&oldid=3676141" இலிருந்து மீள்விக்கப்பட்டது