சௌம்யேந்திரநாத் தாகூர்

இந்தியப் பொதுவுடைமைத் தலைவர்

சௌம்யேந்திரநாத் தாகூர் (Saumyendranath Tagore) (1901 அக்டோபர் 8 – 1974 செப்டம்பர் 22, 1974) [1] திவிஜேந்திரநாத் தாகூரின் பேரனும், இரவீந்திரநாத் தாகூரின் பேரனும், சுதீந்திரநாத் தாகூரின் மகனுமான இவர் இந்தியாவின் புரட்சிகர பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.[2][3] மேலும் பொதுவுடமை அறிக்கையை வங்காள மொழியில் முதலில் மொழிபெயர்த்தார். இது காஜி நஜ்ருல் வெளியிட்ட லங்கல் என்ற இதழில் வெளியிடப்பட்டது.

தோழர்
சௌம்யேந்திரநாத் தாகூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1901-10-08)8 அக்டோபர் 1901
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு22 செப்டம்பர் 1974(1974-09-22) (அகவை 72)
அரசியல் கட்சிதொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி,
ஜெர்மனி பொதுவுடமைக் கட்சி,
இந்திய புரட்சிகர பொதுவுடமைக் கட்சி,
இந்திய புரட்சிகர பொதுவுடமைக் கட்சி (தாகூர்)]]
துணைவர்சிறிமதி கதீசிங்
முன்னாள் கல்லூரிமாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
வேலைஅரசியல்வாதி, மார்க்சிய கோட்பாட்டாளர்
இணையத்தளம்www.rcpi-communist.in/p/saumyendranath-tagore.html

கல்வி

தொகு

தாகூர் கொல்கத்தாவில் உள்ள மித்ரா கல்வி நிறுவனத்தில் இருந்து 1917இல் தனது மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மேலும் 1921 ஆம் ஆண்டில் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் கௌரவ பட்டம் பெற்றார்.

பொதுவுடமை இயக்கம்

தொகு

1920 இல், தாகூர் அகமதாபாத்தில் நடந்த அகில இந்திய மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் முசாபர் அகமது மற்றும் கவிஞர் காஜி நஸ்ருல் இஸ்லாத்துடன் நட்பு கொண்டிருந்தார். 1926 ஏப்ரலில் தாகூர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சியில் சேர்ந்த பிறகு, வங்காள சணல் தொழிலாளர் சங்கத்தை உருவாக்க வங்காளத் தொழிலாளர்கள் சணல் ஆலைகளுக்குச் செல்லத் தொடங்கினார். ஒரு தொழிற்சங்க செயற்பாட்டாளராக இவரது செயல்திறன் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சிக்கு புரட்சியாளர்களை உருவாக்குவதற்கான இவரது முயற்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. கைது செய்வதைத் தவிர்ப்பதற்காக, தாகூர் 1927 மே மாதம் ஐரோப்பாவுக்குப் புறப்பட்டார்.[4] அங்கு, சர்வதேச பொதுவுடமைத் தலைவர்களைச் சந்தித்தா.பின்னர்,மாஸ்கோ சென்று பொதுவுடமை சர்வதேச அமைப்பின் 6 வது மாநாட்டில் கலந்து கொண்டார்.

அமைப்புடன் கருத்து வேறுபாடுகள்

தொகு

தாகூர் "காலனித்துவ கேள்வி" இல் பொதுவுடமை அமைப்புடன் கருத்து வேறுபட்டிருந்தார்.[4] பின்னர், ஜோசப் ஸ்டாலினின் "ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கருத்தை விட லியோன் திரொட்ஸ்கியின் "நிரந்தர புரட்சி" என்றக் கோட்பாட்டை இவர் ஆதரித்தார்.[5][6] பாட்டாளி வர்க்க புரட்சியின் துரோகம் எனக் கருதி 1930களில் பொதுவுடமை அமைப்பின் "பிரபலமான முன்னணி" மூலோபாயத்தை எதிர்க்கவும் செய்தார்.

1928 பொதுவுடமை சர்வதேச மாநாட்டில் தாகூர் எம்.என். ராயின் பங்கை விமர்சனம் செய்ய முயன்றார்.[7] 1928 ஆம் ஆண்டில் பொதுவுடமை சர்வதேசத்திடமிருந்து அங்கீகாரத்தைப் பெற இவர் தவறிய முயற்சியின் பிரதிபலிப்பாக, தாகூர் ஸ்டாலினுக்கு விரோதமாக இருந்தார். 1934இல் இந்தியா திரும்பியபோது, இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு அதன் தீவிர இடது கோட்பாட்டை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். [8] பொதுவுடமை சர்வதேசத்தின் ஏழாவது மாநாட்டுக்குப் பிறகு இந்திய பொதுவுடமைக் கட்சி பின்னர் தனது நிலைகளை மிதப்படுத்தினாலும், தாகூர் அக்கட்சியுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டார். [9] 1934 மே மாதத்தில் ஒரு புதிய கட்சியை நிறுவுவதற்கு ஒரு 'முன்முயற்சி குழு' ஒன்றை அமைத்தார்.[10]

பொதுவுடமை அமைப்பு

தொகு

1934 ஆகத்து 1, அன்று தாகூர் இந்திய பொதுவுடமை அமைப்பை உருவாக்கினார்.[10][11] கபொதுவுடமை அமைப்பின் மற்ற நிறுவனர்களில் சுதிர் தாசுகுப்தா, பிரபாத் சென், ரஞ்சித் மசூம்தார் மற்றும் அருண் பானர்ஜி ஆகியோரும் அடங்குவர்.[12]

பொதுவுடமை அமைப்பு மற்றும் விவசாயிகள்

தொகு

பொதுவுடமை அமைப்பு உருவான பின்னர் தாகூர் வங்காளதேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார். ஜமீந்தாரி முறையை ஒழிப்பதற்காக விவசாயிகளை போராட ஏற்பாடு செய்தார். 1938இன் ஆரம்பத்தில் தாகூர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைமையிலான அகில இந்திய விவசாயிகள் சங்கத்திலிருந்து 'பாங்கியோ பிரதேசிக் கிசான் சபா' என்றா ஒரு விவசாயிகள் பிரிவைக் கட்டமைத்தார். இந்தச் சங்கம் நில உரிமையாளர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்காமல் ஜமீந்தாரி முறையை ஒழிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களிடையே நிலத்தை இலவசமாக விநியோகிக்க வேண்டும் எனவும், வரியினை குறைக்க வேண்டும் எனவும் மற்றும் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியது.

அசாமில் தாகூர்
தொகு

1941 ஆம் ஆண்டில் பொதுவுடமை அமைப்பு "இந்திய பொதுவுடமைக் கட்சி" என்று மறுபெயரிடப்பட்டது. 1942ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ பொதுவுடமைக் கட்சியிலிருந்து வேறுபடுவதற்காக "இந்திய புரட்சிகர பொதுவுடமைக் கட்சி" மறுபெயரிடப்பட்டது.

அசாமில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட முதல் இடதுசாரி அமைப்பு இந்திய புரட்சிகர பொதுவுடமைக் கட்சியாகும்.[13] 1938 நவம்பரில் தாகூர் அசாமுக்குச் சென்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவைச் சந்தித்தார்.[14][15] இவரது பயணத்தை காங்கிரசைச் சேர்ந்த தேவரநாத் சர்மா என்பவர் ஏற்பாடு செய்தார். 1939ஆம் ஆண்டில் மாகாணத்தில் ஒரு பொதுவுடமை அமைப்பின் கிளை உருவாக்கப்பட்டது.

தாகூர் 1941 திசம்பரில் அசாமிற்கு இரண்டாவது முறை வருகை புரிந்தார்.[16] இந்த முறை இவர் மேல் அசாமில் உள்ள ககன் பார்பருவாவுடன் அவரது கிராமத்திற்குச் சென்று மாகாணத்தில் கட்சி அமைப்பைக் கட்டுவது குறித்து விவாதித்தார். தாகூர் 1941 திசம்பர் 18 அன்று அசாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இலக்கியப் படைப்புகள்

தொகு

சௌம்யேந்திரநாத் தாகூர் கல்லோல் குழுவின் வழக்கமான எழுத்தாளராவார். இவர் பிரெஞ்சு, உரருசிய, ஜெர்மனி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் கட்டுரைகளை எழுதினார்.

தாகூரின் புரட்சிகர நடவடிக்கைகள் பிரிட்டிசு அதிகாரிகளால் இவரது பல படைப்புகளை தடை செய்ய வழிவகுத்தன.[17][18]

குடும்பம்

தொகு

சௌம்யேந்திரநாத் தாகூர் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபுத்துவ ஜெயின் குசராத்தி கதீசிங் குடும்பத்தைச் சேர்ந்த கதீசிங் என்பவரை மணந்தார். இவரது மனைவி சாந்திநிகேதனில் ஒரு மாணவராகவும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடனத்தில் பயிற்சி பெற்ற பிரபல நடனக் கலைஞரும் நடன இயக்குனருமாவார். மேலும் அவரது சகோதரர் குணோட்டம் (ராஜா) கதீசிங், மோதிலால் நேருவின் இளைய மகளும் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சகோதரி கிருட்டிணா நேருவை மணந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. Bhattacharya, Satya Brata (April 2016). "Saumyendranath Tagore and the Peasant Movement of Murshidabad: A Study on Historical Perspectives". Archived from the original on 2020-07-18. பார்க்கப்பட்ட நாள் 2020-06-27.
  2. Dwijendranath Tagore#Descendants
  3. "Tagore, Soumyendranath - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-23.
  4. 4.0 4.1 Shatarupa Sen Gupta (20 April 2009). "Tagore, Saumyendranath (1901–1974)". பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  5. Revolutionary Communist Party of India (22 September 2018). "On the 44th death anniversary of Comrade S.N. Tagore". பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  6. Tagore, Saumyendranath. "Permanent Revolution". பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.
  7. Laushey, David M. (1975). Bengal terrorism & the Marxist left: aspects of regional nationalism in India, 1905–1942. Firma K. L. Mukhopadhyay.
  8. S. Chowdhuri. Leftism in India, 1917–1947. Palgrave Macmillan UK.
  9. S. Chowdhuri. Leftism in India, 1917–1947. Palgrave Macmillan UK.
  10. 10.0 10.1 Partido de los Trabajadores Socialistas. Origenes y formacion del trotskismo en India y Ceilan
  11. S. N. Sadasivan (1977). Party and democracy in India. Tata McGraw-Hill.
  12. Society and Change. Mihir Purkayastha for the ASSSC.
  13. Party Life. Communist Party of India. 1985.
  14. Susmita Sen Gupta (2009). Radical Politics in Meghalaya: Problems and Prospects. Gyan Publishing House.
  15. Saikia, Arupjyoti. A Century of Protests: Peasant Politics in Assam Since 1900. Routledge.
  16. [1]
  17. Battacharyya, Satyabrata (2016). "Saumyendranath Tagore and the Communist Movement of Bengal, 1920-1947". பார்க்கப்பட்ட நாள் 14 April 2020.
  18. "Saumyendranath Tagore Archive". பார்க்கப்பட்ட நாள் 2020-04-19.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌம்யேந்திரநாத்_தாகூர்&oldid=3926417" இலிருந்து மீள்விக்கப்பட்டது