கிருட்டிண பிரசாத்து மாத்தூர்

இந்திய மருத்துவர்

கிருட்டிண பிரசாத்து மாத்தூர் (Krishna Prasad Mathur) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தார்.[1] 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியன்று பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இந்திரா காந்தியை சந்தித்த கடைசி சில நபர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[2]

கி. பி. மாத்தூர்
K. P. Mathur
பிறப்புஇந்தியா
பணிமருத்துவர்
அறியப்படுவதுஇந்திரா காந்தி தனி மருத்துவர்
விருதுகள்பத்மசிறீ

இவருடைய மருத்துவ சேவைகளை அங்கீகரித்த இந்திய அரசு 1984 ஆம் ஆண்டில் நாட்டின் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Gandhis out to lunch with former family physician". Deccan Herald. 3 May 2012. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
  2. "Assassination of PM Indira Gandhi". 1984 Tribute. October 2011. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.