பியாந்த் சிங் (கொலையாளி)

இந்திராகாந்தியை படுகொலை செய்த கொலையாளி

பியாந்த் சிங் (Beant Singh) (6 ஜனவரி 1959 – 31 அக்டோபர் 1984), இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளராக இருந்தார். மேலும் 1984இல் அவரது படுகொலையில் பங்கேற்ற இருவரில் இவரும் ஒருவராவார்.

பியாந்த் சிங்
பிறப்புசனவரி 6, 1959(1959-01-06)
சைட்டு ,கிழக்கு பஞ்சாப், இந்தியா
இறப்பு31 அக்டோபர் 1984(1984-10-31) (அகவை 25)
புது தில்லி, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
இந்திரா காந்தி படுகொலையின் போது விசாரணையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்
பணிஇந்தியப் பிரதமரின் மெய்க்காப்பாளர்
பணியகம்இந்திய அரசு
குற்றச்செயல்இந்திராகாந்தி படுகொலை
வாழ்க்கைத்
துணை
பிமல் கௌர் கல்சா,1976
விருதுகள்அகால் தக்த் இருக்கை வழங்கிய சாகீத் என்ற பட்டம்

குடும்பம்தொகு

பியாந்த் சிங், இராம்தாசியா சீக்கிய குடும்பத்தில் பாபா சுச்சா சிங் என்பவருக்கும், கர்த்தர் கௌருக்கும் பிறந்தார்.[1]

சிங்கின் விதவை பிமல் கௌர் கல்சா ஆரம்பத்தில் சீக்கியப் போராளிக் குழுவினருடன் தொடர்பிலிருந்ததால்[2] சிறையில் அடைக்கப்பட்டார். பிமல் கௌர் பஞ்சாப்பின் உரோப்பர் மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை, பாபா சுச்சா சிங்கும் பதிந்தா மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] இவர்களது மகன் சர்ப்ஜித் சிங் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

மரியாதையும் நினைவுநாள் கொண்டாட்டமும்.தொகு

2003 ஆம் ஆண்டில், அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அகால் தக்த்தில் நடைபெற்ற ஒரு சீக்கிய போக் விழாவில் இவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

2004 ஆம் ஆண்டில், மீண்டும் இவரது நினைவு நாள் விழா அமிர்தசரசின் அகால் தக்தில் அனுசரிக்கப்பட்டது. அங்கு இவரது தாயார் கௌரவிக்கப்பட்டார். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளால் சத்வந்த் சிங், கெகர் சிங் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. [6]

சனவரி 6, 2008 அன்று, அகால் தக்த் பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரை 'சீக்கிய மதத்தின் தியாகிகள்' என்று அறிவித்தது.[7][8][9]

இந்தியாவில் சீக்கிய மதத்தை மையமாகக் கொண்ட அரசியல் கட்சியான சிரோமணி அகாலி தளம், பியாந் சிங், சத்வந்த் சிங் ஆகியோரின் இறந்த ஆண்டு விழாவை முதன்முறையாக 2008 அக்டோபர் 31 அன்று 'தியாகிகள் தினமாக' அனுசரித்தது. [10] ஒவ்வொரு அக்டோபர் 31 அன்று, இவர்களின் 'தியாக நாள்' அகால் தக்த் அரியணையால் அனுசரிக்கப்படுகிறது.[11]

மேற்கோள்தொகு

  1. "Perspective : What Motivated Beant Singh to assassinate Indira Gandhi?". The Indian Panorama (ஆங்கிலம்). 2017-12-08. 2020-06-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sikhs Sought in Slaying". India; Amritsar (India): NYTimes.com. 6 June 1986. https://www.nytimes.com/1986/06/06/world/sikhs-sought-in-slaying.html. 
  3. Crossette, Barbara (22 December 1989). "India's New Chief Given A Go-Ahead - New York Times". Nytimes.com. https://www.nytimes.com/1989/12/22/world/india-s-new-chief-given-a-go-ahead.html. 
  4. MyNews.in. "'Father didn't kill Indira Gandhi to make Sikhs happy': Beant Singh's son". MyNews.in. 5 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Family profile". Indiaenews.com. 28 September 2012. 25 பிப்ரவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. "The Tribune, Chandigarh, India - Punjab". Tribuneindia.com. 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Chandigarh, India - Punjab". Tribuneindia.com. 7 January 2003.
  8. "National: Indira Gandhi killers labelled martyrs". தி இந்து (Chennai, India). 7 January 2003. Archived from the original on 10 ஜனவரி 2008. https://web.archive.org/web/20080110102918/http://www.hindu.com/2008/01/07/stories/2008010762501200.htm. 
  9. "Indira assassin 'great martyr': Vedanti". The Indian Express. 7 January 2003. 13 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Chandigarh, India - Bathinda Edition". Tribuneindia.com. 25 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Chandigarh, India - Punjab". Tribuneindia.com. 1 November 2009. 25 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 January 2018 அன்று பார்க்கப்பட்டது.