கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கம்

கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கம் என்பது கேரளத்தில் உள்ள வயநாட்டில் உள்ள துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்த அரங்கத்தில் 20,000 பேர்வரை அமரலாம். இது கடல் மட்டத்திலிருந்து 2,100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அரங்கம் கிரிக்கெட்டிற்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் உயரமான அரங்காகும்.[1]

கிருஷ்ணகிரி அரங்கம்
வயநாடு கிரிகெட் அரங்கம்
அமைவிடம்இந்தியா, கேரளம், வயநாடு
உருவாக்கம்2012
இருக்கைகள்20,000
உரிமையாளர்கேரள துடுப்பாட்ட சங்கம்
இயக்குநர்கேரள துடுப்பாட்ட சங்கம்
குத்தகையாளர்கேரள துடுப்பாட்ட அணி

வரலாறு தொகு

2006 ஆம் ஆண்டில் இந்த அரங்கத்திற்கான இடம் வாங்கப்பட்டது, 2009 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ரொபின் சிங் மற்றும் சுனில் ஜோசி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். பின்னர் 2013 ஆம் ஆண்டு ஆளுநர் நிக்கல் குமார் வயனாட்டின் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள இந்த அரங்கத்தை திறந்துவைத்தார்.[2][3][4] இந்த அரங்கத்தில் இந்தியா ஏ அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணி ஆகியவற்றுக்கு இடையிலான போட்டி உள்ளிட்ட நான்கு முதல்-நிலை ஆட்டங்கள் நடத்தப்பட்டுள்து.[5]

அம்சங்கள் தொகு

  • இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தளத்தால் நல்ல வடிகால் வசதி உள்ளது.
  • காட்சிக்கூடத்தில் இருந்து சாய்வான புல்வெளி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
  • கேரள மாநிலத்தில் துடுப்பாட்டத்துக்கு முதன்மை பயிற்சி மையமாக உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Scenic Krishnagiri Stadium Warms up for First International Match | http://www.newindianexpress.com". http://www.newindianexpress.com/states/kerala/Scenic-Krishnagiri-Stadium-Warms-up-for-First-International-Match/2015/08/03/article2954355.ece. {{cite web}}: |access-date= requires |url= (help); External link in |title= and |website= (help); Missing or empty |url= (help)
  2. "Mathrubhumi: ReadMore -'Cricket fever soon to clutch Krishnagiri'". mathrubhuminews.in. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
  3. Staff Reporter. "KCA's first cricket stadium at Krishnagiri". The Hindu.
  4. "High Altitude stadium to be commissioned in Wayanad dist". Zee News. Archived from the original on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
  5. "The Home of CricketArchive". cricketarchive.com.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Krishnagiri Stadium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.