சுனில் ஜோசி
சுனில் பந்தாசார்யா ஜோசி ( Sunil Bandacharya Joshi ( ⓘ; , பிறப்பு: சூன் 6. 1970), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்.சகலத்துறையரான இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.மேலும் இவர் பெட்ஃபோர்ட்ஷயர் , கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணிகளுக்காக இவர் உள்ள்ருப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.மேலும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இடதுகை மட்டையாளராவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 69 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மித வேகப் பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 4 2006 |
உள்ளூர்ப்போட்டிகள்
தொகுதன்து துடுப்பாட்ட வாழ்க்கை முழுவதும் இவர் கருநாடக மாநிலத் துடுப்பட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் இவர் விளையாடினார். 1995-1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் 500 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இருநூறு ஓட்டங்களும் அடங்கும். மேலும் இதே தொடரில் 50 இலக்குகளையும் கைப்பற்றினார். மேலும் இவர் இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்ட்ஷயர் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக சில காலங்கள் விளையாடினார். இவர் 2008 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் 2009 இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.சூன் 21, 2012 இல் சர்வதேச போட்டிகள் மற்றும்முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.[1]
சர்வதேச போட்டிகள்
தொகுசுனில் ஜோசி 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வந்தார். இவர் மத்திய கள மட்டையாளராகவும், அனில் கும்ப்ளே ஆகிய பந்து வீச்சாளர்களோடு இணைந்து பந்துவீசினார். நிலையான இடத்தைப் பிடித்திருந்த போதிலும் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
1996 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் சூன் 6 இல் , பிர்மின்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்ட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 64 பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்து முல்லாலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 1 நான்குகளும் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 15 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து முல்லாலியின் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1999 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான எல் ஜி கோப்பை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 6 ஓடங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசி 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். இவரின் இந்தப் பந்துவீச்சு விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் பந்துவீச்சில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.
5 இலக்குகள்
தொகுதேர்வுத் துடுப்பாட்டம்
தொகு# | செயல்பாடு | போட்டி | எதிரணி | இடம் | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/142 | 13 | வங்காளதேசம் | தேசியத் துடுப்பாட்ட அரங்கம் | தாக்கா | வங்காளதேசம் | 2000 |
ஒருநாள் போட்டிகள்
தொகு# | செயல்பாடு | போட்டி | எதிரணி | இடம் | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/6 | 46 | தென்னாப்பிரிக்கா | ஜிம்கானா துடுப்பாட்ட அரங்கம் | நைரோபி | கென்யா | 1999 |
சான்றுகள்
தொகு- ↑ Sunil Joshi to retire. Thehindu.com (19 June 2012). Retrieved on 2016-06-17.