கிரோனா பெருங்கோவில்

ரோமானிய காதோலிக் புனித ஆலயம்,கீரோனா,கட்டலோனியா(ஸ்பெயின்)

கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில் என்பது கிரோனா ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள காத்தலோனியாவின் கிரோனாவில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதியில் காணப்படும் கோயிலின் நடுக்கூடம் கோதிக் கட்டடக்கலை வடிவமைப்பில் அமைந்த அகலமான நடுக்கூடம் ஆகும். இதன் அகலம் 22 மீட்டர்கள் (72 அடி), மற்றும் இது ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் புனித பேதுரு பேராலயத்திற்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய அகலமான நடுக்கூடத்தைக் கொண்ட பெருங்கோவில் ஆகும். பதினோராம் நூற்றாண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது ரோமனெஸ்க் பாணியிலேயே அமைக்கப்பட்டது, பின் 13 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து கோதிக் பாணியில் அமைக்கப்பட்டது. பெருங்கோவில் நாற்பத்தைந்து மீட்டர்கள் உயரம் கொண்டது.

கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில்
Cathedral of Saint Mary of Girona
Santa Maria de Girona
Cathedral of Saint Mary of Girona
தேவாலயம் ஒரு கோபுரத்துடனான தோற்றம்.
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கிரோனா, காத்தலோனியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்41°59′15″N 2°49′35″E / 41.98750°N 2.82639°E / 41.98750; 2.82639
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைலத்தின்
மண்டலம்கிரோனா ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1038[1]
நிலைபெருங்கோவில்
தலைமைபிரான்செஸ்க் பார்டோ இ அர்டிகாஸ்
இணையத்
தளம்
catedraldegirona.org
கிரோனா தேவாலயத்தின் தோற்றம்
பெருங்கோவிலின் நில அமைப்பு

வரலாறு

தொகு

இஸ்லாமியர்களின் ஐபீரியா வெற்றிக்கு முன்னர் ஒரு பழங்கால கிரிஸ்துவ தேவாலயம் ஒன்று இருந்தது, அதன் பிறகு 717 ல் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. 785 ஆம் ஆண்டில் பிராங்கு நகரத்தை சார்லமேன் கைப்பற்றினார், மேலும் தேவாலயத்தில் 908 இல் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

படக் காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Official website of the Cathedral of Girona. "Chronology - Cathedral's history". பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Girona
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரோனா_பெருங்கோவில்&oldid=4180265" இலிருந்து மீள்விக்கப்பட்டது