கிரோன் கெர்
கிரோன் அனுபம் கெர் (Kirron Anupam Kher) "கிரன்" என்ற பெயருடன் [1] 1955 ஜூன் 14 அன்று பிறந்த ஒரு இந்திய நாடக, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். மே 2014 இல், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, சண்டிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிரோன் கெர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் சண்டிகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | பவன்குமார் பன்சால் |
பெரும்பான்மை | 69,642 (15.40%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கிரன் தாக்கர் சிங் 14 சூன் 1955 போட்டட், பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர்(கள்) | கௌதம் பெர்ரி (விவாகரத்து) அனுபம் கெர் (1985 முதல் தற்போது வரை) |
பிள்ளைகள் | சிக்கந்தர் பெர் கெர்]] (கவுதம் பெரியுடன்) |
வேலை | நடிகை, அரசியல்வாதி |
குடும்பம்
தொகுகிரன் கெர் 14 ஜூன் 1955 இல் ஒரு ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார், சண்டிகரில் வளர்ந்தார்.[2][3] அவரது பெற்றோர்களால் "கிரன்" என்ற பெயரிடப்பட்டது, அவருடைய முழுப்பெயர் "கிரன் தாக்கர் சிங்" என்பதாகும். கவுதம் பெர்ரிக்கு தனது முதல் திருமணத்தின் போது, அவர் "கிரன் பெர்ரி" என்று அழைக்கப்பட்டார். அனுபம் கெருடன் திருமணம் செய்தபோது, அவர் தனது முதல் பெயரை மறுபடியும் தனது கணவரின் குடும்பத்தோடு சேர்த்து, "கிரண் தாக்கர் சிங் கெர்" என்று மற்றிக்கொண்டார். பின்னர் எண் சோதிடத்தை நம்பினார் ,மற்றும் 2003இல் தனது 48 வய்தில் எண் கணித அடிப்படையில் தனது பெயரை "கிரன் என்பதிலிருந்து " கிரோன்" என் மாற்றிகொ கொண்டார்.[4] அவர் தனது ஆரம்பப் பெயர்களை கைவிட்டு, "கிர்ரோன் கெர்" என்று அறியப்பட்டார். அவர் சில நேரங்களில் "இந்தியாவின் பாட்டி" என்று அழைக்கப்படுகிறார்.
இளமைப் பருவம்
தொகுகிரோன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் தனது பள்ளி படிப்பை மேற்கொண்டார்.[5] ம்ற்றும் சண்டிகரில் படிப்பைத் தொடர்ந்தார், மேலும் சண்டிகர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இந்திய நாடகத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பை சார்ந்த தொழிலதிபராக கௌதம் பெர்ரியை மணந்தார்,அவருக்கு சிக்கந்தர் கெர் என்ற ஒரு மகன் இருக்கிறார்.[6]
அரசியல்
தொகுபாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து மே 2014 இல்,இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, சண்டிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
விமர்சனம்
தொகுசண்டிகரில் ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஒரு பெண் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பெண்கள் அந்நியர்களோடு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இவர் கூறுயது எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் விமர்சனங்களை பெற்றது.[8][9]
குறிப்புகள்
தொகு- ↑ "Always there, from tiny steps to big leaps". Archived from the original on 10 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-11-29.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) இந்தியன் எக்சுபிரசு, 12 May 2002. - ↑ "Sikandar is blessed to have Anupam as his stepfather: Kiran Kher". The Times of India. 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.
- ↑ "Distinguished Alumni". Panjab University. Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
- ↑ Numerology: Bust or boom? பரணிடப்பட்டது 2013-06-28 at Archive.today Times of India, 20 August 2003.
- ↑ https://www.hindustantimes.com/chandigarh/shifting-roles-yet-keeping-it-real/story-uY0Xn00Sw5k56LMZClRI6O.html
- ↑ Kiran Kher on her son, Sikander ரெடிப்.காம், 2 June 2008.
- ↑ "Trying to get Film City for Chandigarh soon: Kirron Kher | Business Standard News". Business-standard.com. 2014-08-25. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "Never Blamed Or Shamed Gang-Rape Survivor, Says Kirron Kher After Outrage" இம் மூலத்தில் இருந்து 10 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171210230120/https://www.ndtv.com/india-news/slammed-for-comment-on-gang-rape-survivor-kirron-kher-clarifies-1781968.
- ↑ "Kirron Kher shames Chandigarh rape victim, enraged Twitterati erupt" இம் மூலத்தில் இருந்து 9 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171209185150/https://www.deccanchronicle.com/entertainment/bollywood/301117/kirron-kher-shames-rape-victim-enraged-twitterati-erupt.html.