கிர்பால் சிங் சுக்

கிர்பால் சிங் சுக் (Kirpal Singh Chugh, பிறப்பு:12 டிசம்பர், 1932[1], இறப்பு:17 செப்டம்பர் 2017) இந்திய சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்[2]. இவர் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரசுக்கு அருகிலுள்ள பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்[3] .

கிர்பால் சிங் சுக்
பிறப்பு12 டிசம்பர் 1932
பட்டி, அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
இறப்பு17 செப்டம்பர் 2017(2017-09-17) (அகவை 84)
பணிசிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்
விருதுகள்பத்ம ஸ்ரீ
பி.சி.ராய் விருது
தேசிய சிறுநீரக அறக்கட்டளை விருது
நிஹோன் பல்கலைகழக மருத்துவ பள்ளியின் தங்க பதக்கம்
ICMR முதன்மை ஆராய்ச்சி விருது
மோடஷா நினைவு விருது
எம். டி. அடாடியா விருது
இந்தியன் சொசைட்டி ஆஃப் நெப்ரோலஜிஷ்ட் விருது
அசோசியேஷன் ஆஃப் பிஸிஸீயன்ஸ் ஆஃப் இந்தியா விருது
கே.பி.கன்வர் நினைவு விருது
தன்வந்திரி தேசிய விருது
நெப்ரோலஜி ஃபோரம் விருது

சுக் இந்தியாவின் முதல் தகுதி வாய்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராவார்[4]. 1956 ஆம் ஆண்டு முதல் சிறுநீரக மருத்துவ துறையைத் துவங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்த காரணத்தால் இந்திய சிறுநீரகவியலின் தந்தை என பலராலும் அழைக்கப்படுகிறார்[3]. மேலும் சிறுநீரகவியலில் முதல் மருத்துவ பட்டபடிப்பை சண்டிகரிலுள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் துவங்கினார்[3].

விருதுகளும் மரியாதைகளும்தொகு

இவர் பி.சி.ராய் விருது,தேசிய சிறுநீரக அறக்கட்டளை விருது, நிஹோன் பல்கலைகழக மருத்துவ பள்ளியின் தங்க பதக்கம் ICMR முதன்மை ஆராய்ச்சி விருது, மோடஷா நினைவு விருது, எம். டி. அடாடியா விருது, இந்தியன் சொசைட்டி ஆஃப் நெப்ரோலஜிஷ்ட் விருது, அசோசியேஷன் ஆஃப் பிஸிஸீயன்ஸ் ஆஃப் இந்தியா விருது, கே.பி.கன்வர் நினைவு விருது, தன்வந்திரி தேசிய விருது, நெப்ரோலஜி ஃபோரம் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்[1][3]. உலக சிறுநீரக மன்றத்தின் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும்[5] தேசிய மருத்துவ அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்[6]. இந்திய அரசாங்கத்தின் நான்காவது மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை 2000 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்[7].

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "ISN Video Legacy Project". ISN Video Legacy Project (2014). பார்த்த நாள் December 29, 2014.
  2. "Zoom Info". Zoom Info (2014). பார்த்த நாள் December 29, 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 "Scientist India". Scientist India (2014). பார்த்த நாள் December 29, 2014.
  4. "Lokvani". Lokvani (2014). பார்த்த நாள் December 29, 2014.
  5. "American Journal of Kidney Diseases". American Journal of Kidney Diseases (2009). பார்த்த நாள் December 29, 2014.
  6. "List of Fellows - NAMS". National Academy of Medical Sciences (2016). பார்த்த நாள் March 19, 2016.
  7. "Padma Awards". Padma Awards (2014). மூல முகவரியிலிருந்து நவம்பர் 15, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 11, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்பால்_சிங்_சுக்&oldid=3240192" இருந்து மீள்விக்கப்பட்டது