கிறிச்சடை

கடல் மீனினம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Elagatis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கிறிச்சடை (Elagatis bipinnulata) என்பது சாக் குடும்பத்தின் பாரை இன கடல் மீன் ஆகும். இந்த மீனினமானது உலகின் வெப்பமண்டல கடல் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இவை கடலோர, கடல் பகுதிகளில் வசிக்கின்றன. கிறிசடை அதன் உடல் வடிவத்தால் எளிதில் இனம் காணக்கூடியதாக உள்ளது. அதன் உடலில் உள்ள அற்புதமான வண்ணங்களினால் பார்வைக்கு அழகாக உள்ளதால் இது ரெயின்போ ரன்னர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது வேகமாக நீந்தக்கூடியது. இது சிறிய மீன்களையும், தலைக்காலிகளையும், பலவகையான மிதவைவாழிகளையும், ஓடுடைய கணுக்காலிகளையும் வேட்டையாடி உண்கிறது. இந்த மீனினிமானது பாலியல் முதிர்ச்சியை 60 cm (24 அங்), அளவில் அடைகிறது. இதன் முட்டையிடுதல் வெவ்வேறு நேரங்களில் நடைபெறுகிறது, சில வகையின ஆண்டு முழுவதும் முட்டையிடுகிறன. பிற ஆண்டின் சில நேரங்களில் மட்டுமே முட்டையிடுகிறன. இது பல்வேறு மீன்பிடி முறைகளால் பிடிபடுகிறது. இது உண்பதற்கு சுவையான மீன் ஆகும். சிறிய கிறிசடை மீன்களை சூரை, சுறா போன்ற மீன்களை பிடிக்க போடும் தூண்டில்களில் சிலர் இரை மீக்களாக பயன்படுத்துகின்றனர். சிறிய அளிவலான கிறிச்சடை மீன்களை வடதமிழகத்தில் பூங்குழலி என அழைக்கின்றனர்.

கிறிச்சடை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Elagatis
இனம்:
இருசொற் பெயரீடு
Elagatis bipinnulata
(Quoy & Gaimard, 1825)
Approximate range of the rainbow runner
வேறு பெயர்கள் [2]
  • Seriola bipinnulata,
    Quoy and Gaimard, 1825
  • Seriolichthys bipinnulatus,
    (Quoy and Gaimard, 1825)
  • Micropteryx bipinnulatus,
    (Quoy and Gaimard, 1825)
  • Elagatis bipinnulatus,
    (Quoy and Gaimard, 1825)
  • Irex indicus,
    Valenciennes, 1862

விளக்கம்

தொகு
 
கிறிச்சடை மீன் கூட்டம்

கிறிசடை மீனானது வானவில் போன்ற ஏழுவண்ணங்களைக் கொண்ட மீனாகும். அதனாலேயே இது ரெயின்போ ரன்னர் என்று அழைக்கப்படுகிறது. இது நீளமான கூறிய தலையையும், சிறிய முதுகு துடுப்பும், நீர்மூழ்கிக் குண்டு போன்ற உருளையான உடலமைப்பும் நீரைக் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல உதவும் வகையில் உள்ளது. இதன் துடுப்புகள் மஞ்சள் நிறம் கொண்டவை. இதற்கு இரண்டு முதுகு துடுப்புகள் உண்டு. இதன் உடலின் மேற்பகுதி அடர் நீலம் அல்லது ஒவிவியபச்சை நிறத்திலும், நடுப்பகுதி நீல நிறத்திலும், அடிப்பகுதி வெண்நிறத்திலும் இருக்கும். மேலும் இதன் உடலில் நீளவாக்கில் இளநீல நிறக் கோடுகள் இரண்டு செல்லும். உடலின் குறுக்கே மஞ்சள் நிற வரிப்பட்டைகள் உண்டு.[3]

இந்த மீன்களின் அதிகபட்ச நீளத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. பெரும்பாலான ஆதாரங்களின்படி 107 முதல் 120 செமீ (42 மற்றும் 47 அங்குல) அளவு கொண்டவை. அதே சமயம் ஒரு தரவானது 180 செ.மீ. 71 அங்குலம்) நீளத்தில் காணப்பட்டுள்ளதாக கூறுகிறது.[4] சர்வதேச மீன்பிடி விளையாட்டு சங்கம் செய்த பதிவுசெய்தபடி, அதிகபட்சமாக அறியப்பட்ட எடை 46.2 கிலோ என அறியப்படுகிறது. [2]

இந்த மீன்கள் நான்கடி நீளம் வரை வளரக்கூடியன. நன்கு வளர்ந்த மீன்கள் 40 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கும். இளம் கிறிசடை மீன்கள் கூட்டமாக உலவும் தன்மை கொண்டவை. பெரிய மீன்கள் தனியாக அலையக்கூடியவை.

குறிப்புகள்

தொகு
  1. Smith-Vaniz, W.F.; Williams, J.T.; Pina Amargos, F.; Curtis, M.; Brown, J. (2015). "Elagatis bipinnulata". IUCN Red List of Threatened Species 2015: e.T16440027A16510157. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T16440027A16510157.en. https://www.iucnredlist.org/species/16440027/16510157. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). Elagatis &speciesname=bipinnulata" Elagatis bipinnulata " in FishBase. August 2019 version.
  3. Randall, John E. (1995). Coastal Fishes of Oman. Honolulu: University of Hawaii Press. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-1808-1.
  4. Claro, R. (1994). R. Claro - Ecología de los peces marinos de Cuba (ed.). Características generales de la ictiofauna. Instituto de Oceanología Academia de Ciencias de Cuba and Centro de Investigaciones de Quintana Roo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிச்சடை&oldid=3928924" இலிருந்து மீள்விக்கப்பட்டது