மீன் ஒரு மனித உணவு
இன்றைய காலகட்டத்தில் அநேக மீன் இனங்கள் உலகம் முழுவதும் மனித உணவாக அருந்தப்படுகிறது. நினைவுக்கு எட்டாத காலங்களிலிருந்தே மீனானது புரதம் மற்றும் மனிதர்களுக்கு வேண்டிய இதரச் சத்துக்களின் இருப்பிடமாக முக்கிய ஆதாரமாக உள்ளது.

சமையல் மற்றும் மீன் என்று ஒரு அமைப்பை எடுத்துக் கொண்டால் நாம் முதலில் ஓட்டுடலிகளான “ஷெல் மீனைத்” தான் சேர்க்க வேண்டும். இவற்றில் மெல்லுடலிகள், ஓடுடைய கணுக்காலிகள் மற்றும் முட்தோலிகள் போன்ற மீன் வகைகள் சேரும். ஆங்கிலத்தில் மீன் மற்றும் அதில் சமைக்கப்பட்ட உணவை வேறுபடுத்துவதில்லை. தற்போதைய நவீன ஆங்கிலச் சொல்லான ஃபிஷ் என்பது பண்டைய ஆங்கிலச் சொல்லான ஃபிஸ்க் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. ஆங்கிலத்தில் கடல் உணவு என்பது கடல், பெருங்கடல் மற்றும் மற்ற கடல்சார் இடங்களில் காணப்படும் மீனையும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவையும் குறிக்கும்.
மீனின வகைகள்தொகு
32,000 மேற்பட்ட வகையான மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1] இதனால் இது முதுகெலும்பு பிராணிகளில் பல்வேறு தன்மை கொண்ட குழுவாக அறியப்படுகிறது. இது போக அநேக வகை ஓட்டுடலிகளும் காணப்படுகிறது. ஆனாலும் ஒரு சிறிய அளவு மீன் வகைகளே உணவாக உண்ணப்படுகிறது.
மீன் உணவு தயாரிக்கும் விதம்தொகு
மீனானது பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. சமைக்காமல் (பச்சையாக) (எ.டு. சசிமி), காடியில் ஊறவைத்துப் பதப்படுத்தப்பட்ட மீனாக (எ.டு. செவிச்) அல்லது வேவித்தல், அடுதல் மற்றும் பொரித்தல் மூலம் சமைக்கப்பட்ட உணவாக (எ.டு. வறுத்த மீன், பொரித்த மீன், குழம்பு மீன்), தீயில் வாட்டுவது அல்லது வெள்ளை ஒயினில் சமைப்பது (எ.டு. கோர்ட் – பௌஇலான்) அல்லது ஆவியில் வேகவைத்தல் ஆகியவை சில வகை உணவு தயாரிக்கும் முறைகளாகும். பலதரப்பட்ட நாட்டுப் பண்பாடுப்படி உபயோகப்படுத்தப் பட்ட சமையல் முறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு முறைகள் தற்போதைய நவீன காலத்திற்கு தேவையற்றதாக இருந்தாலும் அவைகள் தரும் ருசி மற்றும் உணவின் தன்மைக்காக பயன் படுத்தப் படுகிறது.
ஊட்டச் சத்து மதிப்புதொகு
100கி வெள்ளை அல்லது எண்ணெய் மீனின் ஊட்டச்சத்துக்களின் ஒப்பீடு | |||
---|---|---|---|
ஊட்டச்சத்து | வெள்ளைமீன் அலாஸ்கா பொலொக்[2] |
எண்ணெய் மீன் அத்திலாந்திக்கு வாளை[3] |
|
ஆற்றல் (கிகலோரிl) | 111 | 203 | |
புரதம் (கி) | 23 | 23 | |
கொழுப்பு (கி) | 1 | 12 | |
கொலஸ்டிரால் (மிகி) | 86 | 77 | |
உயிர்ச்சத்து பி-12 (µg) | 4 | 13 | |
பாசுபரசு (மிகி) | 267 | 303 | |
செலீனியம் (µg) | 44 | 47 | |
ஒமேகா-3 (mg) | 509 | 2014 |
இடைநிலை தொழிற்நுட்ப வெளியீட்டுக் கழகம் 1992 இல் மீனானது மிகவும் தரம் வாய்ந்த உயர் நிலை புரதம் கொண்டுள்ளது மற்றும் அவற்றில் அநேக உயிர்ச்சத்துகளும் தாது உப்புக்களும் காணப்படுகின்றன என எழுதியது. இவைகள் வெள்ளை மீன்கள், எண்ணெய் மீன்கள் அல்லது ஓட்டுடலிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வெள்ளை மீன் எடுத்துக் காட்டாக பன்னா மற்றும் வஞ்சீரம் மீன்களில் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்து காணப்படுகிறது (பொதுவாக 1% ற்கும் குறைவு). எண்ணெய் மீன்கள் எடுத்துக்காட்டாக சாளை அல்லது மத்தி மீன்கள் 10 – 25% கொழுப்புச் சத்து உடையவை. ஆனால் ஓட்டுடலிகள் அவைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்துக் காரணமாக கொழுப்பில் கரையும் விட்டமின்களை (ஏ,டி,ஈ மற்றும் கே) கொணட்தாகக் காணப் படுகிறது. மேலும் முக்கிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் உடையதாக்க் காணப் படுகிறது. இவைகள் அனைத்தும் மனித உடலின் உடலியக்கச் செயல் பாடுகளுக்கு மிகவும் அவசியமானதாகும்.
மீன் உணவு தரும் ஆரோக்கிய நன்மைகள்தொகு
மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் முக்கியமாக கடற்பரப்புகளில் வாழும் மீன்களில் காணப்படும் அதிக ஆரோக்கிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதாக கண்டறியப்பட்டது. அது மட்டுமல்ல இவைகள் மனித இதயத்திற்கு நல்லது என்றும் மூளை வளர்ச்சிக்கும் இன பெருக்கத்திற்கும் இது அதிக உதவியாகக் காணப்படுகிறது என்றும் அறியப்பட்டது. இந்த ஆராய்ச்சி மனித வாழ்க்கைக்கு மீன் எவ்வளவு முக்கிய காரணமாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டு காட்டியது.
உசாத்துணைதொகு
இந்தக் கட்டுரை கட்டற்ற ஆக்கம் ஒன்றின் உரைக் பகுதியைக் கொண்டுள்ளது. Licensed under CC BY-SA 3.0 IGO License statement: In brief, The State of World Fisheries and Aquaculture, 2018, FAO, FAO.
குறிப்புகள்தொகு
- ↑ FishBase: June 2012 update. Retrieved 18 June 2012.
- ↑ United States Department of Agriculture (செப்டெம்பர் 2011). "Nutrient data for 15067, Fish, pollock, walleye, cooked, dry heat". USDA National Nutrient Database for Standard Reference, Release 24. 5 ஜனவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ United States Department of Agriculture (செப்டெம்பர் 2011). "Nutrient data for 15040, Fish, herring, Atlantic, cooked, dry heat". USDA National Nutrient Database for Standard Reference, Release 24. 8 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
மேற்கோள்கள்தொகு
- Aquamedia, "Consumption of Fishery Products" retrieved from https://web.archive.org/web/20060223203558/http://www.feap.info/economics/Tradebalance_en.asp on 2007-09-17.
- Paston-Williams, Sara (2006) Fish: Recipes from a Busy Island National Trust Books. ISBN 9781905400072.
- Sweetser, Wendy (2009) The Connoisseur's Guide to Fish & Seafood Sterling Publishing Company,. ISBN 9781402770517.
- Tidwell, J. H.; Allan, G. L. (2001). "Fish as food: Aquaculture's contribution: Ecological and economic impacts and contributions of fish farming and capture fisheries". EMBO Reports 2 (11): 958–963. doi:10.1093/embo-reports/kve236. பப்மெட்:11713181.
- University of Michigan Health System, "Fish & Seafood" retrieved from https://web.archive.org/web/20070526011755/http://www.med.umich.edu/umim/clinical/pyramid/fish.htm on 2007-09-17.
- VegDining.com, "Frequently Asked Questions-Definitions" retrieved from http://www.ivu.org/faq/definitions.html on 2007-09-17.
- The State of World Fisheries and Aquaculture 2000, 2000, retrieved from http://www.who.int/nutrition/topics/3_foodconsumption/en/index5.html on 2007-11-17. உலக சுகாதார அமைப்பு.
வெளி இணைப்புகள்தொகு
விக்கி ஊடக நடுவத்தில்: |
விக்கிநூல்கள் சமையல் நூலானது ஒரு சமையற் குறிப்பை அல்லது கையேட்டைக் கொண்டுள்ளது. |
- Science Daily Benefits Of Eating Fish Greatly Outweigh The Risks, New Study Says
- Science Daily Experts Say Consumers Can Eat Around Toxins In Fish
- Scientific American Soy and fish protect from cancer: study.
- Seafood Recipes பரணிடப்பட்டது 2019-12-21 at the வந்தவழி இயந்திரம் from Gourmet Recipe.
- "Fish as Food". New International Encyclopedia. (1905).