கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்

(கிறிஸ்டீனா ஃபெர்னாண்டெஸ் தெ கிர்ச்னர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிறிஸ்டினா எலிசபெத் ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர் (Cristina Elisabet Fernández de Kirchner, எசுப்பானிய ஒலிப்பு: [kɾisˈtina eˈlisaβet ferˈnandes ðe ˈkiɾʃneɾ][2]; பிறப்பு பெப்ரவரி 19, 1953), பொதுவாக கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் அல்லது கிறிஸ்டினா கிர்ச்னர் (அல்லது எளிமையாக கிறிஸ்டினா) எனவும் அறியப்படுபவர்,[3] அர்ச்சென்டினாவை ச் சேர்ந்த அரசியல்வாதியும் 2007 முதல் 2015 வரை அர்சென்டினாவின் குடியரசுத்தலைவராக பதவி வகித்தவரும் ஆவார். இவர் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் நெசுடர் கிர்ச்னரின் மனைவி ஆவார். அர்ச்சென்டினாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் (1974-76 ஆண்டுகளில் பதவியேற்ற இசபெல் மார்ட்டினெசு தெ பெரோனை அடுத்து) அனைத்து வகைகளிலும் இரண்டாவது பெண் குடியரசுத்தலைவராகவும் பொறுப்பேற்ற பெருமை கொண்டவர். ஜஸ்டிசியலிஸ்ட் கட்சியின் சார்பில் அர்ச்சென்டினாவின் துணைவர் மன்றத்திலும் (Argentine Chamber of Deputies) மூன்று முறை மாநில செனடராகவும் இருந்துள்ளார்.

கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்னர்
அர்ச்சென்டினாவின் குடியரசுத் தலைவர்
பதவியில்
10 திசம்பர் 2007 – 9 திசம்பர் 2015
துணை அதிபர்ஜூலியோ கோபோசு
அமாடோ பௌடோ (தேர்வு)
முன்னையவர்நெசுடர் கிர்ச்னர்
பின்னவர்மொரிசியோ மாக்ரி
அர்ச்சென்டினாவின் முதல் சீமாட்டி
பதவியில்
மே 25, 2003 – திசம்பர் 10, 2007
குடியரசுத் தலைவர்நெசுடர் கிர்ச்னர்
முன்னையவர்இல்டா தெ துகால்டே
பின்னவர்நெசுடர் கிர்ச்னர்(முதல் சீமாட்டி
புவனெஸ் ஐரிஸ் மாநில செனடர்
பதவியில்
திசம்பர் 10, 2005 – நவம்பர் 28, 2007
சான்டா குருஸ் மாநில செனடர்
பதவியில்
திசம்பர் 10, 2001 – திசம்பர் 9, 2005
பதவியில்
திசம்பர் 10, 1995 – திசம்பர் 3, 1997
சான்டா குருஸ் மாநில துணைவர்
பதவியில்
திசம்பர் 10, 1997 – திசம்பர் 9, 2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமுதல் சீமான்)
19 பெப்ரவரி 1953 (1953-02-19) (அகவை 71)
லா பிளாடா, அர்ச்சென்டினா[1]
இறப்புமுதல் சீமான்)
இளைப்பாறுமிடம்முதல் சீமான்)
அரசியல் கட்சிவெற்றிக்கான அணி (Front for Victory)
ஜஸ்டிசியலிஸ்ட் கட்சி
துணைவர்நெசுடர் கிர்ச்னர் (1975–2010)
பிள்ளைகள்மாக்சிமோ, பிளோரென்சியா
பெற்றோர்
  • முதல் சீமான்)
முன்னாள் கல்லூரிலா பிளாடா தேசிய பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
கையெழுத்து
இணையத்தளம்அலுவல்முறை இணையதளம்

மேற்கோள்கள்

தொகு
  1. Presidency of the Argentine Nation. "The President Biography" (in Spanish). பார்க்கப்பட்ட நாள் 2009-04-03.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. இதுவே பெரும்பான்மையர் பலுக்கும் முறையாக இருப்பினும் இதற்கு ஆதாரமில்லை; நெசுடர் கிர்ச்னரே எசுப்பானிய ஒலிப்பு: [ˈkirner]எனக் குறிப்பிடுவதுண்டு.
  3. She is also variously known as CFK, Cristina K, Kristina, Reina Cristina (Queen Cristina), Señora K / Sra. K (Mrs. K) or simply Cristina.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cristina Fernández de Kirchner
என்பதில் ஊடகங்கள் உள்ளன.