கிறிஸ்டைன் லகார்டே
கிறிஸ்டைன் மேடலீன் ஓடெட் லகார்டே (Christine Madeleine Odette Lagarde, பிறப்பு 1 சனவரி 1956)[1] பிரான்சின் தற்போதைய நிதி அமைச்சரும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் பெண் தலைவராக சூலை 5, 2011 அன்று பொறுப்பேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளவருமாவார்[2]. சூன் 2007 அன்று பிரான்சின் நிதி அமைச்சராக குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியால் நியமிக்கப்பட்டார். முன்னதாக, டொமினிக் வில்லெபின்னின் அரசில் வேளாண் அமைச்சராகவும் வணிக அமைச்சராகவும் பங்காற்றி யுள்ளார். ஜி8 நாடுகள் ஒன்றில் பொருளாதார விவகார அமைச்சராகப் பணியாற்றிய முதல் பெண் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் தலைவர் என்ற பெருமையும் கொண்டவர்.[3]
கிறிஸ்டைன் லகார்டே | |
---|---|
மேலாண் இயக்குநர், பன்னாட்டு நாணய நிதியம் அறிவிகப்பட்ட | |
பதவியில் 5 சூலை 2011 | |
Deputy | ஜான் லிப்ஸ்கி |
Succeeding | ஜான் லிப்ஸ்கி (பொறுப்பில்) |
பிரான்சு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 சூன் 2007 | |
பிரதமர் | பான்சுவா ஃபில்லோன் |
முன்னையவர் | யான் லூயி போர்லூ |
பின்னவர் | தீர்மானிக்கபடவில்லை |
வேளாண் அமைச்சர் | |
பதவியில் 18 மே 2007 – 19 சூன் 2007 | |
பிரதமர் | பான்சுவா ஃபில்லோன் |
முன்னையவர் | டொமினிக் புசரோ |
பின்னவர் | மைக்கேல் பார்னியர் |
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் | |
பதவியில் 31 மே 2005 – 18 மே 2007 | |
பிரதமர் | டொமினிக் டி வில்லேபின் |
முன்னையவர் | கிறிஸ்டியன் ஜாகப் |
பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரான்சின் நிதி அமைச்சர் 1 சனவரி 1956 பாரிசு, பிரான்சு |
இறப்பு | பிரான்சின் நிதி அமைச்சர் |
இளைப்பாறுமிடம் | பிரான்சின் நிதி அமைச்சர் |
அரசியல் கட்சி | யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | பாரிசு மேற்கு பல்கலைக்கழகம் நான்டெர்ரெ லா டிஃபென்சு அரசறிவியல் கல்வி நிறுவனம், ஏய்க்ஸ்-ஆன்-பிரொவின்சு |
ஏகபோகத்திற்கு எதிரான மற்றும் தொழிலாளர் நலன் வழக்கறிஞராக அறியப்பட்ட லகார்டே பன்னாட்டு சட்ட நிறுவனம், பேக்கர் & மெக்கன்சியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 16, 2009 நாளிட்ட த பினான்சியல் டைம்ஸ் இதழ் ஐரோப்பிய வலயத்தில் மிகச்சிறந்த நிதி அமைச்சராக தரவரிசைப்படுத்தி உள்ளது.[4] 2009ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் மிகச் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் லகார்டே 17வதாக குறிப்பிடப்பட்டுள்ளார் .[5]
சூன் 28, 2011, பாலியல் குற்றவழக்குத் தொடரப்பட்டுள்ள டொமினிக் ஸ்ட்ராஸ்-கானிற்கு மாற்றாக பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த மேலாண் இயக்குனராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். சூலை 5, 2011 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.[3][6][7]
ஊடகம்
தொகு2011 ஆண்டு வெளியான எச்பிஓ நிறுவனத்தின் டூ பிக் டு ஃபெயில் என்ற திரைப்படத்தில் லைலா ராபின்சு என்ற நடிகை லகார்டேயாக சித்தரிக்கப்படுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Le Nouvel Economiste". Archived from the original on 2011-08-28. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
- ↑ "ஐஎம்எப்பின் முதல் பெண் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே!". Archived from the original on 2011-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
- ↑ 3.0 3.1 "IMF Executive Board Selects Christine Lagarde as Managing Director". Press Release. IMF. 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 28 June 2011.
- ↑ From Ralph Atkins, Andrew Whiffin and FT reporters. (16 October 2009). "FT ranking of EU finance ministers". Financial Times. http://www.ft.com/cms/s/0/3f36c9c4-d2d0-11de-af63-00144feabdc0.html?nclick_check=1. பார்த்த நாள்: 2 January 2010.
- ↑ (ஆங்கில மொழியில்) « The 100 Most Powerful Women », forbes.com
- ↑ "France's Lagarde elected new IMF chief". Reuters. 28 June 2011.
- ↑ "Christine Lagarde named IMF chief". BBC News. 28 June 2011. பார்க்கப்பட்ட நாள் 28 June 2011.