கிளாடியோ ரனெய்ரி
கிளாடியோ ரனெய்ரி (Claudio Ranieri, பிறப்பு 20 அக்டோபர், 1951) இத்தாலி நாட்டைச் சேர்ந்த கால்பந்து மேலாளர் ஆவார். மேலும் இவர் முன்னாள் வீரரும் ஆவார்; ஆட்டக்காலத்தில் தடுப்பாட்டக்காரராக இருந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரீமியர் லீக் அணியான லெஸ்டர் சிட்டி அணியின் மேலாளராகவிருக்கிறார். லெஸ்டர் அணியின் மேலாளராவதற்கு முன்னர், பல நாடுகளில் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவில் பல்வேறு அணிகளுடன் பல கோப்பைகளை வென்றிருப்பினும் அவ்வணிகளுடன் ஒருமுறை கூட கூட்டிணைவுத் தொடரை வெல்லாமல் இருந்தார். 2014-15 ஆம் ஆண்டில் தகுதியிறக்கப் போராட்டத்தில் இருந்த லெஸ்டர் அணியை 2015-16- ஆம் பருவத்தில் பிரீமியர் லீக் கூட்டிணைவுத் தொடரை வெல்லச் செய்தார்.
2011-இல் இன்டர் மிலான் அணியுடன் ரனெய்ரி | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 20 அக்டோபர் 1951 | ||
பிறந்த இடம் | ரோம், இத்தாலி | ||
ஆடும் நிலை(கள்) | தடுப்பாட்டக்காரர் (பின்களவீரர்) | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | லெஸ்டர் சிட்டி (மேலாளர்) | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1973–1974 | ரோமா | 6 | (0) |
1974–1982 | F.C. Catanzaro | 225 | (8) |
1982–1984 | Calcio Catania | 92 | (1) |
1984–1986 | U.S. Città di Palermo | 40 | (0) |
மொத்தம் | 363 | (9) | |
மேலாளர் வாழ்வழி | |||
1986–1987 | Vigor Lamezia Calcio | ||
1987–1988 | F.C. Pozzuoli | ||
1988–1991 | Cagliari Calcio | ||
1991–1993 | S.S.C. Napoli | ||
1993–1997 | ACF Fiorentina | ||
1997–1999 | வேலன்சியா | ||
1999–2000 | அத்லெடிகோ மாட்ரிட் | ||
2000–2004 | செல்சீ | ||
2004–2005 | வேலன்சியா | ||
2007 | பர்மா கால்பந்துக் கழகம் | ||
2007–2009 | யுவென்டசு | ||
2009–2011 | ரோமா | ||
2011–2012 | இன்டர் மிலான் | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |