கிளைவழி கள்ளர்கள்

கள்ளர் சாதியின் ஒரு உட்பிரிவு

கிளைவழி கள்ளர்கள் (Kilaivazhi Kallar) எனப்படுவோர் தமிழகத்தில் உள்ள போர்க்குடி கள்ளர் சமூகத்தின் கிளைப்பிரிவுகளில் உள்ள ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்களும் முக்குலத்தோர்களின் ஒரு பிரிவினர் ஆவர்.

வரலாறு

தொகு

தமிழ்நாட்டில், வாழ்ந்து வருகின்ற கள்ளர் மரபினரின், ஒரு பிரிவினர்கள் கிளைவழி கள்ளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் அம்பலக்காரர், சேர்வைக்காரர் பட்டப்பெயர்களை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தாய்வழி உறவு முறையை பின்பற்றும் பழக்கமுடையவர்கள். இவர்கள் அரசியான், அரியாதன் , பிச்சையா, சோழான் , அரசனன் , தொண்டைமான், குருவிலி என்ற எழுகிளைகளை பயன்படுத்துகின்றனர். இக்கிளைப்படி தாய்மாமனும், சகோதரி மகளும் ஒரே கிளையை சார்ந்தவர்களாவர். இவர்களிடம் தாய்மாமன் மற்றும் அக்காள் மகளை, திருமணம் செய்யும் முறை முற்றிலுமாக தடைசெய்யப்பட்ட ஒன்று.[1]

சிவகங்கை மாவட்டத்தில், இவர்கள் வாழ்ந்து வருகின்ற பகுதியை பதினான்கு நாடுகளாக பிரித்துள்ளனர். அவைகள் குன்னங்கோட்டை, தென்னிலை, உஞ்சனை, இரவுசேரி, செம்பொன்மாரி கப்பலூர், இரும்பா, சிலம்பா, வடம்போகி, தேர்போகி, கோபால, ஏழுகோட்டை, ஆற்றங்கரை, முத்து நாடுகள் ஆகும்.

பதினான்கு நாடுகளுக்கும் தலைமையாக உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி நாட்டின் அம்பலங்கள் அல்லது நாட்டார்கள் உள்ளனர். கண்டதேவி பகுதியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் இவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.[2][3]

கிளைவழி நாட்டார் கள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.[4]

'அம்பலம்' மற்றும் 'சேர்வை' என்பது தமிழ்நாட்டில் கிளைவழிகள்ளர் சாதியின் ஒரு பட்டம் ஆகும். அழகர்மலையை ஒட்டி அதன்‌ தென்பகுதியிலும்‌ கீழ்ப்பகுதியிலும்‌ அம்பலம்‌ மற்றும் சேர்வை என்னும் பட்டமுடைய கள்ளர் இனத்தவர் வாழ்ந்துவருகின்றனர் என்று தொ. பரமசிவன் தன்னுடைய அழகர் கோயில் நூலில் குறிப்பிடுகிறார்.[5] இப்போது, இது, சாதிப்‌ பெயர்‌ போல்‌ இயற்பெயருக்குப்பின்‌ அம்பலக்காரர்‌ மற்றும் சேர்வைக்காரர் என்று சேர்த்துக்‌ கொள்ளப்படுகின்றது.[6]

கள்ளர்‌ நாடுகளில்‌ ஒவ்வொரு ஊர்களிலும்‌ கள்ளர்‌ குலத்தவரில்‌ ஒருவரோ பலரோ தலைவராக இருப்பார்கள்‌; அவா்களுக்கு அம்பலகாரர்‌ என்று சிறப்புப் பெயர், நாட்டுக்‌ கூட்டங்களில்‌ அந்த அம்பலகாரர்களுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கப்படும்.[7]

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Castes And Tribes Of Southern India Vol. 3. 1909. pp. 72, 73.
  2. உ.கஸ்தூரி காந்தி (1986). நாட்டார் வாழ்வியலும் பண்பாடும். சென்னை: அன்னம். p. 23.
  3. "கண்டதேவி கோயில் திருவிழா". தினமணி.
  4. Ethnographic Notes in Southern India. 1906. pp. 559.
  5. "அழகர் கோயில்".
  6. "செட்டிநாடும் செந்தமிழும்".
  7. "செம்மாதுளை".
  8. "Ex-feudal baron tests clout in Karaikudi for a sixth term". Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவழி_கள்ளர்கள்&oldid=4156796" இலிருந்து மீள்விக்கப்பட்டது