கிழக்கத்திய கருந்நிலைக் கதிர்க்குருவி
கிழக்கு கருந்நிலைக் கதிர்க்குருவி ( Eastern Orphean warbler ) என்பது குர்ருகா பேரினத்தைச் சேர்ந்த ஒரு கதிர்க்குருவி ஆகும். இந்த இனம் கோடையில் மத்தியதரைக் கடலைச் சுற்றி, பால்கன் குடா வழியாக துருக்கி, காக்கேசியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வழியாக நடு ஆசியா வரை காணப்படுகிறது. இது குளிர்காலத்தில் துணை- சகாரா ஆப்பிரிக்காவுக்கு வலசை போகிறது.
கிழக்கத்திய கருந்நிலைக் கதிர்க்குருவி | |
---|---|
உஸ்பெகிஸ்தானில் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Curruca |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CurrucaC. crassirostris
|
இருசொற் பெயரீடு | |
Curruca crassirostris (Cretzschmar, 1830) | |
வேறு பெயர்கள் | |
Sylvia crassirostris |
இப்பறவை இப்பறவை சிட்டுக்குருவியை விடப் பெரியதாக 15-16 செமீ நீளம் வரை இருக்கும். இது சாதாரண கதிர்க்குருவிகளில் மிகப்பெரிய இனங்களில் ஒன்றாகும். முதிர்ந்த ஆண் பறவைகளுக்கு வெற்று கருஞ்சாம்பல் நிற முதுகு இருக்கும். அலகு நீளமாகவும், கூரானதாகவும், கால்கள் கருப்பாகவும் இருக்கும். ஆண் பறவைக்கு அடர் சாம்பல் தலை, கருப்பு கண் பட்டை மற்றும் வெள்ளை தொண்டை இருக்கும். விழிப்படலம் வெண்மையானது. பெண் பறவைகளும், முதிர்ச்சியடையாத பறவைகளும் வெளிர் தலையும், சிவப்பு நிற அடிப்பகுதியையும் கொண்டுள்ளன. அவற்றின் சாம்பல் முதுகில் பழுப்பு நிற சாயம் இருக்கும். இளம் பறவைகளின் விழிப்படலம் கருமையாக இருக்கும். இது மேற்கத்திய கருந்நிலைக் கதிர்க்குருவி படும் பாடலில் இருந்து மிகவும் மாறுபட்டது,[2] இராப்பாடியை மிகவும் நெருங்கியதாக உள்ளது.[2]
குருவி வரிசையைச் சேர்ந்த இந்தச் சிறிய பறவை [3] அடர்த்தி குறைந்த இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றது. புதர் அல்லது மரத்தில் கட்டும் கூட்டில் 4-6 முட்டைகளை இடுகிறது. பெரும்பாலான கதிர்க்குருவிகளைப் போலவே, இப்பறவையும் ஒரு பூச்சியுண்ணி ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2019). "Curruca crassirostris". IUCN Red List of Threatened Species 2019: e.T22734793A155624874. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734793A155624874.en. https://www.iucnredlist.org/species/22734793/155624874. பார்த்த நாள்: 20 October 2022.
- ↑ 2.0 2.1 Snow, David W.; Perrins, Christopher M.; Doherty, Paul & Cramp, Stanley (1998). The complete birds of the western Palaearctic on CD-ROM. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-268579-1.
- ↑ Jønsson, Knud A.; Fjeldså, Jon (2006). A phylogenetic supertree of oscine passerine birds (Aves: Passeri). Zool. Scripta 35(2): 149–186. (HTML abstract). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1463-6409.2006.00221.x.
வெளி இணைப்புகள்
தொகு- Ageing and sexing (PDF) by Javier Blasco-Zumeta பரணிடப்பட்டது 2016-11-08 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிமூலத்தில் உள்ள ஆக்கங்கள்:
- "Beccafico". New International Encyclopedia. (1905).
- "Beccafico". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
- "Beccafico". Encyclopedia Americana. 1920.