கிழக்கு திமோரின் பொருளாதாரம்

கிழக்கு திமோரின் பொருளாதாரம் (Economy of East Timor) ஒரு குறைந்த வருவாய் பொருளாதாரம் என்று உலக வங்கி தரப்படுத்தி உள்ளது.[3] மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் அட்டவணைப்படுத்தினால் இந்நாடு 158 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. அதாவது மனித மேம்பாட்டிற்கான வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதையே இவ்வட்டவணை காட்டுகிறது[4] . மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் வேலையில்லாதவர்களாக உள்ளனர்.[1] மேலும் 52.9 சதவீதம் மக்கள் மிகக்குறைந்த தினவருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பாதிபேர் படிப்பறிவற்றவர்களாக இருக்கின்றனர்.[4]

கிழக்கு திமோர் பொருளாதாரம்
கிழக்கு திமோரின் சந்தை லோசுபலோசு பகுதி.
உலகின் மிகக் குறைவான நகர்மயமாதல் வீதம் 27%,
நாணயம்அமெரிக்க டாலர் மற்றும் கிழக்கு திமோர் சென்டௌகள்[1]
நிதி ஆண்டுநாட்காட்டி ஆண்டு
புள்ளி விவரம்
மொ.உ.உ$1.293 பில்லியன்[2] (2012 திட்டம்.)
மொ.உ.உ வளர்ச்சி8% (2010 திட்டம்.)
நபர்வரி மொ.உ.உ$3,620[2] (PPP, 2012 திட்டம்.)
துறைவாரியாக மொ.உ.உவிவசாயம்: 32.1%, தொழிற்சாலை: 12.9%, அரசுத்துறை: 55% (2005)
பணவீக்கம் (நு.வி.கு)7.8% (2007 திட்டம்.)
கினி குறியீடு38 (2002 திட்டம்.)
வேலையின்மை18% (2010 திட்டம்.)
முக்கிய தொழில்துறைஅச்சிடுதல், சவக்காரம் உற்பத்தி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு , துணிகள் நெசவு
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$16 மில்லியன் (2010 திட்டம்; எண்ணெய் இல்லாமல்)
ஏற்றுமதிப் பொருட்கள்காப்பி, சந்தன மரம், பளிங்குகல்;
இறக்குமதி$194 மில்லியன் (2009 திட்டம்.)
இறக்குமதிப் பொருட்கள்உணவு, பெட்ரோல், மண்ணெண்ணெய், இயந்திரங்கள்
பொது நிதிக்கூறுகள்
அந்நியச் செலாவணி கையிருப்பு$279,000,000 (திசம்பர் 2013)
'

2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 87.7 சதவீத நகர்ப்புற வீடுகளும், 18.9 சதவீத கிராமப்புற வீடுகளும் மின்வசதி பெற்றவையாக இருந்தன. இது ஒட்டுமொத்த சராசரி அளவில் 36.7 சதவீதமாகும்[5]

இந்தோனேசியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு இந்நாட்டினர் மேற்கொண்ட மிக நீண்ட பத்தாண்டுப் போராட்டத்தின் விளைவாக கிழக்கு திமோர் நாட்டின் உள்கட்டமைப்பு மிகவும் சீர்குலைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

2007 ஆம் ஆண்டில் நாடு சந்தித்த மிகக் குறைவான விளைச்சலால், கிழக்கு திமோரில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதே ஆண்டு நவம்பர் மாதத்தில் 11 துணை மாவட்ட மக்களுக்கு அனைத்துலக நிதி உதவியில் இருந்து உணவு வழங்க வேண்டியிருந்தது.[6] மேலும் திமோர் நாட்டிற்கான தனித்துவம் மிக்க காக்கும் சட்டங்கள் ஏதுமில்லை[7]

வரலாறு

தொகு

குடியேற்றத்திற்கு முன்பும் குடியேற்ற காலத்திலும் இத்திமோர் தீவு சந்தன மரங்களுக்கு மிகவும் புகழ்வாய்ந்த தீவாக இருந்தது. போர்த்துகீசியக் காலனித்துவ நிர்வாகம் கிழக்கு திமோரில் வைப்புத் தொகைகளை பெருக்கும் நோக்கில் உருவாக்க கடலாய்வுப் பயண கூட்டுத்தாபனத்திற்கு பல சலுகைகளை வழங்கியது. 1976 ஆம் ஆண்டில் இந்தோனேசியப் படையெடுப்பின் போது வைப்புத்திட்டம் பெரிதும் குறைந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையில் நிகழ்ந்த திமோர் பிரிவு உச்சிமாநாட்டில் இரண்டு நாடுகளும் திமோரின் வளங்களை பாகம் பிரித்துக் கொண்டன.[8] 1972 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி போர்த்துகீசியர்கள் திமோருக்காக விட்டுச் சென்ற கடலெல்லை வளங்களை சுரண்டிக் கொள்ளவும் மேற்கண்ட மாநாடு வழிகாட்டுதல்களை வழங்கியது[9].இணைப்புப் பகுதி வருவாயை ஆளுக்கு 50 சதவீதம் என்ற அளவில் அவை பங்கிட்டுக் கொண்டன.

1999 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 70 சதவீத கிழக்கு திமோரின் பொருளாதார உள்கட்டமைப்புகள் இந்தோனேசியப் படைகளாலும் சுதந்திர எதிர்ப்பு இராணுவத்தாலும் அழிக்கப்பட்டன[1]. 2,60,000 பொதுமக்கள் மேற்கு திசை நோக்கி இடம்பெயர்ந்தனர். 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் அவை மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டன. 50000 அகதிகள் நாடு திரும்பினர்.

வளர்ச்சித் திட்டங்கள்

தொகு

எண்ணெய் மற்றும் வாயு

தொகு

ஆத்திரேலியாவுடனான பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் திட்டம் ஒரு நம்பிக்கைக்குரிய நீண்ட கால திட்டமாக உள்ளது. தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு திமோரின் நீர்ப்பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 East Timor உலகத் தரவுநூலில் இருந்து
  2. 2.0 2.1 Timor Leste, The World Bank data
  3. Timor Leste – World Bank
  4. 4.0 4.1 "- Human Development Reports". பார்க்கப்பட்ட நாள் 4 March 2015.
  5. "Highlights of the 2010 Census Main Results in Timor-Leste" (PDF). Direcção Nacional de Estatística. Archived from the original (PDF) on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
  6. Voice of America, 24.06.07, East Timor Facing Food Crisis பரணிடப்பட்டது 2007-07-14 at the வந்தவழி இயந்திரம் and Ministry of Agriculture, Forestry and Fisheries of Timor-Leste
  7. "Gazetteer - Patents". Billanderson.com.au. Archived from the original on 26 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "TIMOR GAP TREATY between Australia and the Republic of Indonesia on the Zone of cooperation in an area between the Indonesian Province of East Timor and Northern Australia". Archived from the original on 16 ஜூன் 2005. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "Radio Australia". Archived from the original on 2 ஜனவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)