முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிழக்கு நியூ பிரிட்டன் (East New Britain) பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் நியூ பிரிட்டன் தீவின் வடகிழக்குப் பகுதியும், டியூக் ஒஃப் யோக் தீவுகளும் அடங்கியுள்ளன. 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் எரிமலை வெடிப்பினால் இதன் தலைநகரமாக இருந்த ரபாவுல் முற்றாக அழிந்ததை அடுத்து அதன் அருகில் இருந்த கொக்கோப்போ நகரம் புதிய தலைநகராக்கப்பட்டது. இம்மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு 15,816 சதுரகிமீ ஆகும், 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 220,133 ஆகும், இது 2011 கணக்கெடுப்பில் 328,369 ஆக உயர்ந்தது.[1]

கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்
East New Britain Province
கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம் East New Britain Province-இன் கொடி
கொடி
பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்
பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணம்
நாடுபப்புவா நியூ கினி
நிறுவல்1976
தலைநகர்கொக்கோப்போ
மாகாணங்கள்
அரசு
 • ஆளுனர்லியோ டயன் (2000- )
பரப்பளவு
 • மொத்தம்15,724
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்3,28,369
 • அடர்த்தி21
நேர வலயம்ஆநேவ (ஒசநே+10)
இணையதளம்www.eastnewbritain.gov.pg

பதினாறு ஆஸ்திரோனீசிய மொழிகள் இம்மாகாணத்தில் பேசப்படுகின்றன. இவற்றில் கசெல் குடாவில் வாழும் தொலாய் மக்களால் பேசப்படும் குவானுவா மொழி முக்கிய மொழியாகும். கொக்கோ, கொப்பரை ஆகிய பயிர்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுலாத்துறை இம்மாகாணத்தின் ஒரு முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாகும்.

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு