நியூ பிரிட்டன்

நியூ பிரிட்டன் (New Britain, அல்லது Niu Briten) என்பது பப்புவா நியூ கினியின் பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். நியூ பிரிட்டன் தீவு நியூ கினி தீவை டாம்ப்பியர் நீரிணை, வித்தியாசு நீரிணை ஆகியவற்றாலும், நியூ அயர்லாந்து தீவை செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயாலும் பிரிக்கிறது. நியூ பிரிட்டனின் முக்கிய நகரங்கள் இராபோல்/கொக்கொப்போ, கிம்பே ஆகியனவாகும். இத்தீவு செருமனிய நியூ கினியின் கீழ் இருந்த போது "நியூபொம்மர்ன்" (Neupommern) என அழைக்கப்பட்டது.

நியூ பிரிட்டன்
New Britain
புவியியல்
ஆள்கூறுகள்5°44′S 150°44′E / 5.733°S 150.733°E / -5.733; 150.733
தீவுக்கூட்டம்பிசுமார்க் தீவுக்கூட்டம்
பரப்பளவு36,520 km2 (14,100 sq mi)[1]
பரப்பளவின்படி, தரவரிசை38வது
நீளம்520 km (323 mi)
அகலம்146 km (90.7 mi)
உயர்ந்த ஏற்றம்2,438 m (7,999 ft)
உயர்ந்த புள்ளிசினெவிட் குன்று
நிர்வாகம்
பப்புவா நியூ கினி
மக்கள்
மக்கள்தொகை513,926 (2011)
அடர்த்தி14.07 /km2 (36.44 /sq mi)
இனக்குழுக்கள்பப்புவான்கள், ஆத்திரனேசியர்கள்

வரலாறு தொகு

1700–1914 தொகு

1700 பெப்ரவரி 27 இல் வில்லியம் டாம்பியர் என்பவரே நியூ பிரிட்டன் தீவுக்கு வந்த முதலாவது ஐரோப்பியர் என நம்பப்படுகிறது. அவர் இத்தீவுக்கு "நோவா பிரித்தானியா" (Nova Britannia) எனப் பெயரிட்டார். 1884 நவம்பரில், செருமனி நியூ பிரிட்டன் தீவுகளை தனது காப்பரசாக அறிவித்து, நியூ பிரிட்டனுக்கு நியூபொம்மென் (Neupommern) எனவும், நியூ அயர்லாந்து தீவுக்கு நியூமெக்கிலென்பெர்கு (Neumecklenburg) எனவும் பெயரிட்டது. முழுத் தீவுக் கூட்டத்துக்கும் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் இன் நினைவாக பிசுமார்க்கு தீவுக்கூட்டம் எனப் பெயரிடப்பட்டது.

1909 ஆம் ஆண்டில் இத்தீவின் பழங்குடியினரின் எண்ணிக்கை 190,000 என மதிப்பிடப்பட்டது. வெளிநாட்டவர் 773 பேர். இவர்களில் 474 பேர் வெள்ளையினத்தவர்கள். வெளிநாட்டவர் பொதுவாக வடகிழக்கு கசெல் குடாவில் வசித்து வந்தனர். அப்பகுதியிலேயே இன்றைய தலைநகர் கொக்கோப்போ உள்ளது.

முதலாம் உலகப் போர் தொகு

1914 செப்டம்பர் 11 இல் முதல் உலகப் போர்த் தொடக்கக் காலத்தில் ஆத்திரேலியாவின் கடற்படையினர் நியூ பிரிட்டனில் தரையிறங்கினர். அங்கிருந்த செருமனியப் படையினரை மிக விரைவில் வெற்றி கொண்டு போர் முடியும் வரை தமது தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். 1920 ஆம் ஆண்டில் நியூ பிரிட்டன் உட்பட நியூ கினியில் அமைந்திருந்த செருமனியக் குடியேற்றப் பகுதிகள் அனைத்தும் ஆத்திரேலியாவின் பகுதிகள் என உலக நாடுகள் சங்கம் அறிவித்தது.

இரண்டாம் உலகப் போர் தொகு

 
Tநியூ பிரிட்டன் பழங்குடியினர், 1944

இரண்டாம் உலகப் போரின் போது, பசிபிக் பெருங்கடலில் போர் ஆரம்பித்தவுடனேயே சப்பானியர் நியூ பிரிட்டனைத் தாக்க ஆரம்பித்தனர். ரபாவுல், காவியெங் (நியூ அயர்லாந்து) ஆகிய இடங்களில் இருந்த ஆத்திரேலியப் படைத் தளங்களில் சிறிய ஆத்திரேலிய லார்க் படைப் பிரிவு {Lark force) நிலை கொண்டிருந்தது. 1942 சனவரியில் சப்பானியர் ரபாவுலில் குண்டுகளைப் பொழிந்தார்கள். சனவரி 23 இல் சப்பானியக் கடற்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரபாவுலில் தரையிறங்கினர். 1944 வரை சப்பானியர் ரபாவுலைத் தமது முக்கிய தளமாகப் பயன்படுத்தினர்.

ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கடற்படைப் பிரிவு நியூ பிரிட்டனை அதன் மேற்கு முனையான கேப் குளொஸ்டர் என்ற இடத்தில் தாக்கியது. அதே வேளையில் அமெரிக்கத் தரைப்படையும் ஏனைய கரையோரப் பகுதிகளில் இறங்கித் தாக்கினர். வான்தளத்தை அவர்கள் கைப்பற்றினாலும், ரபாவுல் சப்பானியத் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. 1943-44 காலப்பகுதியில் கூட்டுப் படையினர் ரபாவுலை சுற்றி வளைத்துத் தாக்கினர்.[2]

புவியியல் தொகு

 
நியூ பிரிட்டனின் இட அமைப்பியல்
 
நியூ பிரிட்டன் தீவில் நகரங்களும், எரிமலைகளும்

நியூ பிரிட்டன் தீவு அதன் தென்கிழக்குக் கரையோரம் வழியே அண்ணளவாக 520 கிமீ நீளமும், 29 முதல் 146 கிமீ அகலமும் கொண்டது. இதன் நடுவே சிறிய குடா ஒன்று அமைந்துள்ளது. மேற்கில் இருந்து கிழக்கு வரையான வான்-வெளித் தூரம் 477 கிமீ ஆகும். இதன் பரப்பளவு 36,520 சதுரகிமீ ஆகும். இது உலகின் 38வது பெரிய தீவாகும். பெரும்பகுதியான நிலப்பரப்பு வெப்பமண்டல மலைக்காட்டினால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும் ஆறுகள் அதிகளவிலான மழைவீழ்ச்சியினால் நிரப்பப்படுகின்றன.

இத்தீவில் பல செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. உலாவுன், லாங்கிலா, கர்புனா கூட்டம், சுளு தொடர், தவுர்வூர், வுல்க்கான் ஆகியன இவற்றுள் சிலவாகும். 1994 ஆம் ஆண்டில் தவுரூர் எரிமலை வெடித்த போது கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் ரபாவுல் பெரும் அழிவைச் சந்தித்தது. இந்நகரில் தற்போதும் பல மீட்டர்கள் தூசுகள் படிந்துள்ளன. இவ்வழிவை அடுத்து மாகாணத் தலைநகரம் அருகிலுள்ள கொக்கோப்போவிற்கு மாற்றப்பட்டது.

நிருவாக அலகுகள் தொகு

நியூ பிரிட்டன் தீவில் பப்புவா நியூ கினியின் இரண்டு மாகாணங்கள் அமைந்துள்ளன:

மேற்கோள்களும் உசாத்துணைகளும் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-01. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  2. "Operations Against the Japanese on Arundel and Sagekarsa Islands". உலக மின்னூலகம். பார்க்கப்பட்ட நாள் 11 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_பிரிட்டன்&oldid=3791882" இலிருந்து மீள்விக்கப்பட்டது