கிழித்த கோடு (நூல்)

கிழித்த கோடு, கவிஞர் மு. மேத்தா எழுதிய ஒரு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு நூல். இந்நூலாசிரியர் எழுதிப் பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த பன்னிரண்டு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையில் தலைப்பைத் தழுவி இந்நூலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

கிழித்த கோடு
நூலாசிரியர்கவிஞர் மு. மேத்தா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைசிறுகதை
வெளியீட்டாளர்கவிதா பப்ளிகேஷன்
வெளியிடப்பட்ட நாள்
1992
பக்கங்கள்128

நூலின் நோக்கம்

தொகு

கவிஞர் மேத்தா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

சின்ன வயதிலேயே
என்னைப்
பெரிய எழுத்தாளன்
என்று
பெருமை கொண்டாடிய
அப்பாவுக்கும்
அம்மாவுக்கும்.

உள்ளடக்கம்

தொகு
  1. இந்தச் செடி மறுபடியும் பூக்குமா?
  2. அது ஒரு கிழமை
  3. வார்த்தை வரம்
  4. நானொரு நாடகம் பார்க்கிறேன்
  5. கிழித்த கோடு
  6. அவளும் நட்சத்திரம்தான்...
  7. தூபக்கால்
  8. மும்தாஜைத் தேடும் தாஜ்மகால்
  9. காலுக்குச் செருப்பு
  10. அவள் ஒரு சிறுகதை
  11. தாலாட்டு ஓய்வதில்லை
  12. சத்தியத்திற்குச் சோதனை

வெளிவந்த இதழ்கள்

தொகு

இந்நூல் தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன், அலிபாபா, கலைமகள், கண்ணதாசன் போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்த மேத்தாவின் சிறுகதைகளின் தொகுப்பாகும்.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழித்த_கோடு_(நூல்)&oldid=1895251" இலிருந்து மீள்விக்கப்பட்டது