கீதா சித்தார்த்

இந்திய நடிகை

கீதா சித்தார்த் (Gita Siddharth) (7 ஆகஸ்ட் 1950 - 14 டிசம்பர் 2019) ஒரு இந்திய நடிகையும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இவர் முக்கிய பாலிவுட் மற்றும் பரிச்சாய் (1972), கர்ம் ஹவா (1973), மற்றும் கமன் (1978) போன்ற கலைத் திரைப்படங்களில் நடித்தார்.

கீதா சித்தார்த்
Gita Siddharth
பிறப்பு(1950-08-07)7 ஆகத்து 1950
இறப்பு(2019-12-14)14 திசம்பர் 2019
பணிநடிகை, சமூக ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
1972–2019
வாழ்க்கைத்
துணை
சித்தார்த் கக்
பிள்ளைகள்அந்தரா கக்

21வது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் எம். எஸ். சத்யுவின் கர்ம் ஹவா (1973) திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானார். அந்தத் திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. மேலும் கீதாவும் முன்னணி நடிகையாக ஒரு நினைவுப் பரிசைப் பெற்றார்.[1][2]

கீதா, இந்திய ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் மற்றும் தொகுப்பாளருமான சித்தார்த் கக் என்பவரை மணந்தார். சித்தார்த் 1990களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட சுரபி என்ற கலாச்சார நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் வழங்குநர் என்று நன்கு அறியப்பட்டவர். இவர்களது மகள் அந்தரா கக்கும் ஒரு ஆவணப்பட தயாரிப்பாளர்.[3] கீதா அந்த நிகழ்ச்சியின் கலை இயக்குனராகவும் இருந்தார்.[4] கீதா 14 டிசம்பர் 2019 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "21st National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 1 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011.
  2. "21st National Film Awards (PDF)" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 4 April 2012. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011.
  3. IANS (15 December 2019). "Parichay Actress Gita Siddharth Kak Dies". NDTV.com. https://www.ndtv.com/entertainment/parichay-actress-gita-siddharth-kak-dies-2149030. 
  4. "Board of Trustees of the Surabhi Foundation". Surabhi Foundation website. Archived from the original on 15 September 2013. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_சித்தார்த்&oldid=4114748" இலிருந்து மீள்விக்கப்பட்டது