கீதா தர்மராஜன்

கீதா தர்மராஜன்(Geeta Dharmarajan) ஓர் எழுத்தாளர், ஆசிரியர், கல்வியாளர் மற்றும் 1988 இல் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான கதாவின் நிர்வாக இயக்குநர் ஆவார்.இந்த நிறுவனம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக செயல்படுகிறது.

கதா [1][2] 1989 இல் டெல்லியில் அமைந்துள்ள ஒரு பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற மற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகும். கதா நிறுவனம் ஆசிரியர் பயிற்சி, குழந்தைகள் கல்வி மற்றும் இலக்கியம் தொடர்பான செயல்களில் ஈடுபடுகிறது.இந்தியா முழுவதும் சிறப்புரிமை அல்லாத பகுதிகளில் செயல்படுகிறது.

தர்மராஜனின் தொழில்முறை தலையங்க அனுபவமானது, டார்கெட் எனும் குழந்தைகள் இதழில் தொடங்கியது பின்னர் இவர், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் விருது பெற்ற முன்னாள் மாணவர் இதழான தி பென்சில்வேனியா கெஸெட்டில் பணியாற்றினார். கீதா 30 இற்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கியம் மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்களில் 450 இற்கும் மேற்பட்ட துனுக்குகளில் வெளியாகின. 2012 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கியது .[3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கீதா தர்மராஜன் 1948 இல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் பிறந்தார்[4] இவரது தந்தை என். கிருஷ்ணமூர்த்தி[5] ஒரு மருத்துவர் மற்றும் ஒவ்வாமை நிபுணர் இவரது தாயார் கல்யாணி கிருஷ்ணமூர்த்தி ஒரு கவிஞர்[6] மற்றும் கருநாடகப் பாடல்களை இயற்றுபவர் ஆவார்.[7] இவர் தனது ஏழு வயதிலேயே பாரம்பரிய பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை கற்கத் தொடங்கினார்.இவர் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.

கதா புத்தகங்கள்

தொகு

கதா பரிசுக் கதைகளை உள்ளடக்கிய கதையின் பட்டியலின் தலைமை ஆசிரியராக உள்ளார்.[8] இவர் இந்தியாவின் 300 க்கும் மேற்பட்ட சிறந்த இலக்கிய திறமைகளின் கதைகளைத் திருத்தம் செய்யும் பொறுப்பினை மேற்கொண்டுள்ளார். 21 இந்திய மொழிகளில் எழுதினார். கதா புத்தகங்கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமகால இந்திய புனைகதைகளின் தொகுப்பு ஆகும்.[9] கதா இந்தியாவின் பல வாய்வழி மற்றும் எழுதப்பட்ட மரபுகளிலிருந்து 0 - 17 வயதுடைய குழந்தைகளுக்கான படைப்புகளை வழங்குகிறது. இலக்கியத்தினை சிறப்பிக்கும் வகையில் கதா திருவிழாக்களை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் இலக்கியப் படைப்புகளை பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். கதா திருவிழாக்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அறிஞர்கள், விமர்சகர்கள், கதைசொல்லிகள் மற்றும் சமகால கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான சந்திப்பு இடங்களை உருவாக்குகின்றன.[10] கீதா , இந்தியாவில் 500 பள்ளிகளில் நிறுவப்பட்ட கூட்டுறவுகளுடன் இணைந்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கான எழுத்தாளர் பட்டறையினை வழிநடத்தினார்,[11][12]

கதா பள்ளிகள்

தொகு

கதா ஆய்வகப் பள்ளி 1990 இல் ஐந்து குழந்தைகளுடன் தொடங்கியது.[13] இன்று அது படைப்பாற்றல் மையமாக உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் தொழில் வல்லுநர்களை உருவாக்குகிறது, அவர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிக்கும் தொழில்முனைவோராக மாறுகிறார்கள் அல்லது உயர் படிப்புக்கு செல்கிறார்கள். கதாவின் 80% க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்லூரிக்குச் செல்கிறார்கள். இதனை சமீபத்தில் வேல்ஸ் இளவரசர் பார்வையிட்டார்.[14][15]

விருதுகள், கௌரவங்கள்

தொகு

2012 ஆம் ஆண்டில் இந்திய அரசின் குடிமை விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மில்லீனியம் அலயன்ஸ் இன்னவேட்டர் விருது, ஸ்டாக்ஹோம் விருதினை 2001 ஆம் ஆண்டில் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Katha, Official website". Katha. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  2. "A Katha of success" இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105130229/http://www.hindu.com/mp/2007/01/04/stories/2007010401080700.htm. 
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  4. "Dr KS Sanjivi Awards 2011 Presented". ciosa.org.in. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Dr KS Sanjivi Awards 2011 Presented". ciosa.org.in. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 11 VIRUTAM composition of Smt. Kalyani Krishnaswamy. YouTube. 19 March 2012. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
  7. "Naad Anunaad - RadioWeb Carnatic". radioweb.in. Archived from the original on 4 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Katha. "Katha Prize Stories". kathaprizestories.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
  9. "Katha Books For Children" (PDF). Archived from the original (PDF) on 2016-11-20. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  10. "A Beautiful Story". http://www.thehindu.com/features/metroplus/society/beautiful-story/article5124256.ece. 
  11. "CENTRAL BOARD OF SECONDARY EDUCATION" (PDF). Archived from the original (PDF) on 10 December 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2014.
  12. Hansika Chopra. "Budding writers". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
  13. "Teaching in the Asian century". unimelb.edu.au. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
  14. British Asian Trust President, HRH The Prince of Wales, visits .
  15. "Prince Charles at the Katha Lab school in New Delhi - Prince Charles & Camilla Parker during nine-day visit to India - The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_தர்மராஜன்&oldid=4162514" இலிருந்து மீள்விக்கப்பட்டது