கீதா முகர்ஜி

இந்திய அரசியல்வாதி

கீதா முகர்ஜி (Geeta Mukharjee, 8 ஜனவரி 1924-4 மார்ச் 2000) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இவர் 1967 முதல் 1977 வரை பன்சுகுரா புர்பா தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1980 முதல் 2000 வரை மேற்கு வங்காளத்தின் பன்ஸ்குரா தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மகளிர் பிரிவான இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.[2]

கீதா முகர்ஜி
Geeta Mukherjee
பன்சுகுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 ஜனவரி 1980 – 4 மார்ச் 2000
முன்னையவர்அபா மைத்தி
பின்னவர்பிக்ரம் சர்க்கார்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1977
முன்னையவர்இரஜினி காந்தா பிரமாணிக்
பின்னவர்சுவதேசு ரஞ்சன் மாஜி
தொகுதிபன்சுகுரா புர்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1924-01-08)8 சனவரி 1924
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 மார்ச்சு 2000(2000-03-04) (அகவை 76)
புது தில்லி, இந்தியா
தேசியம்Indian
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்விசுவநாத் முகர்ஜி
பிள்ளைகள்பகாபத் ஜனா
உறவினர்கள்மதுமிதா (பேத்தி)
வாழிடம்கொல்கத்தா
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்
அசுதோஷ் கல்லூரி (இளங்கலை)
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர், எழுத்தாளர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கீதா ஜனவரி 8,1924 அன்று மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்தார். 1942 நவம்பர் 8 அன்று விசுவநாத் முகர்ஜி என்பவரை மணந்தார்.[1]

கீதா முகர்ஜி கொல்கத்தாவிலுள்ள அசுதோஷ் கல்லூரியில் வங்காள இலக்கியத்தில் இளங்கலை கலை பட்டம் பெற்றவர். 1947 முதல் 1951 வரை வங்காள மாகாண மாணவர் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்தார்.[2]

தொழில் வாழ்க்கை

தொகு

கீதா முதன்முதலில் 1946 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வங்காள மாநில அமைப்பின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] கீதாடி என்று பிரபலமாக அறியப்பட்ட கீதா முகர்ஜி, அப்போதிருந்து ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் மேற்கு வங்கத்தின் பன்சுகுரா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.[2]

1981 முதல், இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார்.[1]

1999 ஆம் ஆண்டில் 13 வது மக்களவையின் போது இவர் 7 வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவரது தொழில் வாழ்க்கை சுமார் ஐந்தரை தசாப்தங்கள் நீடித்தது. இருப்பினும், பெண்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் இவரது பங்கு தான் இவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. தேசிய ஊரக தொழிலாளர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் வாரியம், பத்திரிகை மன்றம் மற்றும் தேசிய மகளிர் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், பெர்லினில் உள்ள மகளிர் சர்வதேச ஜனநாயக கூட்டமைப்பின் செயலக உறுப்பினராகவும் இருந்தார்.[3] பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை உருவாக்கிய கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு கீதா தலைமை தாங்கினார்.

தனது அரசியல் வாழ்க்கையைத் தவிர, குழந்தைகளுக்காக சில புத்தகங்களையும் எழுதினார். மேலும் புருனோ அபிட்ஸின் 1958 ஆம் ஆண்டின் உன்னதமான நேக்கட் அமாங் வோல்வ்ஸ் என்ற புத்தகத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார்.[2][4]

இறப்பு

தொகு

கீதா முகர்ஜி மார்ச் 4,2000 அன்று ஒரு இதய செயலிலப்பு காரணமாக தனது 76 வயதில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha". Archived from the original on 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Geeta Mukherjee passes away". தி இந்து. 5 March 2000. Archived from the original on 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
  3. "Geeta Mukherjee-Committed to the cause". Archived from the original on 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
  4. "A committed fighter". The Hindu, Frontline. 18–31 Mar 2000. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_முகர்ஜி&oldid=4008841" இலிருந்து மீள்விக்கப்பட்டது