விசுவநாத் முகர்ஜி
விசுவநாத் முகர்ஜி (Biswanath Mukherjee, 17 ஏப்ரல் 1915 – 16 அக்டோபர் 1991) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 1971 ஆம் ஆண்டில் மிட்னாபூர் 1977 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் தம்லக் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
விசுவநாத் முகர்ஜி Biswanath Mukherjee | |
---|---|
அமைச்சர், மேற்கு வங்காள அரசு | |
பதவியில் 1982–1987 | |
அமைச்சகம் | நீர்ப்பாசனம், நீர் விசாரணை மற்றும் மேம்பாட்டுத் துறை |
மேற்கு வங்காள சட்டப்பேரவையின் உறுப்பினர் | |
பதவியில் 1977–1987 | |
முன்னையவர் | அஜய் முகர்ஜி |
பின்னவர் | சுராஜித் சரண் பாக்சி |
தொகுதி | தம்லக் |
மேற்கு வங்காள சட்டப்பேரவையின் உறுப்பினர் | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | காமாக்யா சரண் கோசு |
பின்னவர் | பங்கிம் பெகாரி பால் |
தொகுதி | மிட்னாப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தம்லக், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் | 17 ஏப்ரல் 1915
இறப்பு | 16 அக்டோபர் 1991 கொல்கத்தா, இந்தியா | (அகவை 76)
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | கீதா முகர்ஜி |
பிள்ளைகள் | 1 மகன் (1949 இறந்து போனார்) பகவத்பட் ஜானா (தத்தெடுத்தார்) |
உறவினர் | மதுமிதா ஜானா (பேத்தி) |
வாழிடம்(s) | பாவ் பசார், கொல்கத்தா |
முன்னாள் கல்லூரி | வித்யாசாகர் கல்லூரி இளங்கலை |
இவர் தனது மாணவப் பருவத்திலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். வங்காளத்தில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் அதன் இணை செயலாளராகவும் இருந்தார்.[3] 1938 ஆம் ஆண்டில், சியாமா பிரசாத் முகர்ஜியால் வழிநடத்தப்பட்ட கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பிரித்தானிய கொடியை வணங்க மறுத்தனர். இதனால் பிரித்தானிய இந்திய அரசு அவர்களின் கல்வியை தடை செய்தது. இத்தடையை ரத்து செய்ய மாபெரும் மாணவர் இயக்கத்தை பிசுவநாத் வழிநடத்தினார்.[4]
இவர் கீதா முகர்ஜி என்பவரை நவம்பர் 8,1942 அன்று மணந்தார்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
- ↑ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
- ↑ Gupta, Susmita Sen (2009). Radical Politics in Meghalaya: Problems and Prospects. Kalpaz Publications. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-742-3.
- ↑ "HISTORIC CONTRIBUTION". AISF Official.
- ↑ "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha". Archived from the original on 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
- ↑ "A committed fighter". frontline.thehindu.com.